Monday 15 June 2020

MAKE HIM COME TO YOU

A reader of this blog shared a wonderful story that was shared with him. I have given a translation below. 

A guru asked a new student, "What is the aim of Spirituality?"

Student: "To know God."

Guru: "Is that so!"

Student: "Isn't that so?"

Guru: "Okay. Has all the years of sadhana brought you to know God?"

Student: "No. But I am trying."

Guru: "Good.. Do you really believe that you can get to know God?"

The student thought for a moment and replied, "I believe!... But I have my doubts too."

Guru: "Why do you doubt yourself?"

Student: "People talk of different Gods. When we go into it we come out more confused!"

Guru: "Good..I like that you speak the truth. Now I shall phrase it differently. Do you want to know God and reach him too?"

Student: "Yes"

Guru: "You have taken up certain practices on your own initiative, right?"

Student: "Yes"

Guru: "I shall teach you an alternative way to reach God."

Student: "Thank you. I was waiting for this."

Guru: "But in this way, you cannot reach God. On the contrary, God shall come to you."

Student: "This is confusing."

Guru: "No confusion at all. Let us say there is a king. He is king to many thousands of subjects. It is not easy to have an audience with him, speak to him, or to know him. It might even be impossible."

Student: "Yes"

Guru: "But a subject who wanted to meet the king did a wonderful thing. He does service and does things that brought benefit to the fellow-subjects. This news reached the king. The king might ask to see this subject of his or go to him. He would praise him. He might gift his subject too. This could happen, right?" 

Student: "It could."

Guru: "Now let us assume the king is God. You are the subject. By whatever means you attempt to get an audience it might be difficult. But when your efforts are towards the good of his subjects, God takes notice. He comes to visit you. Hence let go of your attempt to see God. Bring yourself to do things that capture the attention of God. God will come to you. Right?

Student: "Absolutely right."

Guru: "Good. You shall be spiritually born. Go now."

The student leaves his Guru now fully enlightened.

புதிதாக தன்னிடம் வந்து சேர்ந்த சீடனிடம் குரு கேட்டார், “ஆன்மிகத்தின் நோக்கம் என்ன என்று சொல்ல முடியுமா?”

புதிய சீடன், “இறைவனை அறிவது தான், அடைவது தான் ஆன்மிகத்தின் நோக்கம்...”

“அப்படியா?”

“என்ன அப்படியா என்று கேட்கிறீர்கள்... அப்படித்தானே இருக்க முடியும்?”

“சரி. இத்தனை நாள் ஆன்மிகத்தில் சாதகம் செய்து வருகிறாயே இறைவனை அறிந்தாயோ?”

“இல்லை. ஆனால் முயன்று கொண்டிருக்கிறேன்.”

“நல்லது... உண்மையிலேயே இறைவனை அறிந்து கொண்டுவிட முடியும் என்று நம்புகிறாயா?”

சீடன் சற்றே யோசித்துவிட்டுச் சொன்னான்.

“நம்புகிறேன்... இருப்பினும், கொஞ்சம் சந்தேகமாகவே இருக்கிறது.”

“எதனால் இந்த சந்தேகம் வருகிறது?”

“பலர் பலவிதமாக இறைவனைப் பற்றிச் சொல்கிறார்கள். மிகவும் ஆராய்ந்து பார்த்தால் தெளிவை விடக் குழப்பமே மிஞ்சுகிறது.”

“நல்லது... எப்போது நீ உள்ளது உள்ளபடி சொன்னாயோ அதுவே நல்லது. சீடனே, இப்போது நான் வேறு விதமாகக் கேட்கிறேன். நீ ஆண்டவனைத் தெரிந்துகொள்ள, அடைய விரும்புகிறாயா...?”

“ஆமாம் குருவே.”

“உன் விருப்பத்தின் காரணமாகத்தான் நீ ஆன்மிகப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறாய். அப்படித்தானே?”

“ஆமாம் குருவே.”

“அன்புள்ள சீடனே! நீ இறைவனைத் அடைய, ஓர் எளிமையான மாற்று வழியைச் சொல்லித் தருகிறேன்...”

“மிகவும் சந்தோஷம் குருவே. இந்த வழிக்காகத்தான் நான் காத்துக்கொண்டிருக்கிறேன்.”

“ஆனால் இந்த வழியில் நீ இறைவனை அடைய முடியாது. ஆனால் இறைவன் உன்னை வந்து அடைவான்.”

“இது குழப்பமாக இருக்கிறதே.”

“ஒரு குழப்பமும் இல்லை... ஒரு அரசன் இருக்கிறான். பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு அவன் ராஜா. அவன் அருகே நெருங்குவதோ பேசுவதோ அறிவதோ எளிமையான விஷயம் அல்ல. முடியவும் முடியாது.”

“ஆம்.”

“ஆனால் ராஜாவை சந்திக்க வேண்டும் என்கிற பிரஜை, ஓர் அருமையான காரியத்தைச் செய்கிறான்...அவன் தேசத்தில் உள்ள மக்கள் எல்லோருக்கும் பயன்படும்படியாக உழைக்கிறான். பல அறச் செயல்களைச் செய்கிறான். இந்தச் செய்தி ராஜாவுக்குப் போகிறது.

உடனே ராஜா பிரதிநிதிகளை அனுப்பி தன் அரசவைக்கு அவனை வரவழைக்கிறார். அல்லது அவரே நேரில் அவனைப் பார்க்க வருகிறார். அவனோடு உரையாடுகிறார். பாராட்டுகிறார். பரிசுகள் தருகிறார். இது நடக்கும் இல்லையா?”

“நடக்கும் குருவே.”

“இப்போது ராஜாதான் இறைவன். நீதான் அவன். நீ என்ன முயற்சி செய்தாலும் ராஜாவைப் நெருங்குவது கஷ்டம். ஆனால் உன் செயல்கள் பலருக்கும் பயனுடையதாக இருந்தால் அந்த ராஜாவே உன்னைப் பார்க்க வருவார். எனவே, இறைவனைப் பார்க்கும் முயற்சியைக் கைவிடு. இறைவன் உன்னைத் தேடி வரும் தகுதியான செயல்களில் ஈடுபடு... இறைவனே உன்னை வந்து அடைவான்... சரிதானே...?”

“மிகவும் சரிதான் குருவே...”

“நல்லது சீடனே, இனி ஆன்மிகம் உனக்குப் கை கூடும். போய் வா...”

சீடன் தெளிவடைந்து குருவிற்கு நன்றி தெரிவித்தான்...