Wednesday 6 January 2016

A NOTE OF THANKS

My AVM family came out in full force to appreciate this blog, after reading my last post on my gratitude and appreciation to all these wonderful souls at AVM. Their comments shared in our Whatsapp group AVM brought tears of joy to me and my wife.

I share with joy their wonderful writings, with readers of this blog. 

After reading the last post 'The Many Talented Devotees at AVM' at http://agathiyarvanam.blogspot.my/2016/01/the-many-talented-devotees-at-avm.html Rakesh Krishna wrote the following:

அய்யா. வணக்கம். 

தங்களின் எண்ண பதிவை படித்த பிறகு..
என் சிந்தனை துளிகளை இங்கு சமர்பிக்கிறேன். 
அகத்தியர் இங்கே நம்மை அன்பால் ஈர்த்தார். 
ஈர்த்து விட்டால் போதுமா? 
ஆட்கொள்ள வேண்டும்.
ஆட்கொண்டாள்தான் நம் இன்னும் அவரோடு நெருக்கமாகி, உறவு கொள்ள முடியும்.
அவ்வாறு ஆட்கொண்ட உறவுகள் பற்றி என் எண்ண பதிவுகள். 
பிழை இருப்பின் பொறுத்து அருள்க.!

-அகத்தியர் ஆட்கொண்ட உறவுகள் -
  • பால சந்திரன் குணசேகரன் - தூரிகையின் துணைவன்..ஒவ்வொன்றும் அழகு.
  • த்யாளேன் முனியாண்டி - வண்ணப்படங்களின் வித்தகர்
  • கௌரி ஆர்.வரதன் - கிரியா ஊக்கி
  • மஹிந்திரன்-பாடல்களின் ஓவியன்
  • மூன்று மழலைகள் மற்றும் பிரபா,விமலா - இசை தூண்கள்
  • சரவணன் பழனிச்சாமி - அருள் ஞான கவிதையார் மற்றும் வரைகலை வித்தகர்
  • சங்க மாணிக்கம் - கதை சொல்லி,பயண கதையாளர்
  • ஸ்ரீ பாலசந்தர் & ஸ்ரீமதி சாந்தி பாலசந்தர் - நாவுக்கரசர்கள்
  • ஸ்டாலின் - பூசை வரைபட வித்தகர்.
வேறு யாரேனும் விடு பட்டிருந்தால் என்னை மன்னிக்கவும்.
நம் குழுவில் இருந்து, செய்திகளை படித்து பின்பற்றினாலே...
நம்மை நம் அப்பா ஆட்கொள்ளுவார்.

ஓம் அகத்தீசாய நம 

அவர் அருளாலே அவர் தாள் வணங்கி..

அந்த ஒற்றை பதிவு ஓராயிரம் செய்திகள்
ஒவ்வொன்றும் ஒரு விதம்
இயல் இசை நாடகம் யோகம் என பற்பல பிரம்மாக்கள்
இவை அனைத்தும் அகத்தியர் அன்பால்
சத்தியமே அகத்தியம் அகத்தியமே சத்தியம் 

இந்த பதிவு சொல்வது
அன்பே அகத்தியம் 
அன்பே சத்தியம்
அகத்தியர் வனமே அகத்தியம்.

சமைத்த சண்முகம் ஆவடையப்பா 
அய்யாவிற்கு நன்றிகள்.

தம் சொந்த வேலையின் ஊடே..வந்த வேலையை செய்து, பற்பல உயிர்கள் உய்ய பாடுபடும் அருமை உறவாம் சண்முகம் ஆவடையப்பா மற்றும் அவர் தம் அன்பு குடும்பத்தை வணங்கி, வாழ்த்தி மகிழ்கிறேன். நன்றி அய்யா.

ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி.போற்றி.

Rakesh had seen the post from a different perspective, something I did not realize until he wrote the above.

Bala Chandran Gunasekaran wrote:

உங்கள் எழுத்துகளைப் படித்தவர்களில் பலர் இன்று அகத்தீசனின் திருவடியைப் பிடித்திருக்கிறார்கள் .
கருத்துகளை , நிகழ்வுகளை , அனுபவங்களைக் கோர்வையாக எழுதுவதில் நீங்கள் திறமை வாய்ந்தவர் அண்ணா .
பலர் தெளிவடைய , உங்கள் எழுத்துகள் , உங்கள் கருத்துகள் , உங்கள் அணுகுமுறைகள் உதவி புரிந்திருக்கிறது . 
அவர்களில் நானும் ஒருவன் . 
அகத்தீசன் உங்கள் எழுத்துகளில் மலர்ந்திருப்பதைப் பல இடங்களில் கண்டோம் .

அகத்தியர் வனம் மலேசியா -

இங்கு வந்து பல ஆத்மாகள் சித்த மார்கத்தைத் தெரிந்துக் கொண்டோம் , 
அகத்தியனின் அருளைப் பெற்றோம் , 
அகத்தியனின் ஆற்றலை உணர்ந்தோம் , 
அகத்தியனின் அன்பு மழையில் நனைந்தோம் , 
கர்மாவின் தாக்கத்தைக் குறைத்துக் கொண்டோம் , 
வாழ்க்கையின் தேவையை தெரிந்து கொண்டோம் , 
உண்மை கண்டோம் .
இவை அனைத்தும் எங்களுக்கு , அகத்தீசன் உங்கள் மூலம் கொடுத்தார் .

அனைவரின் சார்பில், உங்களுக்கும் உங்களின் சக்தியாக இருக்கும் மகேஸ் அம்மாவுக்கும் கோடான கோடி நன்றிகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் . 

அகத்தியர் வனம் மலேசியா - 

நமக்கு ஆத்மா பந்தங்களைக் கொடுத்திருக்கிறது.
அகத்தியனின் வனத்தில் நம் அனைவரும் 
ஆத்மா பூக்களாக பூத்துக் குலுங்குகிறோம்.

இப்படிக்கு , 
கு. பாலசந்திரன் .

Mahin created a poster with the following words:

அறியாத பயணம் தொடர்ந்தோம் 
நெறிகள் தெளிந்த வழிகள் கண்டோம் 
வலிகள் யாவும் கடந்தோம் 
உகந்த முடிவாய் ஆசி பெற்றோம் 
பூக்கலாய் கோர்க பட்டோம் 
நறுமணமாய் வீச கண்டோம் 
அகத்தியர் பாதம் சேர்ந்தோம் 

உங்கள் இருவருக்கும் எங்களின் நன்றிகள்