When I began to document my maiden journey to India in 2003 and carried stories of my journey with Tavayogi later in 2005, Tavayogi was impressed and pleased that people with get to know and come to the path. Later Agathiyar asked me to document the internal changes since 2022 and their related experiences and share it with readers.
Last March, he gathered the womenfolk and had them carry out an exclusive Satsang session. He asked that they share their experiences among themselves. At the end of the Satsang, Agathiyar who sat and heard them share their experiences, spoke about the need to document such experiences.
"Everything that happens in your life is just an experience. See it as experience only. Don't become emotionally attached to it. (Ask yourself) What did the experience teach you? What did you learn? How do you feel about it? What changes are you going to make? If you take care of these questions, worldly life will not affect you. It only affects when you claim them as yours. It doesn't matter if it's seen as everyone's. Pain and suffering will do you no harm then."
உங்கள் வாழ்க்கையில் நடப்பவை அனைத்துமே அனுபவம் மட்டுமே. அனுபவமாக மட்டும் பாருங்கள். உணர்வு புறமாக அதற்கு அடிமை ஆகவேண்டாம். அனுபவம் உங்களுக்கு என்ன தந்தது? என்ன கற்று கொண்டீர்கள்? அதில் இருந்து என்ன உணர்ந்திர்கள்? என்ன மாற்றம் செய்ய போகிறீர்கள்? இதைமட்டுமே அறிந்துகொண்டு வந்தால் உலக வாழ்கை உங்களுக்கு எந்த பாதிப்பும் தராது. எனது என்று ஆகும்போது மட்டுமே அது பாதிக்கும். எலோருடையது என்றால் பாதிக்காது. அவர் அவர் பயணத்தை மட்டும் கவனித்து கொண்டு இருந்தால் வலிகளும் வேதனைகளும் உங்களை ஒன்றும் செய்யாது அல்லவா?
"Practice (Breathing and Asanas) regularly to protect yourself. If the body becomes pure, the mind becomes pure. When the mind becomes pure, thinking becomes better. Thinking skills improve with experience. Wisdom will dawn on you as your experience improves. Learn to make time for yourself. Blend in with your practice, when you eat, when you interact with the herbs. Don't do anything just as a duty. It doesn't go anywhere. You will also get no experience. You have to watch your journey. Start noticing it. Apply the wisdom we share in everything at home, with children, in education, in travel, etc. Don't make the mind a garbage bin. Don't keep it (the garbage). No matter how hard you try, worldly life goes on. Focus on your journey and the experience shall come. As happy as you are to see the lotus blooming in the pond, just imagine what it would be like if it unfolded within you? It is buried within you. Post your experiences. If it is in written form, it can be shared with everyone during the session. One month from today, you will share your experiences with Shanmugam in written form and he share them with his readers."
"பயிற்சிகள் தொடர்ந்து உங்களை நீங்கள் காத்துக் கொள்வதற்கு. உடல் தூய்மை பெற்றால், மனம் தூய்மை அடையும். மனம் தூய்மை அடைந்தால், சிந்தனை சிறக்கும். சிந்தனை சிறத்தால், அனுபவம் மேம்படும். அனுபவம் மேம்படும் போது ஞானமே உங்களை தேடி வரும்."
"உங்களுக்கான நேரத்தை செலவிட கற்றுக்கொள்ளுங்கள். பயிற்சி போடும்போதும் சரி, உண்ணும் போதும் சரி, மூலிகைகளோடும் உறவாடும் போதும் சரி, உணர்வு பூர்வமாக லயித்து போங்கள். கடமைக்கு மட்டும் எதையும் செய்ய வேண்டாம். அது எங்குமே பதியாது. உங்களுக்கு அனுபவம் தராது."
"உங்கள் பயணத்தை நீங்கள் கவனிக்க வேண்டும். இல்லற வாழ்கை, குழந்தைகளின் வாழ்கை, மன வாழ்க்கை, கல்வி பயணம், தொழில் பயணம் எல்லாவற்றிலும் நாங்கள் போதிக்கும் கல்வியை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து விடுங்கள்."
"மனதை ஒரு குப்பை கலமாக்க வேண்டாம். அதனை உங்களுள் பதித்து கொள்ள வேண்டாம். முயற்சித்தாலும் முயற்சிக்காத்தாலும் உலக வாழ்க்கை நடந்து கொண்டே தான் இருக்கும். முதலில் உங்கள் பயணத்தை மட்டும் கவனம் செலுத்தி கொண்டு, உடல் பயணமும் உயிர் பயணமும் ஒன்றென கலக்கும் போது, அனுபவம் கிட்டும். அந்த அனுபவம் குளத்தில் தாமரைகள் விரியும் போது பார்க்கும் உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியோ, அது போல் உங்களுக்குள் விரிந்தால் எப்படி இருக்கும்? உங்களுக்குளே புதைந்து கொண்டு இருக்கு. தட்டி எழுப்புங்கள். இன்று இருந்து ஒரு மாதம் உங்கள் அனுபவங்களை எழுத்து வடிவமாக ஷண்முகமடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அதை அவன் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்வான்."
He told them to write their experiences and pass them on to me to be posted on this blog. He also had me call another devotee who was at work to contribute her experiences too. He tells me "These three (women) shall pass you their experiences in writing in a month. You share it with your readers. Henceforth your postings shall be that of each person's journey. Let your readers read them."
"இவர்கள் மூவர்களும் இன்றிலிருந்து ஒரு மாதம் கழித்து அவர்களின் எழுத்துக்களை உன்னுடன் பகிர்வார்கள். பகிர்வதை நீ வாசகர்களுடன் பகிர்ந்து விடு. இனி உனது பதிவு, ஒவ்வருடைய பயணமாக இருக்கட்டும். வாசகர்கள் படித்து தெரிந்து கொள்ளட்டும்."
Mahin's wife wrote about her journey with Agathiyar.
I came to know about Agathiyar Appa in 2017 through my husband Mahindran after our wedding. I actually never heard or knew anything about HIM. All I knew was that my husband kept talking about Agathiyar and told his stories. He used to go to Shanmugan Anna's house frequently and was involved in Pooja. Then, he will go to the ground and carry out activities such as charities, and distributing food and groceries to needy people. I used to follow him a few times. Later on, I also joined him for Pooja which was held in Anna's house, and started to learn devotional songs and recite the Potri.
Before marriage, I was an Amman devotee and prayed to Amman as all used to do so. In the beginning, there were a lot of questions running in my head and sometimes I couldn't accept the changes surrounding me but whatever happened, it gave positive vibes in my life. A few things happened to me that changed my perspective about Agathiyar Appa and I started to love HIM.
During my 1st pregnancy, I could feel Appa's presence there who came and eased my delivery process smoothly without any complications. During my 2nd pregnancy, I was with severe joint pain and nerve problems. I would talk to Appa and ask for HIS help. He would come immediately to give me remedies and massage me through Mahindran. Then I came to know that Bhogar Siddha came. At that moment I asked myself who I was? Why are they all coming and helping me since I never did anything for them.
I started to follow all of Appa's advice, whose main concern was to take care of our own health by doing breathing exercises and yoga. I can feel changes that HE created within me, where I feel so calm, am patient in making decisions, have reduced my anger, and most importantly start to care about my mental and physical health. Being an Agathiyar devotee, I can feel the confidence that Appa is there for me and he will take care of everything and I just need to put my efforts and move forward. What I can say is HE keeps doing miracles and giving unconditional love and blessings to me and my family.
Recently I complained to Appa, the road which leads to my school had many holes and my car would be damaged if I passed by this road every day. Within 2 days, the road was repaired by the maintenance people. I feel shocked and just can only say "Thank you APPA".
The second incident was that I felt exhausted with my school timetable where I needed to rush to classes without any break. After a while, I received a new timetable with a new schedule which is more flexible and comfortable to me. I feel so happy when APPA keeps doing good things and has been there for me. But I question myself, what I'm going to do for HIM?
Another devotee wrote about her journey.
சிறு வயது முதலில் எனக்கு இறைவன் மீது அதிதி நாட்டம் இருந்தது. நானும் சாதாரண மனிதர்கள் போல் பூஜை இல்லத்தில் செய்வது, ஆலயங்களுக்குச் செல்வது, பஜன் தேவாரம் பாடல்கள் பாடுவது, ஆன்மீக நூல்கள் படிப்பது, இறப்பு பிறப்பை எப்படி என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.
எனது 16ஆம் வயதில் என் கனவில் பாபா, பாபாஜியை வணங்குவது போல் கனவு கண்டேன். ஒரு வாரத்தில் தாய் பாபாவின் புகைப்படம் தோழியின் மூலம் வாங்கி வந்தார். பிறகு பாபாஜியின் படத்தை நானே வாங்கி வந்தேன்.
எப்பொழுதும் வியாழன் தோறும் விருதம் எடுத்து வந்தேன். செவ்வாய் தோறும் துர்க்கை தேவிக்கு ராகு கால பூஜை செய்து கொண்டுவந்தேன். எப்பொழுதும் பூஜையின் பொழுது அடியேன் இறைவனிடம் யாசகம் கேட்பது "எப்பொழுது எனக்கு முக்திக்கு வழி கிடைக்கும்" என்று.
18ஆம் வயதில் பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் எனக்கு விடை கிடைத்தது. அப்பொழுதுதான் எனக்கு ஓலைச்சுவடி பார்க்க வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுதுதான் எனக்குச் சித்தர்கள் பற்றி, முழுமையாக அறியவில்லை என்றாலும், சிறிதளவு தெரிந்து கொண்டேன். இதற்குமுன் புராணத்தில் அவர்களைப் பற்றி கேள்விபட்டுளேன். சுவடி வசிப்பின் பிறகு அகஸ்தியர் என்னைக் காந்தம் போல் ஈர்த்தார். அவரை பற்றி அறிந்து கொள்ள முயன்றேன். அவரைப்பற்றி நூல்கள் ஒரு சிலர் என்னிடம் கொடுத்தார்கள். அனைத்தையும் மறந்து தியானிக்க ஆரம்பித்தேன்.
எவ்வளவு லீலைகள் செய்துள்ளார். அவைபற்றி இங்கு என்னால் உரைக்க இயலாது. வார்த்தைகள் இல்லை. அவரை போல் சிறந்த தாய், தந்தை, நண்பன், குரு எவரும் இல்லை இவ்வுலகில்.
இன்னும் நம்முடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். நாம் நினைப்பு பேசுவதனைத்தையும் அறிவார்கள். இன்னும் நம்முடன் இவ்வுலகில் மறைந்து கொண்டு நமக்கு வழிகாட்டிக் கொண்டு இருக்கிறார்கள். அதை நான் உணருகிறேன். அனுபவமும் கொண்டுள்ளேன்.
அடியேன் கும்பேஸ்வரன் ஆலயத்திற்குச் சென்ற பொழுது அந்த பண்டிதர் "இன்று கதவுகள் திறக்கப் படாது. வியாழன் மட்டும் தான் திறக்கப் படும்" என்றார். அப்பொழுது நானும் என் தாயாரும் மன வருத்தம் கொண்டு அகஸ்தியரிடம் பிரார்த்தனை செய்தோம். அந்த பண்டிதர் விறுவிறுவென வந்து கதவைத் திறந்து பூஜை செய்தார். நாங்கள் திகைத்துப் போனோம்.
பல நேரம் ஆறுதல், தைரியம், தன்னம்பிக்கை, உற்சாகம் இது எல்லாம் அகஸ்தியரே கொடுத்தார். நான் இன்னும் துவன்றுபோகவில்லை. என் பயணம் சித்தர்களை நோக்கி இனி ஆழமாகப் போகும். அகஸ்தியரிடம் இருந்து என்னைப் பிரிக்க வேண்டும் என்றால் முதலில் என் உடலில் உள்ள பிராணன் போக வேண்டும்.
இனி எனக்கு எந்த ஒரு குருவும் தேவை இல்லை. அனைத்திலும் அகத்தியனைக் காண்கிறேன். உணருகிறேன். உதாரணம் ஒன்று கூறுகிறேன். சுவடி வாசிப்பின் பொழுது ஒவ்வொரு முறையும் அகஸ்தியர், ஷீர்டி சாய் பாபா, பாபாஜியும் என் குரு, மற்றும் அகஸ்தியரும் என் குரு என்பார். அவர் ஒரு பொழுது அவர்களை மறக்கவும், பூஜிக்க வேண்டாம் என்று கூறியதே இல்லை. அவர்களின் ஆசி எனக்கு எப்பொழுதும் உள்ளது என்பார். எந்த ஒரு குருவும் தான் சீடனிடம் மற்ற குருமார்கள் பற்றி பேச மாட்டார்கள். ஆனால் அவர்கள் அனைவருமே ஒரே ப்ரஹ்மம் என்று நமக்கு உணர்த்துகிறார்கள். அவர்களுள் பிரிவினை இல்லை. நாம் சித்தர்களை பின் பற்றினாள் அனைத்து மென்மையும் அறிந்து கொள்ளலாம். இது வெறும் கட்டுக்கதையில்லை. அடியேன் அவர்களிடம் இருந்து அறிந்தது. மெய்யை உணர்ந்தவனுக்கு அனைத்திலும் ப்ரஹ்மத்தை காணலாம். அடியேன் ப்ரஹ்மத்தை அகஸ்தியனிடம் காண்கிறேன்.
My daughter wrote her experiences.
Blessed Beyond Words
When I sit back and think, I’ve journeyed quite a long time with Agathiyar Appa looking out for me. It makes me feel so blessed and think about what I have done to be this fortunate.
I came into introduction with Agathiyar in my schooling years when my father, Mr. A. Shanmugam began his journey of Siddha worship. Initially guiding us through the Naadi, he then came into our hearts and homes in his stunning bronze statue form where we used to do Abhishegam and pooja for him.
It started with only my parents, sister and me. Then joined by our friends, family, and new acquaintances who later became our Agathiyar family. We did Poojas and Homa every Thursday and on Pournamis, sang Bhajans for him and other deities on all their special days. We gave Annadhanam to kids/elderly homes and for the homeless people. I’d join in whenever possible as I was already studying away from home after that.
There are many instances I can recall when we either felt his presence or had him guide us when we were in doubt and most of all he’ll be there to give us remedies for our health issues too.
In 2010, I met in an accident where I had a clean fracture of my tibia and fibula and was asked to go through an operation for speedy recovery. While waiting for my turn for the operation, Agathiyar advised through a Naadi reading to only go through a small procedure and after some time another doctor suggested a procedure done very briefly without requiring an operation known as ACP Injection. I recovered soon after going through a few rounds of the mentioned procedure and started walking again.
In 2016, the Siddhas graced and blessed my husband and me at our wedding. We were told about this by Tavayogi and MathaJi who attended our wedding.
After getting married, having kids, and having a routine of my own, I’d continue to join the prayers held at my parents' place or other devotees' homes whenever I could.
There was one time when I told Agathiyar that I had slipped and fell at the waterfall, and he asked another devotee to help massage. He also taught a few yoga poses which helped stretch and ease my pain.
Earlier this year, my husband had a heart attack and had to undergo an emergency coronary angioplasty. Despite the fact that it was a very critical situation and with so much uncertainty, I had a calm come over me as the specialist briefed me on the procedure and risks while waiting for his team to assemble for the procedure. A few weeks later, at another prayer, Agathiyar told me that he was there looking after us and all would be okay.
In recent days, Agathiyar has been strictly emphasizing us to practice the breathing exercise he had taught us a few years back. He insists that we take care of our health by consuming healthily and keeping ourselves physically fit too. In the hustle and bustle of daily life, I’ve not been religiously doing my breathing exercises but deep down I know it’s only for our benefit for he sees beyond what we can see in our bodies.
I’m forever grateful for the countless blessings he’s given us all this while and for watching out for us.
Besides these women, Mahin too shared his journey, experience, and understanding while traveling the path of the Siddhas.
2014 இல் தொடங்கிய பயணம் இது. தற்போது வயது 34 காக இருந்தாலும் சித்தர்களோடு பயணத்தில் நான் இன்னும் பத்து வயது மாணவனே. இந்த பயணங்களில் பல ஜாம்பவான்கள் இருக்கையில் நான் என்னுடைய பயண மாற்றங்களையும், அதிலிருந்து நான் கற்றவற்றையும் விட்டவற்றையும் பகிர்வதால் ஏதேனும் பிழைகள் இருந்தால் பொறுத்தருள வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
சரியையில் தெய்வத் தொண்டினை நாமே நம் கைப்பட செய்யச் சொன்னார் அகத்தியர் அப்பா. ஹோமம், அவருக்கு அபிஷேகம், அலங்காரம், நெய் வேத்தியம் மற்றும் தீபாராதனை என ஆலய வழிபாட்டினை நடுவராக ஒரு ஆகமம் முறை வந்த குருக்கள் இல்லாது நானே என் கைப்பட செய்ய ஊக்குவித்தார். இதில் எனக்கு கற்றுத் தந்த பாடம் சித்தர்களோடு இணைவதற்கு நமது உள்ள தூய்மைமட்டும் போதும் என்று.
சித்தர்களோடு இணைந்து விடுகிறோம். சித்தர்களும் நம்மோடு உலவத் தொடங்கிவிடுகிறார்கள். எதற்கு? நாம் அவர்கள் வசம் இருக்கும் அவர்கள் நம்மைக் கண்காணிப்பர்.
கிரியையில் சக மனிதர்களுக்கு உதவிக் கரம் நீட்டக் குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லம், வீதியில் வசிப்பவர், பிறகு குடும்பமாக வசித்தாலும் வருமான பற்றாக்குறையால் வாடுவோர் என எல்லா தரப்பு மக்களையும் நேரே கண்டு பசி ஆற்றும் பாக்கியத்தைச் அளித்தார். இதில் எனக்கு கற்றுத் தந்த பாடம் எனது வாழ்க்கையில் ஒரு போதும் குறை கூறும் அளவுக்கு உடலாலோ, மனதாலோ, சிந்திக்கும் ஆற்றலில் எவ்வித குறைபாடுகளும் தரவில்லையே பிறகு எதற்கு வாழக்கூடிய வாழ்க்கையைக் குறை கூறிக்கொண்டே வாழவேண்டும் என்று தான்.
சரியையும் கிரியையும் சித்தர்களோடு நமக்கும் உள்ள உறவினை வலுப்படுத்தவும், கர்ம வினைகளை போக்கவும், சிந்தனையை நெறிப்படுத்தவும், இருப்பதைக் கொண்டு நடப்பவற்றை அற்புதமாக மகிழ்ச்சியாகப் பார்க்கப் பழகிக் கொள்வதற்குத் தரப்பட்டவை. இதை நான் அரிந்து உணர்ந்துகொண்டு செயலாக்கம் செய்வதற்கு அகத்தியர் அப்பாவும் மற்ற சித்தர்களும் எடுத்துக்கொண்ட அவகாசம் 5 வருட காலம்.
உணர்ந்த பிறகு அதை மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருந்தாள் முதலில் பெருமகிழ்ச்சி நம்மை அறியாது நம்மை ஆட் கொண்டு கர்வம் கொள்ளச் செய்யும். அதுவே பிறகு நம்மை யோகத்திற்கும் ஞானத்திற்கும் செல்வதற்குத் தடையாக இருக்கும். எனவே அகத்தியர் உணர்த்திய உடனே என்னைச் சரியை கிரியை இரண்டையும் நிறுத்தி பயண மாற்றம் செய்தார்.
2019 யோக பயணத்தின் தொடக்கம். தவயோகி அப்பா சொல்லித் தந்த மூச்சுப் பயிற்சி குருவாக ஷண்முகம் அண்ணன் சொல்லித்தர நானும் தவறாது இடைவிடாது செய்துவர உடலில் பலவித மாற்றங்களை உணர தொடங்கினேன். வாத பித்த கபம் என்ற மூன்றும் சரி படும் போது என் உடல் தேக்கிவைத்துக் கொண்டிருந்த கழிவுகளை அகன்று போகக் கண்டேன். இந்த காலகட்டங்களில் உடலில் உட்கிருக்கப்பட்ட நோய்களை எல்லாம் வெளியே கொண்டு வந்து அதற்கான சிகிச்சை முறைகளையும் அவ்வப்போது வந்து காண்பித்து, மருத்துவரிடமும் அனுப்பியும் வைத்தார் அகத்தியர் அப்பா. இதில் நான் கற்ற பாடம் உடல் உறுதி பெற்று வலிமையுடன் இருந்தால் வாழ்க்கை சிறக்கும். ஞானத்திற்கான பயணம் எளிதாக இருக்கும்.
யோகமும் ஞானமும் தனிப்பயணம் அல்ல. இரண்டுமே ஒன்று கலந்தே இருக்கும். உடலை வளைக்கும் போதே உள் பயணம் செய்ய வலியுறுத்தினார் அகத்தியர் அப்பா. தியானமே முதல் படி உள் பயணம் கொள்வதற்கு. அதற்கு உடலை வருத்திக்கொண்டு அமரக் கூடாது. எனவே உடல் வளைக்கக் கூடிய பயிற்சிகள் தந்த பிறகு அமரச் செய்யும் போது உடல் இலகுவாக இருக்க மனதைக் கட்டுப்படுத்த மட்டுமே தியானம் இருக்கும். அதற்குச் சுவாசத்தை மட்டுமே கவனம் இருந்தாலும் அலைபாயும் மனதைக் கட்டிப்போட எண்ணத்தை மட்டும் திரும்பத் திரும்ப சுவாசத்திற்குக் கொண்டு வந்து, கவனம் கொண்டு உணர்தளோடு செய்ய வேண்டும். இப்படிச் செய்ய நம்மை அறியாது நமது சிந்தனைகள் காணாமல் போக வெறும் சுவாசம் மட்டுமே நிலைத்திருக்கும். அவ்வப்போது புருவ கூச்சல்கள் வந்தாலும் தள்ளி வைத்து விட்டு மீண்டும் சுவாசத்தையே கண்காணிக்க வேண்டும். இதில் நான் கற்ற பாடம் தன்னை அறிந்தால் இன்புறலாம் மற்றும் அதன் தந்திரத்தையும் உணரலாம்.
சரி இப்போது அகத்தியர் அப்பா என்னை எங்குக் கொண்டு செல்கிறார் என்ற கேள்வி வரலாம். தற்போது யோகத்தையும் ஞானத்தையும் செய்துவர அவ்வப்போது அகத்தியர் அப்பா வாக்கு உரைக்கப் பக்தர்கள் மீது வருவதையும், என் மீது வருவதும் நடைபெற்றுக் கொண்டிருக்க, மும்மலம் ஆகிய ஆணவம், கன்மம், மாயையிலிருந்து விடுபடத் தனது பக்தன் பரிபூரணம் அடைந்தபின் அவர்களுக்குள் வாக்கு உரைக்க வருவதையும் ஒரு மாயை என உரைத்து அதனை அடக்கி கொள்ளும் வல்லமை பெறவும், அதற்கு ஆன்மீக பயணத்தைத் துவக்கியுள்ளார்.
ஆரம்பக் கல்வி ஆகவே இதைப் பார்க்கும் வேளையில் இதுவரை நான் பலமுறை நான் நான் என்று என்னை அடையாளப் படுத்திக்கொண்டதை நிறுத்தும் வகையில் ஒரு புதிய அனுபவ பயணம் நடைபெறுகிறது. நான் என்ற ஆணவம் அழியும்போது மாயை என்ற திரை விலகி எப்படி ரமண மகரிஷி நான் வேறு அல்ல நீ (இறைவன், அருட்பெருஞ்ஜோதி, பிரபஞ்சம்) வேறு அல்ல என்ற நிலைக்குக் கொண்டு செல்லும் நிலை தற்போது. கன்மம் மட்டும் சரியை கிரியையில் முற்றிலும் சித்தர்களின் அருளால் போக்கப்பட்டு யோகத்திற்கும் ஞானத்திற்கும் பயணிக்கச் சித்தம் ஆகிறோம்.
சித்த பயணத்தை இருவகைகளாகப் பிரிக்க, ஒன்றாவது மனித நெறி பயணம் இதற்கு குருவின் தேவை சரியை கிரியையோடு நின்று விடும். பிறகு அந்த சீடன் கற்றவற்றை வாழ்க்கையில் கடைப்பிடித்து வந்தாலே போதும். உணவிலோ உடையிலோ மாற்றம் தேவை இருக்காது, மனத்தினையும் ஆசைகளை மட்டும் கையாள வேண்டும். தொடர்ந்து சரியை கிரியை செய்து வரலாம். உலக வாழ்க்கைக்கான ஞானம் கிட்டுமே தவிர ஒளி பயணத்திற்கு வழிவகுக்காது.
இரண்டாவதாக ஞான பயணம்/ஜோதி பயணம். இதற்கு உடல், உள்ளம் தூய்மை பெறுவது அவசியம். புலால் உண்ணுதலை தவிர்க்கும் பட்சத்தில் முதல் உடல் தூய்மை ஆரம்பமாகிறது. பிறகு கடுமையான வைராக்கியம் வேண்டும். சித்தர்கள் கொடுக்கும் பயிற்சிகளை விடாமல் செய்வதும், சொல்லிய பொழுதே செய்வதும், ஏன் என்ற கேள்விகள் இன்றி நிறுத்தவும் வேண்டும். இது அடுத்தகட்ட தூய்மை. பிறகு, மனத்தூய்மை செய்யத் தியானம் செய்து வர ஆன்மாவோடு பேசத் தொடங்க வேண்டும். இவ்வகை செய்யும்வண்ணம் சிந்தனை தூய்மையும் செய்தாக வேண்டும் எனில் இங்குதான் சித்தர்களும் பூதகணங்களும் தேவலோகர்களும் நம்மோடு மாய விளையாட்டைச் செய்யத் தொடங்குவார்கள். ஆகவே இதற்கு நாம் குருவைத் தேடுவதை விட நாம் செய்யக்கூடிய சரியான கிரியையைக் கண்டு நம்மை குரு தேர்வு செய்வார். அவர் நம்மை அந்த மூலப் பொருளுக்கே கொண்டு செல்லும் வரை வழிநடத்துவார். தான் வழிபடும் மூலத்தையே நமக்கு அடையாளம் காட்டிவிடுவாரே ஒழியத் தன்னை போற்றிட ஒரு போதும் சொல்வதில்லை. இவ்வாறே நம்மைத் தேர்வு செய்த குரு யார் என்று நாம் கண்டு கொள்ளலாம்.
எந்த பயணத்தை நாம் தேர்வு செய்கிறோமோ அதன் படியே பயணமும் ஒவ்வொருவருக்கும் வேறு படும். ஒப்பிடுதல் ஒருபோதும் ஆன்மிக பயணத்தில் இருக்கக் கூடாது. நாம் வாழும் வாழ்க்கையில் ஒவ்வொரு பொழுதிலும் சித்தர்களின் ஞான பாடங்களும் அற்புதங்களும் இருப்பதை உணர்தலே நமது பயணம் சிறப்பு மிக்க பயணமாக அமையும். அதனை நம் சிந்தை கொண்டு தவயோகி அப்பா சொல்லியதுபோல் “மாயையின் விளக்கம் புரிந்து அதை மனதிலே இருந்து ஒடுக்கித் தள்ளித் தத்துவ விசாரத்தால் வெற்றியடைய வேண்டும்”.