Tuesday, 4 February 2020

MAHIN'S JOURNEY 1


Mahindran, who gave us the beautiful many faces of Agathiyar, decorating him after each libation or abhisegam at AVM has penned the following after journeying with Agathiyar since 2013.

அகத்தியரோடு எனது பயணம்

டிசம்பர் 20, 2013 எனது சரியைக்காணப் பயணத்தின் தொடக்கம். அன்று தான் நான் முதல் முறையாக அகத்தியர் வானம் மலேசியாவிக்கு எனது நண்பர்களோடு சென்றிருந்தேன்.  அங்கு நான் கண்டது அகத்தியர் உருவில் சிவனை. பின்னர் நான் ஷண்முகம் அண்ணனிடம் என்னைப் பற்றி  பகிர்ந்து கொண்டேன். அன்று நான் அறியாதது எனது வாழ்க்கையில் பெரிய அளவிலான மாற்றங்கள் வரும் என்றும் அவை அனைத்தும் அகத்தியர் அப்பாவின் செயல் என்றும்.


ஆரம்ப நிலையில் நான் அகத்தியர் வனத்திக்கு மாதத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை செல்லுவது வழக்கம். அவை அங்கு நடைபெறும் சித்தர்கள் பூஜையில் கலந்து கொள்வதற்கு. பின்னர் காலப்போக்கில் நான் அகத்தியர் வானம் செல்வதை வாடிக்கையாகிக்கொண்டேன். ஏனெனில் அங்கு ஷண்முகம் அண்ணன் சித்தர்கள் மீது உள்ள ஆர்வம், அவர் சேகரித்து வைத்திருந்த அவரது அனுபவங்கள் எல்லாம் என்னையும் ஒரு புதிய பாதைக்குள் தள்ளியது. அதிசயங்கள் விரும்பாத மானிடன் இல்லை என்பதற்கு ஏற்ப நானும் அங்கு நடந்தேறும் அதிசயங்களை கண்டு வியப்புற்றேன். ஒரு ஐம்பொன் சிலை (அகத்தியர் வானம் அகத்தியர் அப்பா) மனிதனைப் போலவே இரு கண்களையும் திறந்து இருப்பதை நான் முதலில் பாலச்சந்திரன் காமித புகைப்படம் மூலமாக கண்டேன். அதே அதிசயம் நங்கள் அகத்தியர் அப்பவிற்க்கு அபிஷேகம் செய்யும் பொழுது கண்டு வியந்து மகிழ்தேன். இந்த அதிசயம் என்னை இன்னு இப்பாதைக்குள் அதிகமாகவே தள்ளியது.

அங்கு நான் செல்லும் பொது எல்லாம் ஷண்முகம் அண்ணன் அவரது தேடல்களையும், அனுபவங்களையும் பகிர்த்துக்கொள்வர். எனக்குள் ஒரு கேள்வி எப்பொழுது நாமும் இவரை போலவே இந்த பயத்தின் அனுபவங்களை சேகரிப்பது. நான் வாடிக்கையாக செல்வதால் பூஜைக்கான தயார்நிலைகளை நான் கற்றுக்கொண்டேன். பின்னர் நானே அவைகளை செய்ய துடைங்கிடேன். ஹோமம், அபிஷேகம், அலங்காரம், போற்றி பாடல்கள் என முழுமையான பூஜை முறைகளை நான் அவரிடம் மற்றும் மகேஸ்வரி அம்மாவிடம் இருந்தும் கற்றுக்கொண்டேன். இவர்கள் இருவகளிடம் இருந்து நான் பல அருப்புதமான பாடங்களை கற்றுவந்தேன். இப்படியே வருடங்கள் புரண்டு ஓட, நான் எனக்குள் பல மாற்றங்களை உணர துடங்கினேன். 2013 முதல் 2019 வரியிலும் சரியை கற்றுவந்த நான் 2019 துவக்கத்தில் இருந்து கிறியைகான பயிற்சியினை அகத்தியர் அப்பா மூலம் ஷண்முகம் அண்ணன் வழிவிட நானும் எனது தோழி மலர்வதியும் தினம்தோறும் அகத்தியர் வானம் சென்று யாகம், அபிஷேயம், அலங்காரம் என்ன அனைத்தையும் நாங்களே செய்ய தொடங்கினோம். அகத்தியர் அப்பாவை அலங்கரிக்கும் பொறுப்பு என்னிடம் வர நானும் அகத்தியர் அப்பாவின் ஆசியோடு அவரை பல விதங்களில் அலங்காரம் செய்து மகிழ்ந்தேன்.


இன்னும் சொல்லப்போனால் 2019 எங்களுக்கு ஒரு அற்புதமான பயணமாகவே அமைத்தது. ஷண்முகம் அண்ணன் கூறிய அவரது அனுபயங்கள் இப்பொழுது எனது அனுபவமாக மாறியது. அவரது பயணத்தில் நாங்கள் இணைந்தது எங்களுக்கு ஒரு பெரிய பலத்தையும் நம்பிக்கையும் தந்தது. அவரது வாலிப வயதில் தொடுத்த கேள்விகளை சிவபெருமான் கனவில் வந்து கேள்விகளை பின்னர் ஒத்திவைக்க சொல்லியதும், இப்பொழுது அதற்கு விடையளிக்கும் பொருட்டு எங்களுக்கு அவை பாடமாக அமைகிறது. அதற்கு நான் சிவபெருமானுக்கு நன்றிகளை சொல்லிக்கொள்கிறேன். இவ்வாறு இருக்க நாடிகள் மூலம் எங்களுக்கு வாக்குரைத்த அகத்தியர் அப்பா, தனது பக்தர்கள் மூலமாகவும் எங்களை வழிநடத்த ஆரம்பித்தார். ஷண்முகம் அண்ணனின் இரு குருக்களும் (சுப்ரமணிய சுவாமி / தவயோகி), பின்னர் எனக்கும் குருவாக அமைந்த தவயோகி அப்பாவின் மறைவுக்கு பிறகு எங்களை அகத்தியர் அப்பவே நேரடி சீடனாக ஏற்றுக்கொண்டார் போல் அவர் எங்களுக்கு அவ்வப்போது தரிசனம் தந்து வழிநடத்தி வருகிறார்.

கிரியை எனபது வெறும் பூஜை என்பது அல்ல, பிறருக்கு தொண்டுகள் செய்வதும் தான் என உணர்த்தி, பாலச்சந்திரன் தலைமையில் நாங்கள் ஆறு பேர்  (பாலச்சந்திரன், நான், தயாளன், சுகுமாரன், மலர்வதி, சஹாலினி) சேர்த்த ஒரு குழு அமைத்து எங்களால் ஈன்ற தொண்டினை செய்து வந்தோம். வீதியை இல்லமாய் கொண்டு வாழ்பவர்களுக்கு உணவு கொடுப்பதும், பிள்ளைகளின் அறுவை சிகிச்சைக்கு பண பற்றகுறையாகா இருப்பவருக்கு முடிந்தவை தருவதும், கல்வியினை தொடங்குவதற்கு மாதம்தோறும் பண உதவியும், முதியோர் இல்லம்/சிறுவர்கள் இல்லம் சென்று உணவு தருவதுவிளையாட்டு என்ன சிறிய அளவில் செய்து வந்தோம். அதனை தொடர்ந்து ஷண்முகம் அண்ணன் அமுதசுரபி என்ன மற்றொரு குழு தொடங்க, நாங்கள் அவரோடும் இணைத்து எங்களால் முடிந்த சேவைகளை இந்நாள் வரை செய்து வருகிறோம். நான் கடண்து வந்த பாதையில் சிறிய அளவு கசப்பான சம்பவங்கள் எனக்கு பெரிய அளவில் பார்க்க தோன்றியது. என்று நாங்கள் வீதியில் இருப்பவர்கள், அன்றாட வாழ்க்கைக்கு போராடும் மனிதர்கள், ஒரு வேலை மட்டுமே பிள்ளைகளுக்கு உணவு தரும் குடும்பங்கள் என்ன பலரை கண்டபொழுது, நான் கடந்து வந்தது யாவும் வெறும் கானல் நீர் என்று உணர வைத்தார் அகத்தியர் அப்பா. அன்று முதல் ஒரு உத்வேகம் எனக்குள் பிறந்தது, வரும் இன்னல்களை கண்டு வருந்துவதை விட, அதனை சரிசெய்வதற்கான வழிமுறைகளை கண்டறிவதே சரி என்று உணர்த்தினார்.


இவாறு அகத்தியரோடு பயணம் சுமுகமாய் போக, யோகத்தின் பயிற்சி ஆரம்பமானது. இங்குதான் அகத்தியரோடு பயணம் குழுவாக அல்ல தனி மனித பயணம் என உணர்த்த ஆரம்பித்தார். ஆறு வருடமாக குழுமுறையில் செய்தவையாவும் இப்பொழுது தனித்து செய்ய வேண்டும். தொண்டுகள் இதில் அடங்காது. தனி மனித பயணம் என்பது தன்னை தானே அறிந்துகொள்வது. எவ்வாறு நான் என்னை நானே அறிவது என்ற கேள்விக்கு அகத்தியர் அப்பா சொல்லியது தியான முறை. நம்மை நாம் அறிவதற்கு சித்தர்கள் சொல்லித்தருவது தியான பயிற்சி. நம்மை தனிமை படுத்தி தினமும் ஒரு முறையாவது இறைவனை நோக்கி மன அமைதியோடு தியனம் செய்து வந்தால், அதன் பலனாக நம் பிறப்பின் நோக்கமும், அதன் பயனும் அறிவோம் என்று உணர்த்தினார். அனால் அது அவ்வளவு சுலபம் அல்ல, அதற்கு நம் மனம் பக்குவ படவே சரியை, கிரியை என இரண்டு வழிமுறைகளை சொல்லிக்கொடுத்து வந்தார். சரியையில் நாம் எவ்வாறு நம்மை ஒழுங்கு படுத்துவது என்றும், கிரியையில் நம்மை எவ்வாறு செயல் பட வேண்டும் என்றும் சொல்லி தந்தார். அதற்கு ஐந்து கொள்கைகள், ஆறு புலன்களை அடக்குவதும், மும்மலத்தை ஒலிப்பதும் என கற்றுத்தந்தார்.

ஐந்து கொள்கைகள்:

-  பிறப்பின் நோக்கம் அறிதல்
- குலதெய்வம், காவல் தெய்வம், குரு விடம் பக்தி செலுத்துதல்
- முன்னோர்கள், பெற்றோர்களை மதித்தல்
- எல்லா உயிரினங்களையும் மற்றும் பொருட்களையும் இறை நிலைக்கு கொண்டு வருதல்
- தர்மம் செய்தல்

ஆறு புலன்கள்:

- பொறாமை
- காமம்
- பெருமை
- கோவம்
- வெறுப்பு
- பற்று

மும்மலம்:

- ஆணவம்
- கர்மம்
- மாயை

மும்மலம் ஆகிய ஆணவம் கர்மத்தை அளிக்க மாயை என்னும் திரை தானே விலகி போகும். அவ்வாறு ஆணவம், கர்மம், மாயை விலகி போக நமக்குள் சுழன்று இருக்கும் ஆறு புலன்கள் யாவும் பட்டு போகும். மும்மலம் அளித்து, ஆறு புலன்களும் பட்டு போக, நம்மால் அகத்தியர் கொடுத்த ஐந்து கொள்கைகளை சரிவர செய்ய முடியும். இவ்வாறு எவன் ஒருவன் இவை அனைத்தும் தனது கொள்கையாக மன்றிக்கொண்டு அதற்கு சக்தி கொடுத்து முழுமுயற்சியாக செய்து வருகிறானோ அவனுக்கு தியானத்தில் தெளிவுகிடைத்து, தன்னை அறிவான் என எனக்கு அகத்தியர் அப்பாவால் உணர்த்தப்பட்டது. இன்று வரை எனது பயணம் யோகத்தை நோக்கி இருக்கிறது, அகத்தியர் அப்பா ஆசியோடு யோகத்தின் பயிற்சியும் சரிவர செய்து முடித்து ஞானத்திற்கு செல்லும் வழியும் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு அகத்தியர் அப்பாக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்.