Sunday 21 May 2017

தவயோகி தங்கராசன் அடிகளின் பொற்றாள் சரணம் !

Rakesh from Chennai has translated Anonymous's work of poetry on Tavayogi Thangarasan Adigal of Kallar Ashram. View the original at http://agathiyarvanam.blogspot.my/2017/05/at-sacred-feet-of-tavayogi-thangarasan.html

தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு அகத்திய அடியார், தென்ஆப்பிரிக்காவிலிருந்து  கல்லார் ஆசிரமம் சென்று, தவயோகி தங்கராசன் அடிகளாரை சந்தித்து, அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை கீழ்க்கண்ட வரிகளை பொன்னேட்டில் பதிந்துள்ளார்.

குளிர்மிகு டிசம்பர் மாதத்தில் மிருதுவான என் நினைவலைகளில் 
நீக்கமற கல்லார் ஆசிரமத்தின் கவின்மிகு அழகை என்னுள் ஊட்டி 
சிறு குழந்தை தவழ்ந்து செல்வதை போல் தங்களோடு சேர்ந்து 
ஒவ்வொரு அடியாய் அனுபவித்த இன்பம் தான் மறக்க முடியுமா ?

இல்லை சித்தர் பீடத்தில் உறைந்து உள்ள அருளாளர்களின் 
அருளை எமக்கு ஊட்டிய தவயோகியிடம் இருந்து வீசுகின்ற 
சந்தனக் காற்றை தான் மறக்க இயலுமா ?

அருள் மொழியோடு இணைந்த வார்த்தைகள் - வார்த்தைகளில் 
வெளிப்படுகின்ற அன்பும் கருணையும் என்னே ! தங்களின் 
ஆராவில் உள்ள இறை ஆற்றலில் இருந்த தருணத்தில் 
பொன்னான நேரமும் விலை மதிப்பற்றதாய் - இது 
உண்மைக்குள் உறைந்த மாயையோ !

இதய கூட்டுக்குள் இன்பத்தை தந்தீர் 
குருதியை தள்ளுகின்ற இதயம் தங்களின் தரிசனம் பின் 
அன்பையும் சேர்த்து தள்ளுகிறது - கண்ணில் என்ன 
காந்தமோ! இல்லை இறையாற்றல் ஒளிர் விடும் 
அருள் விழிகள் அன்றோ! கண் மூடி அகம் நோக்கி 
தங்களின் பொற்பாதம் பணிகிறேன் - வாழ்வின் முழுமைப் பேற்றில் 
என் இதயத்துள் நடக்கும் முடிவிலா போராட்டம் 

அந்த குங்குமப் பூ அங்கிளுக்கு பின்னிருப்பார் யாரோ ?
நீண்ட காலமாய் யாம் அறிந்திலோம் 
குழந்தைகளின் விளையாட்டு போல் வாழ்வில் தொடர்ந்தோம் 
என்னை நோக்கி புன்னகை பூத்து என்னுள் அகத்தியம் ஊட்டி 
வாழ்வை வார்க்க தரிசனம் தந்தீர் ! 

பற்றற்றான் பாதம் பற்றிட இழத்தல் 
வாயிலாக மகிழ்ச்சி யூட்டினீர்- அந்த மகிழ்வின் 
நெகிழ்வில் தங்கள் பாதம் பற்றினேன் 
நினைவின் அலைகளில் உணர்வாய் நின்றேன் 
வாழ்க்கை விளையாட்டில் மகிழ்ச்சியே மிஞ்சட்டும் 

கல்லாரின் புனிதம்  என்னை வேறு எங்கும் 
செல்ல விடாது - பொறுமையோடு அங்கேயே விளம்ப 
பொறுமையோடு மிருதுவான மென்மையும் கொடுத்தது 
நான் உணர்ந்தது மெய்மையே ! அடிகளாரின் அருள் வார்த்தைகள் 
என் உள்ளத்திலே என்றென்றும் ஒளி விளக்காய் !

இந்த புவிதனில் தனியனாய் ஒரு போதும் நான் 
இருந்திலேன் - என் முன்னே உள்ள அனைத்து 
உயிர்களின் இதயத்தில் அன்பு ஊட்டி கருணை காட்டி 
அகத்தது தான் அன்பு என்று எடுத்து காட்டும் 
அகத்தியம் உய்விக்க வாழ வாக்குறுதி இங்கே !

இங்கே, சுவாமியை பற்றி ஒரு துளி எடுத்து காட்டி உள்ளேன். அவர் அருள் ஊற்று. இன்ப ஊற்று. அள்ள அள்ள குறையாத அருட் கடல். எனக்கு அள்ளி அள்ளி கொடுத்துக் கொண்டிருக்கின்றார். என் இதயத்துள் இருக்கும் அவருக்கு நான் திரும்பி தரப் போவதென்ன? எனக்கு கிடைத்த அருள் நிலைக்கு என்றென்றும் அவர் பொற்றாள் சரணம் செய்கின்றேன். இது போல் ஒவ்வொருவரும்  சுவாமியிடம் இறை அனுபவம் பெற்று இருப்பீர்கள் என்று உறுதியாய் விரும்புகின்றேன்.