Friday, 11 July 2014

AGATHIYAR, THE JEEVA NADI, THE NADI GURU, SITHTHAN ARUL AND KARTHIKEYAN

Velayutham Karthikeyan has been posting many interesting and informative revelations by Agathiyar through the Jeeva Nadi in possession of a great soul from Chennai, on his blog Siththan Arul. Find time to go through these postings where we will find answers to our individual questions and doubts, amazing facts about creation and the world, revelations and miracles centered around the Siddhas, important teachings and doctrines, mantras, techniques and more.

On 1 May 2014, I was so amazed at the knowledge and wisdom shared by the Siddhas to help us lead a better life, through Agathiyar's revelations in Karthikeyan's numerous posts that I commented as follows:
Today's Sitthan Arul post was amazing, just as the many previous postings by Velayudham Karthikeyan. Karthikeyan concludes the massive journey of the blessed Jeeva Nadi Guru from Chennai with his friends on a pilgrimage cum revelation to temples and places dictated by Agathiyar in 2009.
Many truths and secrets had been revealed by the great saint. In today's episode Agathiyar explains what meditation or Dhyanam is and what surrender means. He talks about Thirumular coming to the aid of Akbar too. Agathiyar reveals how he personally takes stalk of devotees wishes and prayers and delivers them onto the honorable feet of the Lord.
Along the way Agathiyar had identified many places where ancient temples still lay buried waiting to be discovered.
This journey with Agathiyar, the Jeeva Nadi Guru and Velayudham Karthikeyan has simply been amazing. It has been a journey of discovery into the world of Siddhas, Agathiyar revealing the workings of Karma, workings of the Siddhas and the workings of creation itself.
Agathiyar explains about Dhyanam and surrender as follows: (from Siththan Arul at http://siththanarul.blogspot.com/2014/05/172.html)
அகத்தியர் இப்படி உரைத்தார்.

"குரு பார்க்க கோடி பாபம் தீரும் என்று பழ மொழி. ஆனால், குருவை பார்த்து ஒருவன் கண்ணீர் விட்டானே என்று அகத்த்தியனுக்கு ஆச்சரியம். ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்றால், அது தான் உச்சநிலை என்று பெயர்.
த்யானத்தில் உச்சநிலை ஆகும் பொழுது, அவரவர்கள், தன்னை மறந்து, முருகா என்றோ, அம்மா என்றோ, வேங்கடவா என்றோ அடி வயற்றிலிருந்து எழுப்புவது வழக்கம்.
உணர்ச்சிப் பெருக்கில், 7417 நரம்புகளும் ஒன்று சேர்ந்து, உணர்ச்சிகளும் ஒன்று சேர்ந்து, ரத்தமும், நரம்புகளும், எலும்புகளும் ஒன்று சேர்ந்து ஒடுங்கிப்போய், உச்சநிலையை அடைவதைத்தான் த்யானத்தின் உச்சகட்டம் என்று பெயர்.
ஒருவன் எப்பொழுது த்யானத்தின் உச்சகட்டத்தை அடைந்துவிட்டானோ, அப்பொழுதே. முற்றுமே இறைவனிடம் தன்னை ஒப்படைத்து விடுவான். இதை உடல் பொருள் ஆவி என்று அந்தக் காலத்திலேயே சொல்வார்கள்.
 And on surrender,
உடல் பொருள் ஆவியில், எப்பொழுது சரணாகதி தத்துவத்தில் ஒருவன் விழுந்துவிட்டானோ, "நாராயணா" என்ற ஒரு வார்த்தையிலே அத்தனையும் அடக்கம் என்று பெயர். நாராயணன் அவன் பார்த்துக் கொள்வான். உனக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பொறுப்பை உன்னிடம் ஒப்படைத்துவிட்டேன். நீ தைரியமாக பொறுப்பை ஏற்று செய் என்று அர்த்தம்.
குருவை ஒருவன் அடைந்துவிட்டாலோ, குருவே அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என்று அர்த்தம்.
அகத்தியனே பலருக்கு குருவாக இருந்து பல நன்மைகளையும் செய்து காட்டி கொடுத்திருக்கிறேன், பலரையும் நட்சத்திரமாக மாற்றி அமைத்திருக்கிறேன்.
Agathiyar reveals how Thirumular came to the aid of the Mughal Emperor Akbar and cured his son Humayun.
அன்றொருநாள், அங்கொரு மொகலாய மன்னன், அக்பர், தன் மகன் ஹுமாயூன் பிழைக்க வேண்டும் என்று எண்ணி, ஒன்பது முறை வலம் வந்ததாக வரலாறு உண்டு.
ஒரு உயிர் விட்டு ஒரு உயிர் பாய்வது என்பது கூடு விட்டு கூடு பாய்கின்ற நேரம். அதை போகப்பெருமான் மிக அற்புதமாக செய்வான். திருமூலரும் செய்வார், இன்னும் கோரக்கர் கூட ஒருமுறை செய்திருப்பதாக கேள்வி.
ஆகவே, அந்த அக்பர், தன் மகனை காப்பாற்ற வேண்டும், ஹுமாயூனுக்காக ஒன்பது முறை வலம் வந்தான். நன்றாக கவனித்துக்கொள். ஒன்பது என்பது நவதலம். நவகிரகங்கள், நவதானியங்கள். அக்பரே, நவரத்னங்களை அணிந்து கொண்டுதான், நவ கிரகங்களை வழிபட்டுத்தான், தன் மகன் காப்பாற்றப் படவேண்டும் என்று ஆசைப்பட்டான். ஹுமாயூன் பிழைத்துக்கொண்டான். அது அவன் யோகம்.
அந்த நேரத்தில் அக்பருக்குள் புகுந்து, ஹுமாயூனை காப்பாற்றியது எல்லாம், திருமூலரே. திருமூலர் தான் அக்பருக்கு பக்க பலமாய் இருந்து, அந்த உயிரை காப்பாற்றி இருக்கிறான்.
The most compassionate Agathiyar reveals how he brings each individual's prayers personally to the Lord.
இன்றைய தினம் குரு வரத்துக்காக இவன் போட்ட பிரார்த்தனைகள் அத்தனையையும், கூட்டாமல், குறையாமல், அலுங்காமல், சிதறாமல், அப்படியே கையினில் ஏந்தி, குருபகவான் சன்னதியில் வைத்துவிட்டேன். அப்படி வைத்துவிட்ட நேரத்தில்தான் இவன் தன்னையும் அறியாமல், அகத்தியனை நோக்கி கண்கலங்கி பேசினான்.
ஆக எதற்கு சொல்லுகிறேன் என்றால், அகத்தியன் இவன் கொடுத்த வேண்டுகோளை, கையாலே தாங்கி, அந்த பொற்தாமரை மலரடி பாதத்திலே வைத்த பொழுதுதான் கண் கலங்கி இருக்கிறான். சூட்ச்சும சரீரத்திலே ஒரு நாடகமே நடந்திருக்கிறது.
I wish to thank Velayudham Karthikeyan for bringing us closer to an understanding of the Siddhas through his blog.