நாராயணா ஹரி நாராயணா
நொந்துடலும் கிழமாகிக் தளர்ந்தபின்
நோயில் நடுங்கிடும் போது
ஜீவ நாடிகள் நைந்திடும் போது
மனம் எண்ணிடுமோ தெரியாது
இன்று சிந்தை கசிந்துன்னை கூவுகின்றேன்
அருள் செய்திடுவாய் ஹரி நாராயணா
நீடு கபம் கோழை ஈழை நெருக்கி
என் நெஞ்சை அடைத்திடும் போது
விக்கி நாவும் குழறியபோது
மனம் எண்ணிடுமோ தெரியாது
நான் அன்றுன்னைக்கூவிட
இன்றழைத்தேன் என்னை
ஆண்டருள்வாய் ஹரி நாராயணா
ஐம் பொரியும் கரணங்களும்
வாயுவும் ஆடி அடங்கியபோது
எந்தன் ஆவி பிரிந்திடும் போது
மனம் எண்ணிடுமோ தெரியாது
இன்று நம்பி உன்னை தொழுதே
அழைத்தேன் ஜகன் நாயகனே
ஹரி நாராயணா
எம்பொருள் என்மனை
என்றேதெல்லாம் இனி இல்லை
என்றாகிடும்போது
மனம் எண்ணிடுமோ தெரியாது
நீ அன்று வரும் பொருட்டின்றழைத்தேன்
அருள் அச்சுதனே ஹரி நாராயணா
வந்து எம தூதர்கள் வளைத்து
பிடித்தென்னை வாவென்று
இழுத்திடும்போது
மனம் எண்ணிடுமோ தெரியாது
அந்த அந்தியம் நீ வர
இன்றழைத்தேன்
சச்சிதானந்தனே ஹரி நாராயணா
உற்றவர் பெற்றவர் மற்றவர்
சுற்றமும் ஓவென்று நின்றழும்போது
உயிர் ஒசைகள் ஓய்திடும்போது
மனம் எண்ணிடுமோ தெரியாது
இன்று பற்றி உன்னைப் பணிந்தே
அழைத்தேன் ஆபத் பாந்தவனே
ஹரி நாராயணா
- அகத்தியர்
அங்கும் இங்கும் எங்குமாய்
அமைந்த தேவ தேவனே
ஆதியாய் அநாதியாய்ச்
சமைந்த ஜோதி ரூபனே
மங்கலங்கள் யாவும் நல்கும்
அம்பிகை மணாளனே
மைந்தன் செய்யும் பூசையில்
மகிழ்ந்தருள் நடேசனே
எந்த இல்லம் ஆயினும்
இருந்த இல்லம் சிதம்பரம்
எடுத்த பீடம் ஆலயம்
தொடுத்த கூரை கோபுரம்
செந்தமிழ் சொல் மந்திரம்
திருந்தும் அன்பே ஆகமம்
சிவந்த பாத பங்கயம்
உவந்தருள் நடேசனே
மண்ணிலே எடுத்தகால்
என்மனையிலும் எடுத்துவை
மனதிலே நினைத்த நன்மை
விரைவிலே முடித்துவை
என்றும் தீமை அணுகிடாமல்
ஈசனே தடுத்துணை
ஏத்தும் அன்பர் குழுவில் என்னை
செர்த்துவை நடேசனே
ஆ பயந்த ஐந்தினோடு
பால் பழம் பஞ்சாமிர்தம்
அலைவாய்க் கரும்பு தெங்கு
தேன் சுகந்த சந்தனம்
நீ பயந்த யாவையும் நினக்களித்தேன் ஆடி
நேர்ததியாய் அனைத்து ஆடி
வாழ்த்துவாய் நடேசனே
வில்லினால் அடிக்கவோ
வீசுகல் பொறுக்கவோ
மிதித்த பாதுகை பிரம்பை
மேலும் நான் எடுக்கவோ
நல்ல பிள்ளை என்னை
ஆளும் நாதனும் நீ அல்லவோ
நாளும் நான் படைத்த
சொல்லும் பூவும் கொள் நடேசனே
ஆட நீ எடுத்தாய்
அறிந்தவர் இயம்புவார்
அல்ல அல்ல என் தலைமேல்
சூட என்று சொல்கிறேன்
ஈடில்லாத தெய்வம் நீ
இடப்புறம் எடுத்த கால்
எந்த நோக்கில் என்று
சொல்ல வந்தருள் நடேசனே
மழுவெடுத்த எதை விளக்க
மன்று தோறும் ஓடினாய்
மதியெடுத்து சிரம் இருக்க
மந்தனாய் ஏன் ஆடினாய்
கழுதெடுத்த நடனம் ஆடும்
காட்டில் என்ன தேடினாய்
கையில் நான் எடுத்த தூபம்
கொளுவாய் நடேசனே
எடுத்த தூபம் ஆதியாவும்
ஏற்றருள் மகேசனே
இன்று நான் படைத்த யாவும்
உண்ணுவாய் சபேசனே
தடுத்த பண்டை வினையகற்றித்
தாங்குவாய் சர்வேசனே
சரணம் உன்னை அன்றி ஏது
தாங்குவாய் நடேசனே
வாழி நீ படைக்கும் தெய்வம்
மலர் அணை அமர்ந்த தாம்
வகுத்தளிக்கும் தெய்வம் கூட
அரவணை கிடந்ததாம்
ஊழி தோறும் ஐந்தொழில்
உவந்து செய்யும் ஈசனே
ஓய்ந்து சற்றென் நெஞ்சனைக்கண்
சாய்ந்து கொள் நடேசனே
ஓம் நமசிவாய ஓம் சிவாய நம ரூபனே
ஓதும் ஐந்து சபையில் ஆடும்
பாதனே சங்கீதனே
வாமியாய்த் தழைத்த சிவ
காமி காதல் நேசனே
மாறிலாத கருணை நீ
வழங்குவாய் நடேசனே
நொந்துடலும் கிழமாகிக் தளர்ந்தபின்
நோயில் நடுங்கிடும் போது
ஜீவ நாடிகள் நைந்திடும் போது
மனம் எண்ணிடுமோ தெரியாது
இன்று சிந்தை கசிந்துன்னை கூவுகின்றேன்
அருள் செய்திடுவாய் ஹரி நாராயணா
நீடு கபம் கோழை ஈழை நெருக்கி
என் நெஞ்சை அடைத்திடும் போது
விக்கி நாவும் குழறியபோது
மனம் எண்ணிடுமோ தெரியாது
நான் அன்றுன்னைக்கூவிட
இன்றழைத்தேன் என்னை
ஆண்டருள்வாய் ஹரி நாராயணா
ஐம் பொரியும் கரணங்களும்
வாயுவும் ஆடி அடங்கியபோது
எந்தன் ஆவி பிரிந்திடும் போது
மனம் எண்ணிடுமோ தெரியாது
இன்று நம்பி உன்னை தொழுதே
அழைத்தேன் ஜகன் நாயகனே
ஹரி நாராயணா
எம்பொருள் என்மனை
என்றேதெல்லாம் இனி இல்லை
என்றாகிடும்போது
மனம் எண்ணிடுமோ தெரியாது
நீ அன்று வரும் பொருட்டின்றழைத்தேன்
அருள் அச்சுதனே ஹரி நாராயணா
வந்து எம தூதர்கள் வளைத்து
பிடித்தென்னை வாவென்று
இழுத்திடும்போது
மனம் எண்ணிடுமோ தெரியாது
அந்த அந்தியம் நீ வர
இன்றழைத்தேன்
சச்சிதானந்தனே ஹரி நாராயணா
உற்றவர் பெற்றவர் மற்றவர்
சுற்றமும் ஓவென்று நின்றழும்போது
உயிர் ஒசைகள் ஓய்திடும்போது
மனம் எண்ணிடுமோ தெரியாது
இன்று பற்றி உன்னைப் பணிந்தே
அழைத்தேன் ஆபத் பாந்தவனே
ஹரி நாராயணா
- அகத்தியர்
அங்கும் இங்கும் எங்குமாய்
அமைந்த தேவ தேவனே
ஆதியாய் அநாதியாய்ச்
சமைந்த ஜோதி ரூபனே
மங்கலங்கள் யாவும் நல்கும்
அம்பிகை மணாளனே
மைந்தன் செய்யும் பூசையில்
மகிழ்ந்தருள் நடேசனே
எந்த இல்லம் ஆயினும்
இருந்த இல்லம் சிதம்பரம்
எடுத்த பீடம் ஆலயம்
தொடுத்த கூரை கோபுரம்
செந்தமிழ் சொல் மந்திரம்
திருந்தும் அன்பே ஆகமம்
சிவந்த பாத பங்கயம்
உவந்தருள் நடேசனே
மண்ணிலே எடுத்தகால்
என்மனையிலும் எடுத்துவை
மனதிலே நினைத்த நன்மை
விரைவிலே முடித்துவை
என்றும் தீமை அணுகிடாமல்
ஈசனே தடுத்துணை
ஏத்தும் அன்பர் குழுவில் என்னை
செர்த்துவை நடேசனே
ஆ பயந்த ஐந்தினோடு
பால் பழம் பஞ்சாமிர்தம்
அலைவாய்க் கரும்பு தெங்கு
தேன் சுகந்த சந்தனம்
நீ பயந்த யாவையும் நினக்களித்தேன் ஆடி
நேர்ததியாய் அனைத்து ஆடி
வாழ்த்துவாய் நடேசனே
வில்லினால் அடிக்கவோ
வீசுகல் பொறுக்கவோ
மிதித்த பாதுகை பிரம்பை
மேலும் நான் எடுக்கவோ
நல்ல பிள்ளை என்னை
ஆளும் நாதனும் நீ அல்லவோ
நாளும் நான் படைத்த
சொல்லும் பூவும் கொள் நடேசனே
ஆட நீ எடுத்தாய்
அறிந்தவர் இயம்புவார்
அல்ல அல்ல என் தலைமேல்
சூட என்று சொல்கிறேன்
ஈடில்லாத தெய்வம் நீ
இடப்புறம் எடுத்த கால்
எந்த நோக்கில் என்று
சொல்ல வந்தருள் நடேசனே
மழுவெடுத்த எதை விளக்க
மன்று தோறும் ஓடினாய்
மதியெடுத்து சிரம் இருக்க
மந்தனாய் ஏன் ஆடினாய்
கழுதெடுத்த நடனம் ஆடும்
காட்டில் என்ன தேடினாய்
கையில் நான் எடுத்த தூபம்
கொளுவாய் நடேசனே
எடுத்த தூபம் ஆதியாவும்
ஏற்றருள் மகேசனே
இன்று நான் படைத்த யாவும்
உண்ணுவாய் சபேசனே
தடுத்த பண்டை வினையகற்றித்
தாங்குவாய் சர்வேசனே
சரணம் உன்னை அன்றி ஏது
தாங்குவாய் நடேசனே
வாழி நீ படைக்கும் தெய்வம்
மலர் அணை அமர்ந்த தாம்
வகுத்தளிக்கும் தெய்வம் கூட
அரவணை கிடந்ததாம்
ஊழி தோறும் ஐந்தொழில்
உவந்து செய்யும் ஈசனே
ஓய்ந்து சற்றென் நெஞ்சனைக்கண்
சாய்ந்து கொள் நடேசனே
ஓம் நமசிவாய ஓம் சிவாய நம ரூபனே
ஓதும் ஐந்து சபையில் ஆடும்
பாதனே சங்கீதனே
வாமியாய்த் தழைத்த சிவ
காமி காதல் நேசனே
மாறிலாத கருணை நீ
வழங்குவாய் நடேசனே