Friday, 1 March 2024

REASONING OUT

வேடிக்கையாக உள்ளது மனித வாழ்க்கையைக் கண்டால்.
Man's life amuses me.

அர்த்தமில்லாத ஒரு வாழ்க்கை.
Living aimlessly.

எதற்கு இந்த போலி வாழ்க்கை.
Why this guise?

எதற்கு போலியான வாழ்க்கை?
Why a dubious life?

மனிதனுக்கு சன்னியாசம் என்றால் சந்நியாசி போல் வனத்துக்குச் செல்ல வேண்டும்.
Speak about Sanyasam, one head for the jungles.

ஆசிரமம் திறக்க வேண்டும்.
One opens an ashram.

அவர்கள் நோய்களை நாம் குணப்படுத்த வேண்டும்.
I have to come to heal them.

அவர்களுக்கு பொன், பொருள் தர வேண்டும்.
I have to give them riches.

அவர் கேட்டதை எல்லாம் தர வேண்டும்.
I have to give all that they ask.

நான் சித்தி செய்ய வேண்டும்.
I have to carry out Siddhis.

இது குழந்தை தானமாக இல்லை?
Isn't this childish?

ஆசிரமம் எதற்கு?
Why the need for an ashram?

உங்கள் இல்லத்தையே ஆசிரமமாக ஆக்கலாமே?
You can turn your home into an ashram.

ஒவ்வொரு இல்லத்திலும் ஒரு ஆத்மா ஞானம் பெற்று இருந்தால் நம் பிரவேசிப்போம்.
We will come and walk each home if at least a soul in each home attains Gnanam.

ஒவ்வொரு இல்லத்திலும் ஒரு அகத்தியன் காணலாம்.
You shall see an Agathiyan in each home then.

அதற்கு நீங்கள் தயாராகிவிட்டீர்களா?
Are you ready for that?

ஆசிரமங்கள் எதற்கு? ... கூச்சல்.
Why ashrams? Only noise (chatter).

அவர் அவர் இல்லம் ஆசிரமம் ஆகட்டும்.
Let each home become an ashram.

உனக்கு ஏற்ற நேரம்.
In your own time.

நீ எப்பொழுது ஆனாலும் தியானம் செய்யலாம்.
You can do Dyanam whenever you please.

நீ உண்மையாக இருந்தாலே போதும்.
It is enough that you are truthful to yourself.

இதுதான் உண்மை.
This is the truth.

இதுதான் சத்தியம்.
This is a promise.

சித்தி செய்தால் தெரியும் அல்லவா என்னாகும் என்று?
You do know what happens if one does Siddhis, right?

சித்தி செய்தால் உனது தவ வலிமை குறையும்.
Your tapas will reduce in its strength.

தேவை இல்லாமல் சித்தியை பயன்படுத்த கூடாது.
Do not use Siddhis unnecessarily.

நாங்கள் பயன்படுத்துவது உலக நன்மைக்காக.
We use it for the good of the world.

நீங்கள் எதற்கு?
Why the need for you?

வேடிக்கை காட்டி பணம் சம்பாதிப்பதற்கு.
To put on a show and earn riches.

அதை செய்யாதே. அதில் மயங்கி விடுவீர்.
Do not do it. You shall be hooked to it.

ஆபத்தானது. அதுவே செருக்கு. அழிவுக்குக் கொண்டு செல்லும்.
It is dangerous. It shall lead to one's downfall.

ஏற்றுக் கொள்ள முடிகிறதா என் தர்மத்தை?
Can't you (the people) accept my Dharma?

ஒரு ஆத்மா மீண்டும் பிறவி எடுக்கும். 
A soul will take on another birth (and body). 

பிறக்க இருக்கும் ஆன்மாவின் உடலை எண்ணி அழுகிறார்கள்.
Why cry over the body?

ஜனனம் எடுத்த அனைவரும் இறந்து தான் ஆக வேண்டும்.
All that takes birth shall cease to live one day.

நான் உயிர் தருகிறேன்.
(Say) I give live.

அந்த ஆன்மாவால் என்ன பயன்?
Of what use is this soul then...

அவர்கள் உடலுக்கும் கடினம். வயதாகிவிட்டது.
It would be a burden to the body. It has aged.

தாய் தந்தைக்கு வயது ஆகிவிட்டது.
Your parents have aged.

நான் என்ன செய்ய முடியும்?
What can I do?

குழந்தை என்றால் சொல்லலாம்.
If it is a child, we can consider it.

வாழப் போகும் உயிர்.
It has much ahead in life.

நியாயமே இல்லையே.
It is not fair (to blame Agathiyan)

நானும் மனைவியுடன் உள்ளேன்.
I am with my spouse too.

எப்படிப் பிரித்து எடுப்பேன்?
How can I separate you?

 என்ன இது வேடிக்கையாக உள்ளது?

It is simply ridiculous.

நோய் வேண்டாம் என்றால் பயிற்சி போடு. வாசியைக் கட்டுப் படுத்து.
If you do not want illness put in practice. Tackle your breath.

யோகம் செய். உணவு முறைகளை பின் பற்று.
Do Yoga. Take care of your diet.

நீதான் செய்ய வேண்டும். 
You are the one who has to do it. 

நானா உன்னுள் புகுந்து அனைத்தையும் செய்ய முடியும்?
Am I to come within you and do it?

இனி நாங்கள் என்ன செய்ய வேண்டும் சாமி ?
What are we to do now Dad?

நீங்கள் இப்படியே இருங்கள்.
You just be yourself.

அவர் அவர் விருப்பம் போல் இருக்கட்டும்.
Let others be in their places.

நீங்கள் உங்கள் விருப்பம் போல் இருங்கள்.
You be in your place.

மனதை ஒரு நிலைப்படுத்தினால் எதுவும் தேவை இல்லை.
Once the mind is tackled, nothing else matters.

அனைவருக்கும் சுதந்திரம் வேண்டும்.
Everybody wants freedom.

இதற்கு தானே பிறவி எடுக்கிறோம்.
That is the reason for birth, right?

அனைத்தையும் இரசிப்பதற்கு, ருசிப்பதற்கு.
To cherish everything, right?

பின்னர் நாம் உள்ளே உணர்வு பெற்று, ஞானம் பெற்று, விட்டு விடுகிறோம்.
Then we gain the experiences, become wiser, and leave it all behind.

யார் தான் பிழை செய்யவில்லை?
Who doesn't make a mistake?

பிழையிலிருந்து சரிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
Learn from mistakes.

பின் நோக்கிச் செல்லக் கூடாது.
Do not repeat them.

நாம் வற்புறுத்தினால் பிறகு நாம் வெறுப்பைக் காண இயலும்.
If forced it would only lead to irritation.

காற்றைக் கட்டுப்படுத்த முடியுமா?
Can one stop the wind?

அதன் விருப்பம் போல அது இருக்கும்?
It blows to its liking.

ரசிக்க வேண்டும் ஒவ்வொரு வினாடியும், நொடியையும்.
Learn to cherish each moment.

அது தான் வாழ்க்கை.
That is living.

அதில் பாடம், படிப்பினை அறிய வேண்டும்.
There is experience and learning in it.

10 நிமித்தமாக இருந்தாலும் போதும், மனதை ஒரு நிலைப் படுத்தி, அன்பு செலுத்தி, ரசித்து பூஜை செய்ய வேண்டும்.
Even if it is just for 10 minutes learn to become focused, loving, and enjoy the puja.

அந்த காலத்தில் அது வேறு.
It was different in the past.

அவர்கள் காலத்துக்கு ஏற்ப செய்தார்கள்.
They did this according to their times.

இப்பொழுது வேறு.
Now it is different.

நாயன்மார்களின் கதைகளைப் படியுங்களேன்.
Read the stories of the Nayanmars.

இனிமையாக இருக்கும். எளிமையாக இருக்கும்.
It is both sweet and simple.

காட்டிற்குச் செல்ல வில்லை.
They did not run into the jungles.

தானம் செய்து நிற்பார்கள். சிறப்புகளைப் பாடி நிற்பார்கள்.
They did charity. They sang the praise (of God).

அதை இப்பொழுது கொண்டு வரலாமே.
This can be brought about now.

இது இப்போது நன்றாக ஒத்துப்போகும்.
It will be very relevant now.

புரிந்ததா?
Understand?

நீங்கள் ராமர் காலத்திற்குச் செல்ல வேண்டாம்.
You need not go back to the time of Sri Rama.

பெரிய புராணம் இப்பொழுது சரியாக வரும்.
Periya Puranam (a collection of the lives of the 63 Nayanmars) will be appropriate for current times.

புகழைத் தான் பாடினார்கள். கீர்த்தியைத் தானே பாடினார்கள்.
They only sang the praise and powers (of God).

இல்லை தானம் செய்து இருப்பார்கள்.
Or would have done charity.

இல்லையானால் சிவ பூஜை செய்து இருப்பார்கள்.
Or done Siva Puja.

தெளிவு பெற்றாயா?
Are you clear?

மகிழ்ச்சியாக உள்ளாயா?
(Looking towards the wife) Are you happy?

உனக்கு ஆனந்தமா?
(Looking towards me) Is it blissful?

பேரானந்தம்.
(Per Anandham) Extreme Bliss, right?

இன்று உங்களுடன் நேரம் செலவழிக்க தான் வந்தேன்.
I came today (a day ahead on 17 February 2024) just to be with you. 

SOME RADICAL MOVES

Agathiyar is here to break all existing laws observed by us. Indeed, the Siddhas were radicles in their time bringing much-needed change and eradicating superstitions and false practices. In coming to us over a couple of days recently, he pointed out all the flaws. 

சித்தர் வழிபாடு என்றால் எளிமை.
Siddha worship is in simplicity.

அழகான வாழ்கை.
Beautiful life.

அழகாக வாழுங்கள்.
Live it.

இறைவனுக்காக வகுத்து கொள்ளுங்கள்.
Give a portion to God.

குடும்பத்திற்காக வகுத்து கொள்ளுங்கள்.
Give a portion to your family.

உங்களுக்காக வகுத்து கொள்ளுங்கள்.
Give a portion to your self.

ஜாதி, மதம் பார்த்து பிரித்து வைத்தார்கள்.
But man chose to be divided by race and religion.

பகவானை பின்பற்றுபவன் காஷாயம் அணிய வேண்டும், வனத்திற்கு செல்ல வேண்டும், ஜடா முடி வேண்டும், சைவம் வேண்டும்... மனதை அடக்கு. பிறகு ஏதடா சைவம்?
The path to Godhead (is generally understood to be) calls for adorning saffron, retreating into the jungles, growing long tresses, and becoming vegetarians...  Take charge of the mind (and not all those mentioned previously). What then is Saivam? (For one who cannot bring his mind under his control, he is a slave to these practices).

மற்றவர்களை துன்படுத்துகிறாய். மற்றவர்களுக்கு இம்சை செய்கிறாய் நீ. எதற்கு சைவம்?
You ill treat others. You torture others. So why Saivam (adopt vegetarianism and all things related)?

நான் கடவுள் என்கிறான்.
He claims himself as God.  

இந்த அவதாரம், அந்த அவதாரம்..
I am a reincarnation of this and that...

கடவுளுடைய அடியார் என்று யாரும் கூறுவதில்லை.
No one says he is a servant to God no more.

காஷாயம் அது பயங்கர வேஷம்.
The saffron is a horrible guise.

இப்போது காஷாயத்தை கண்டாலே, ஜடா முடியை கண்டாலே, நான் அஞ்சுகிறேன். 
Now, I am fearful of the saffron cloth and long tresses.

இப்படியே இருப்பது தான் சரி.
Being like this is right.

உன் தாய் தந்தை போல் குடும்பத்தில் கடமைகளை செய்து கொண்டே...
(Addressing my daughter) Be responsible like your parents...

இதுவே உண்மை.
This is the true (path). 

இதுவே மெய்.
This is the truth.

இதை யாரும் உணருவதில்லை.
No one realizes this.

காலத்திற்கு ஏற்ப நாங்கள் மாற வேண்டும்.
We have to change with the times.

புலால் இப்போது சகஜம் ஆகிவிட்டது.
Eating meat has become so common.

சைவம் யார் தலையில் திணிக்க இயலாது.
It is not possible to force vegetarianism on others.

ஆசை உள்ளது அல்லவா?
They (still) have the desire.

முடிந்தால் வாரத்தில் ஒரு நாள் மீனை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.
Take only fish once a week.

ஆசை தீர்க்கத் தானே பிறவி.
Taking birth is to exhaust all desires right?

தீர்த்துக் கொள் உன் ஆசையை.
Exhaust your desires.

ஆசை இருந்துகொண்டு உண்ணாமல் இருந்தால் பாவம்.
It is a sin to hold back the urge to take it.

ஆசை தீர உண்ணு.
Eat to your heart's content.

ஆனால் மனதை என்னிடம் விடு.
But give your mind to me.

இது வள்ளலுக்கு சற்று விருப்பம் இல்லாமல் இருக்கிறது.
But Vallal is not agreeable to this.

வள்ளல் இதை ஏற்க மறுக்கிறான்.
But Vallal (Ramalinga Adigal) does not accept (the need to change).

இந்த கலியுகத்தில் அனைவரும் வள்ளலைப் பின்பற்ற முடியும்?
Can everyone follow Vallal in this age of Kali (Yuga)?

என்ன தீட்டு?
What is contamination? (For lack of a word to describe Teethu in English, I have opted to use this)

உன் மனதில் குப்பை உள்ளது.
You have filth in your mind.

அது தீட்டு.
That is contamination.

பிறரைக் குறை கூறுகிறாய்.
You speak negatively of others. 

அது தீட்டு.
That is contamination.

பிற உயிர்களைத் துன்பம் செய்கிறாய்.
You hurt others.

அது தீட்டு.
That is contamination.

தீட்டு, என்னதீட்டு?
What is contamination?

மனிதன் இறந்தால் சந்தோசம் படுங்கள்.
When man dies rejoice.

அது கொண்டாட்டம் அல்லவா ?
It is a moment to be happy.

எதற்கு வீண் கண்ணீர்?
Why cry?

மீண்டும் பிறப்பு எடுக்கப் போகிறது.
(The soul) is going to be reborn again.

பற்று அறுத்து செல்கிறது.
It has broken all its ties and left.

மரணம், பிறப்பு, மாதவிடாய், இது இயற்கை.
Death, birth, menstrual periods is all natural.

சித்தன் வழிபாடு என்றால் இந்த இயற்கையோடு ஒன்றோடு கலப்பது.
Siddha path and worship is to be natural in all manners. 

இறைவன் உடலைக் கொடுக்கும் பொழுது நன்றாகத் தான் கொடுத்தான்.
God delivered us well.

நீங்கள் வீண் செய்து கொள்கின்றீர்.
But you are wasting it. 

சில பேர் கர்ம.
It is karma for some. 

பல பிறவியில் பல பாவங்கள் செய்து இருப்பார்கள்.
One might have done many sins in numerous births.

கொடூரமாக இருந்திருப்பார்கள்.
They might have been horrendous.
 
அதற்குக் கிடைத்த தண்டனை.
It is paytime.

உன்னால் முடிந்த தர்மத்தை செய்து விட்டு அமைதியாகச் சென்று விடு.
Do whatever charity you can and move on without further ado.

Wednesday, 28 February 2024

A BREAK

எமது எழுத்துக்களில் ஏதும் பிழை இருந்தால்...
If my writings are flawed...

அது நீயா எழுதுகிறாய்?
(Before I could finish my question Agathiyar like Tavayogi puts another question back to me) Are you the one writing it? (Hinting that it is his work entirely)

As I would not want to add to the confusion that already exists as it is in the spiritual arena, I had asked Agathiyar when he spent some quality time with us over two days on 17 and 18 February, if there were flaws in my writing, he immediately responded asking me if it was mine to take credit for. Though I knew he was giving me the subject right to the very words to use to convey the message, I had to be doubly sure that it was not misleading. I am willing to correct myself for I am also learning together.

I saw how a speaker giving a talk distorted the facts by telling us that there was no past and future birth. It surprised me too for the very first lesson in Siddhahood was knowing our karma and past births. After Agathiyar himself came to point out the flaw I was prompted to bring this to his attention. I spoke to him in private over the phone. He admitted that he used to say this because many were either caught very much in the subject of karma and never lived their lives fully or never bothered about their lives leaving everything to another moment and another birth. Though his intention was good to have them live in the present moment, he had distorted the truth. I did not want him to repeat it in his future talks. He responded positively telling me that he shall refrain from saying the same in the future. One now wonders how much of all the things we took on and adopted is the genuine truth.

Devotees often share their "adventures" and "travels" to other planes, with me, remembering them either after returning from a brief span of coma or encounters with death or in others after having sailed through the oceans and seas of space in their meditations. I have never had any of these experiences (as yet). Neither am I interested to see nor know. When we cannot fully comprehend the very soil and ground we stand on, the tattvas that govern and drive us, the breath that keeps us alive, and the soul that had accompanied us from day one of our conception, of what use is this additional baggage of knowledge or experience of the unknown frontiers? When we cannot bring ourselves within and fully comprehend the internal journey, why ponder upon this external journey across time and space? Then again where would one start to know these other and outer worlds, dimensions, planes, and spaces? We would not possibly see all of these in one short life span of ours. Even the learned in our midst cannot possibly explain in lucid detail. Only the one who has returned from there can give us a detailed account provided he remembers or is allowed to retain these sights and experiences and divulge these sightings. Then again would it be absolutely intact in its original form when it comes to our dining table?

When there are many unresolved questions in our midst why ponder about that which is beyond our reach and comprehension? For instance, who is this Shanmugam Avadaiyappa? Is he this body? Is he this breath? Is he this soul? Does this body respond to the call of his name? Does a dead body arise when called to do so? Does the breath that initially comes and goes, when it decides to leave for good, respond to the calling (of this name)? Does the soul that departs return to the body when the name is called out? It sure does seem so for how can someone wake up when his name is called out in his sleep? So is the name accorded that of the soul? 

We are asked to call out the names of Siddhas, and recite and chant them. The Siddhas respond accordingly too. So am I correct to deduce that the Siddhas, who walked the ground in the past and either entered the state of Samadhi living very much alive in their Gnana Degam or bodies that are kept hidden from view; the Siddhas who chose to go further and merge with the wind with the Pranava Degam; and those who merged with the light eventually in their Oli Degam, respond to their last known names? 

So am I correct to deduce that just as this skin, liver, brain, lungs, heart, kidney, spleen, pancreas, thyroid, and joints are not Shanmugam Avadaiyappa, and neither is the composite of all these that is the body Shanmugam Avadaiyappa, so too the numerous forms and names is but a reflection, characteristic, personality, form and name of the One or Yegan that is both formless and nameless.

I have only walked you through some 84 minutes of the conversation my family had with Agathiyar over the two days of him walking in our midst recently. I needed a break to digest the many things he told us. There is more that I shall transcribe and post in days to come. Agathiyar did ask why we do not have saints among the many who devote their lives to temple service? It is a profession to them. It stops at that. To remain in Sariyai and Kriyai would not suffice. One has to take the plunge into Yogam and Gnanam. The Siddhas are desperately looking for souls to work through them. Hence that is what he is doing with the handful willing to listen at AVM. To those dragging their feet, he is using all means to have them take the plunge. Agathiyar spoke about another touchy subject - that of vegetarianism too. Ramalinga Adigal has laid too high a standard, that man now cannot possibly comply with, reach up to, or achieve. The divine is in negotiation to loosen the tight and rigid standards so that many among us can follow and abide. This is akin to how Agathiyar came to speak in the Tamil language of present-day use in the Nadi, coming down from his adoption of the Tamil language from the Tamil Sangam, for the sake of souls seeking the Nadi after Nadi reader Hanumathdasan Aiya placed the request before him. 

Tuesday, 27 February 2024

A NEW JOURNEY STARTS

சித்தர் வழிபாடு என்றால் எளிமை.
The Siddha worship means simplicity. 

எளிமையில் தான் நான் உள்ளேன்.
I am in simplicity.

உங்கள் ஆடம்பர கோவிலில் இல்லை.
Not in your prestigious temples.

மணத்தால் என்னை நினைத்தாலே போதும்.
The thought of me is sufficient.

அன்பான பக்தி, தெளிவான மனம் இருந்தாலே போதும்.
Love, devotion, and a clear mind are sufficient.  (Admin: For lack of a precise word in English for the Tamil equivalent மனம் (Manam) I am referring to it as mind. Please bear with me till I discover the right word.)

எப்போது நாம் பயணிக்கப் போகிறோம் சாமி?
When are we going to travel?

நாளை முதல் ஆரம்பம் (18.2.2024).
Beginning tomorrow (18.2.2024).

இறுதி பயணத்திற்கு யாரும் வர மாட்டேன்கிறார்கள்.
Nobody wants to join in this last lap of the travel.

தேறவில்லை.
No one qualifies.

இதற்கு எல்லாம் காரணம் நம்பிக்கை இல்லாமை.
The reason for all these is a lack of faith and belief.

நம்பிக்கையை குருவிடம் நம்பி ஒப்படைப்பதில்லை.
Not surrendering one's faith to the guru.

பக்தி எது பக்தி.
What is bhakti (devotion)...

நம்பிக்கை இல்லாத பக்தி.
If there is no faith in it.

குருவே வந்தாலும் கலியில் பலிக்கிறார்கள்.
Even if the guru comes in this age of Kali, he is ridiculed.

வேர் என்ன செய்வது?
What else (am I) to do?

உண்மையை யாரும் உணர்வதில்லை.
Nobody realizes the truth.

வீண் சிந்தனை.
Unnecessary thought.

வீண் குழப்பம்.
Unnecessary confusion.

ஏன் இப்படி உள்ளார்கள்?
Why are they like this?

இவ்விடத்தில் யார் பொய் உரைப்பார்கள்?
Who (dares) lie in this place? (Agathiyar's Vanam)

நடித்து என்ன கிடைக்கும்?
What is the point of making others believe?

வீண் சந்தேகம்.
Unnecessary suspicions.

தவயோகி வந்த இடம்.
This is the place Tavayogi stepped into.

நாங்கள் வாழும் இடம்.
This is the place we live.

யாராவது பொய் கூற முடியுமா?
Can anyone lie here?

நடிக்க முடியுமா?
Or pretend here?

இவ்விடத்தில் யாரும் பொய் உரைக்க இயலாது.
No one can lie here.

சந்தேகம் மனிதனை அழிக்கிறது.
Suspicion kills man.

எப்பொழுது தெளிவு பெறுவீர்?
When are they going to gain clarity?

விமர்சனம் செய்பவர்கள் செய்யட்டும்.
Let those who review (these happenings) do as they please.

ஞானம் பெறுபவர்கள் பெறட்டும்.
Let those keen on Gnanam receive it.

ஒரு குருவின் பனி ஞானம் தருவது.
A guru's job is to pass on Gnanam.

எப்படி, எப்போது தருவது நான் அறிவேன்.
The how and when of it only I (Agathiyan) know.

ஒவ்வொருவருடைய ஞானம் வேறு.
Each person's Gnanam is different.

வள்ளல் வேறு.
Vallal (Ramalinga Adigal) (Gnanam) is different.

சேஷாத்திரி வேறு.
Seshadri (Swamigal) (Gnanam) is different.

ரமணா ரிஷி வேறு.
(Bhagawan) Ramana Rishi (Gnanam) is different.

புரிகிறதா?
Do you understand?

எல்லாம் ஒன்றாக இருந்தால், மனிதனுக்குச் சலித்து விடும்.
If all (Gnanam) is one, it would bore man.

உண்ணும் உணவே பல சுவை...
If even the taste of the foods we eat varies...

ஞானம் மட்டும் ஒன்றா?
Would Gnanam be one?

மௌனமாக இருக்கச் சொல்வது எதற்கு?
Why ask us to be silent (adopt Mounam)?

வீண் சிந்தனை வராது.
No unnecessary thoughts shall arise.

வீண் பேச்சு வராது.
No unnecessary talk arises.

நீ மௌனம் கொள்ளும் பொழுது உன்னுள் ஞானம் வரும்.
When you quieten down, Gnanam arises in you.

கேள்விக்கு விடை கிடைக்கும்.
You shall receive the answers to your queries.

என்னை நோக்கிப் பயணிப்பீர்கள்.
You shall travel towards me.

அவ்வளவு தான். வேர் ஏதும் இல்லை.
Thats all. Nothing else.

சில நேரம் நமக்கு தனிமை தேவைப்படும்.
At times we need that quiet moment.

உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
It is good for your health.

உடலுக்கும் நல்லது.
Good for your body (too).

மௌனம் எப்படி உள்ளது?
(Addressing me) How is your solitude?

ஆனந்தம் பெருக்கிறீர் அல்லவா?
You are seeing bliss, right?

அனைத்தும் உங்கள் நன்மைக்கே.
It is all for your good.

எனக்கு ஏதடா?
It is not for me.

எனக்கென்று நான் என்ன கேட்டேன்?
What did I ask for myself?

மனதைக் கொடுங்கள் என்றேன்.
I asked that you give me your mind.

பால் அபிஷேகம் எதற்கு?
Why do we pour milk to statues?

பழங்கால கோவில்களில் சிலை உள்ளது அல்லவா. பால் ஊற்றும் போது, அதில் உள்ள பாஷாணங்கள் காற்றில் பரவி மக்களுக்கு மருந்தாகும்.
(Agathiyar refers to the temple statues made by the Siddhas out of Pasanam and worshipped in the past and not present-day glamorous temples built with the comfort of its devotees in mind). When we do libation to these statues with milk, the Pasanam in these statues is released in the air and comes as medicine to people. 

புரிந்ததா?
Do you understand?

அதற்குக் கொஞ்சம் பால் போதுமே.
A little milk is enough, right?

பூ எதற்கு?
Why flowers?

பூவின் மணம் நுகரும் போது மூளைக்கு மருந்தாகும்.
When its smell is inhaled it becomes medicine for the brain.

மூளைக்குச் செல்கிறது. மனம் சாந்தம் அளிக்கும்.
It induces calm in us.

புரிந்ததா?
Understand?

அதற்குக் கொஞ்சம் போதும்.
You only need a little.

இனிமையான நாதம் எதற்கு?
Why pleasant music?

மனக் கவலையுடன் கோவிலுக்கு செல்கிறார்கள். நாதத்தைக் கேட்டவுடன் இன்பம் கொள்கிறார்கள்.
If one goes to the temple with a heavy heart, he feels relieved hearing pleasant music and tunes played.

கற்பூரம் எதற்கு?
Why (light a) camphor?

ஆரத்தி எடுக்கும் பொழுது உங்கள் ஒளி வட்டம் சுத்தம் பெறுகிறது.
When Aarathi with camphor or showing of the flame is done your aura is cleansed.

மனது  ஒரு நிலை ஆகிறது.
The mind becomes composed.

மணியோசை கேட்கும் பொழுது ஒரு நிலை பெற்றிருக்கிறாய் அல்லவா?
(Similarly) Hearing the temple bells sound, we come to a certain state of mind, right?

அனைத்திற்கும் அர்த்தம் உண்டு.
It all has a reason (and meaning to it).

Monday, 26 February 2024

FREED AT LAST

இன்று அகத்தியர் வனம் உயிர்ப்பித்தது. அனைவருமே இப்படியே ரம்மியமாக இருங்கள். அழகாக உள்ளாய். இளமையாகி விட்டாய். 
Today Agathiyar Vanam is revived. Be yourself. Beautiful and Youthful.

கறு கறு என்று வருகிறதே.
(Referring to my hair) It is blackening.
 
இதைக் கண்டாலும் நம்புகிறார்களா?
And yet they fail to believe.

(இவர்கள்) காண இன்னும் என்ன செய்ய வேண்டும்? இன்னும் நான் என்ன செய்ய வேண்டும்?
What more should I do?

காட்சி கொடு கொடு.
"Give me your vision". "Give me your vision"

என்னைக் காண உங்களுக்குத் தகுதி இருக்கிறதா?
Have you worked hard enough to be eligible to see me?

அதைச் சிந்திக்க மாட்டேன்கிறார்கள்.
They do not think likewise.

அதற்கு நீ தகுதியானவன்.
You are eligible for that.

மற்றவர்கள்?
What about the rest?

எவ்வளவு பெரிய பயணம்.
What a journey?

எவ்வளவு பேர் நாடகம் (ஆடுகின்றனர்).
So many dramas.

நீண்ட பயணம் அப்பா.
It was a long journey (too).

ஆரோக்கியமான பயணம்.
A healthy journey (too).

சில சில சலசலப்புகள் வந்தாலும் சூரியனைக் கண்ட பனிபோல் மறைந்துவிட்டது.
Though we saw through some turmoil, it all disappeared as the mist disappears, when the sun comes out.

நோய் கண்டு இருந்தால் இந்த மாதிரி பயணிக்க முடியுமா அப்பா?
Could we have journeyed if we were ill?

முடியாதடா மகனே.
No way my son.

நன்றி அப்பா.
Thank you, Dad (for the good health).

நால்வர் இருந்தால் என்ன?
It does not matter if there are four (devotees).

ஒருவர் இருந்தால் என்ன?
Or one.

உண்மையான நேசம் ....
True love..

இம்மண்ணில் இந்த மார்க்கம் வளர வேண்டும்.
This path (Margam) must grow in this soil.சொல்லுங்கள் பா.
Tell me Dad.

நீங்கள் எல்லாம் கேட்பது எனக்கு விந்தையாக உள்ளது.
What they ask is pretty awkward.
 
நீங்கள் கேட்கும் கேள்விக்கு எல்லாம் நான் விரைவில் பதில் சொல்லி ஆகவேண்டும்.
They expect me to reply to all their queries immediately.

எனக்காக என்ன செய்கிறீர்கள்?
What have they done for me?

நான் உணவு கேட்கவில்லை.
I do not ask for food.

உடை கேட்கவில்லை.
I do not ask for attire.

பயிற்சி கேட்கிறேன்.
I ask that they put in practice (Pranayama or Vaasi).

தியானம் கேட்கிறேன்.
I am asking for them to meditate.

அன்பு கேட்கிறேன்.
I ask for their love.

பக்தி கேட்கிறேன்.
I ask for their devotion.

நம்பிக்கை கேட்கிறேன்...
I ask for their belief....

குரு தட்சணையாக.
Only these are a token or Guru Dhaksanai to the guru.

பேர் ஆசைப் படுகிறீர்கள்.
Instead, they are greedy.

ஞானத்திற்குப் பேராசை படுங்கள்.
Be greedy for divine wisdom or Gnanam.

கை கூப்பி வணங்குகிறேன்.
I shall salute you.

கலையைப் போதித்தேன்.
I taught the arts.

ஞானத்தைப் போதித்தேன.
I taught Gnanam.

நீங்கள் சரிவரச் செய்தீர்களா?
Did they follow as told?

இல்லை.
No.

பகிர்ந்து கொண்டீர்களா?
Did they share them?

இல்லை.
No.

உங்களில் தேக்கிவைத்து மடிந்து விடுகிறீர்கள்.
They shall keep it within themselves and take it to their graves.

இதற்காகவா நான் போதித்தேன் அதை?
Is this the reason I taught them?

நான் போதிக்காமலிருந்தால் நீங்கள் இவ்வளவு கடந்து வந்திருக்க மாட்டீர்கள்.
If I had not taught to them, they would not come this far.

இன்று நான் உடலிலிருந்து அளிக்கும் தெளிவு விட வேறு உண்டோ?
Today I come through my devotees. Is there any other better means to convey the message clearly?

இது போல் யாரும் போதித்தது உண்டோ?
Does anyone do this?

எவன் எவனோ சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு நான் கடவுள்.. முருகன்.. அம்பாள் ... இப்படி கையை நீட்டுகிறான்.. இந்த வேஷம் எதற்கு?
They sit in huge armchairs, self-proclaim themselves as Lord Murugan, Ambaal, and disperse the wants and needs of those before them. Why this disguise?

தீட்சை அளித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
Seeking multiple initiations or Dhiksa forever.

உபதேசங்கள் காதில் ஓதிக் கொண்டே இருக்க வேண்டும்.
Seeking Upadesam forever.

உன் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும்.
Seeking to solve their problems.

அப்பேர்பட்ட குருவைப் பிடித்துக்கொள்.
Go stay with these gurus (sarcastically).

அகத்தியனை மறந்துவிடு.
Forget Agathiyan.

தங்கராசன் அவர் உடலில் நான் கூடு விட்டுப் பாயும் பொழுது ஏன் அனைவரும் காண வில்லை என்று இப்பொழுது புரிகிறதா?
Now do you understand why no one saw me transmigrate into the body of Thangarasan (Tavayogi)?

அகத்தியன் தங்கராசன் உடலில் புகும் போது ஏன் அனைவரிடமும் நான் காண்பிக்கவில்லை என்று இப்பொழுது புரிகிறதா?
Do you understand why I did not show myself in Thangarasan when I transmigrated into him?

அவர் உணர்ந்தார்.
He realized.

அவர் உள்ளே மறைத்து வைத்துள்ளார்.
But he kept it to himself.

ஏனென்றால் நாளை அவரை விமர்சனம் செய்வார்கள்.
Because he would become the gossip and talk of the town.

இறைவனை அடைந்த பொழுது, தான் இறைவன் என்று உணர்வான்.
When one reaches God, he shall realize that he is God himself.

அதனால் தான் ஞானிகள் மௌனத்தில் செல்கிறார்கள்.
That is the reason the enlightened ones or Gnani remain in seclusion and silence.

அருள்வாக்கு வேறு.
Arul Vaakku or Giving divine guidance is different. (Admin: For lack of knowledge on the English equivalent of the Tamil word Arul Vaaku, I have translated it as divine guidance. Please bear with me.)

அது தெய்வம் என்று கூறி ஏதேதோ நடக்கிறது.
Much goes on beyond these practices.

புரிகிறதா?
Understand?

அருள் வாக்கு கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லக் கடன் பட்டு உள்லேனா?
Am I obliged to answer to your queries and needs?

நான் உங்கள் அடிமை அல்ல.
I am not your servant.

அங்கு வரும் அவர் பார்க்கும் தெய்வம் வேறு.
Who and what is seen there is different.

நான் இங்கு அளித்துக் கொண்டு இருப்பது வேறு.
What I am dispensing here is different.

ஆப்போ இங்கு நடப்பது சாமி?
Then what is happening here?

இது போதனை.
These are teachings.

இது அருள்வாக்கு அல்ல.
These are not Arul Vaakku.

நான் அருள்வாக்கா தருகிறேன்?
Am I giving divine guidance?

ஞானம் மற்றும் தான்.
Only Gnanam.

அருள்வாக்கு தருவதெல்லாம் எங்கள் பணி அல்ல.
It is not our job to give divine guidance.

இங்கு என்ன அருள் வாக்க கூறுகிறேன் ?
What divine guidance have I given?

உனக்கு எப்போது பிறப்பு, இறப்பு, திருமணம் என்று கூறுகிறேனா?
Am I revealing when is your birth, death, wedding?

மற்றவர்களை மன நிறைவு செய்ய இதையெல்லாம் எனக்குக் கூற விருப்பம் இல்லை.
I am not here to appease others needs.

ஞானம் மட்டும் தான்.
Only Gnanam.

ஞானம் மற்றும் பெற்றுக் கொள்ளுங்கள்.
Seek only Gnanam.

ஏன் மற்றவற்றிற்கு அலைகிறீர்கள்?
Why are they seeking for other (riches)?

போதனை மற்றும் தான்.
Only teachings.

வெளியே கூறினால் விமர்சனம்.
If let out, people shall tend to review.

நானும் வந்து கொண்டு தானே போதிக்கிறேன்.
I am continuously coming for only this purpose (to teach).

திருமூலர் கூடு பாய்ந்தார்.
Tirumular transmigrated.

ஞானம் மற்றும் போதித்தார்.
He only taught Gnanam.

அருள்வாக்கு சொல்ல வில்லை.
Not to deliver divine guidance.

எந்த சித்தரும் அருள் வாக்கு சொல்ல வில்லை.
No Siddha gave Arul Vaakku.

அதை நன்றாகக் கவனியுங்கள்.
Do pay attention (to this).

ஞானம் ஞானம் மட்டும் தான்.
Only Gnanam.

புரிந்ததா?
Do you understand?

சித்தன் வருவது ஞானத்தைப் போதிப்பதற்கு.
A Siddha comes to deliver Gnanam.

உங்கள் சுய காரியத்திற்கு அல்ல.
Not to fulfill your individual needs.

குழப்பிக் கொள்கிறார்கள்.
Do not be confused (over these two).

நான் அன்புக்கும் பக்திக்கும் அடிமை.
I bow only to love and devotion.

மற்றவை எதற்கும் இல்லை.
Not to others.

புரிந்ததா?
Do you understand?

நன்றாக இருங்கள். உள்ளே நோக்கிப் பயணிக்காமல் அங்கேயே இருங்கள்.
Stay well. Do not go within. Stay where you are. (Agathiyar says to them sarcastically)

அவ்வளவுதான்.
That is all.

அந்த இடத்தில் இருங்கள்.
Stay where you are.

பிறப்பு எடுத்து மீண்டும் பயணீங்கள்.
Take another birth and come back to continue.

உள்நோக்கி பயணிக்கும் வரை, பிறப்பு எடுகிறார்கள்.
There is rebirth as long as you do not go within.

எப்போது உள் நோக்கிப் பயணிக்கிறார்களோ அப்பொழுது முடிவடையும்.
The cycle of birth shall come to a close when you go within.

தெளிவு பெற்றீரா?
Are you clear now?

இதுதான் ஞான போதனை.
This is dispensing Gnanam.

கேட்டிரு ஞானத்தைப் போதிப்பீரா என்று?
You did ask if I shall teach Gnanam (right?).

சுவடியில் எவ்வளவு தான் போதிப்பது.
How much can I relay in the Suvadi (Nadi, Olai)?

நான் அவ்வளவு போதித்தாள் நாடி ஆசான் ரத்தம் தான் கக்குவான்.
If I were to, the reader shall spit blood (due to straining the vocal cords where the muscles and vocal cords are injured through overuse).

அதைச் சுருக்கமாகக் கூறி தேவைப்படும் போது ஒருவரைத் தேர்வு செய்து அதை அவர் கூறட்டும்.
Hence I shall briefly explain, select a reader, and have him continue revealing the rest.

அவர் வாயால் இதைப் பதிவு செய்து போடுங்கள்.
Record what he has to say and upload it.

அவர்களே கூறுகிறார்கள் அல்லவா?
It is them relating right? (hinting that people prefer to hear Agathiyar speak in the Nadi rather than coming through individuals)

நீ முதலில் நாடி ஆசானைக் கண்டு இவர்களின் பைத்திய தனத்துக்கு ஒரு முற்றுப் புள்ளி வை.
Reach out to the Nadi Nool Aasan and bring an end to all this madness.

காணொளியைப் போடுங்கள்.
Upload this video.

நாடி நூல் ஆசான் கூறுகிறான் அல்லவா. பிறகு என்ன சந்தேகம் ?
No one shall doubt him.

முன்னர் ஒரு நாள் "தவயோகியுடன் ஒரு பொழுது" என்று ஒரு காணொளி வெளி இட்டிருந்தோம். இதனை வெளியிட முடியுமா ....
I had made a video of "An Evening with Tavayogi" back then and uploaded it. But this.. how can I share?..

பதிவு மட்டும் செய்.
Record then.

உன் முகத்தைக் காண வேண்டும் என்றால் காட்டிக்கொள்.
If you wish to show yourself, go ahead.

விருப்பம் இல்லை என்றால் உன் உருவம் இல்லாமல் காணொளி செய்.
If you wish not, make the video without showing yourself.

அவ்வளவுதான்.
That's all to it.

நான் பேசியதை நீ பேசி காணொளி செய்.
(Otherwise) Upload what I said in your voice.

அதற்கான காணொளியைச் செய்.
Get down to making this video.

இல்லை அப்பா. நான் எழுத்தோடு நிறுத்திவிடுகிறேன்.
No Dad, I prefer to stick to writing.

உனக்கு மிகவும் ஆர்வமாக இருந்தால் நீயே காணொளி செய்.
If you are ambitious, you make the video.

அல்லது எழுத்தோடு செய்.
Otherwise, just stick to writing.

உன் ஆசைக்கு நான் கடிவாளம் போட விருப்பம் இல்லை.
I do not want to chain your desire.

நான் மறைவிலே இருக்க விரும்புகிறேன்.
I prefer to stay hidden.

இவ் உடலில் மறைந்து கொண்டு இருக்க விரும்புகிறேன்.
To hide in this body.

வெளி வராது இருக்கக் காரணம், பதில் கிடைத்ததோ?
Now you know the reason for not exposing myself right?

நாடகம் செய்தேன்.
It was my play (lila).

கண்டாய் அல்லவா?
You saw it right?

இன்றே என்னை முழுதும் கொடுத்து விட்டேன்.
I have given myself altogether today itself.

நாளையும் செய்யவேண்டுமா இந்த சத்சங்கம் என்று தோணுகிறது?
I am asking myself if I need to come again tomorrow for another Satsang? (the event that we jointly planned to speak about the Siddha way and health.)

நீங்கள் பரிபூரணமாக உங்கள் ஆன்மாவை என்னிடம் தந்தது போல்... வருபவர்கள் தருவார்களா? ....
You have given your Atma to me completely... (as for) those who shall arrive (tomorrow)....(Agathiyar raises his doubts if those who come tomorrow shall give themselves completely to what he has to say as we did).

இன்றே நான் குறிப்பிட வில்லையா?
I did mention today right? ...

யார் இருப்பவர்கள் இருக்கட்டும் என்றேன்?
Who chooses to stay shall stay.

அவர்களுக்குப் போதித்து என்ன பயன்?
What is the point in teaching others?

சரியை கிரியை பார்த்துக் கொள்ளுங்கள்.
Be in Sariyai and Kriyai (sarcastically).

அப்படியே இருந்து கொள்ளுங்கள்.
Just stay there (sarcastically).

உங்களைத் தவிர வேறு யாரும் தயாராக இல்லை.
Nobody is as ready as you are.

உனக்கே தெரியும்.
You do know, don't you?

தொண்டு செய்.
Help others.

உன்னில் உன் ஆன்மாவை உணர உனக்கு நீ தொண்டு செய்ய வேண்டாமா?
But don't you need to help yourself to know your Atma?

உன்னிடம் பேசியது எனக்குப் பயன் அளிக்கிறது.
It gives me much benefit in speaking to you.

எனக்குக் கீழே இறங்கி வர விருப்பம் இல்லை.
I do no not want to come down from my place.

என்னுடைய இன்றைய நாடகம் முடிவுற்றது.
My drama for this day comes to an end.

நாளை ஒரு நாடகம்.
Tomorrow we shall stage another.

நாளை நான் இங்கு அமைதியாக அமர்ந்து கொள்கிறேன்.
I shall sit quietly (among others gathered) tomorrow.

நீ கேள் ஒவ்வொருவருடைய பயணம் எங்கே இருக்கிறது (என்று)?
Ask each (of those gathered) where they stand on their journey?

எதை நோக்கி செல்லுது?
Where is it leading to?

நான் அமைதியாகக் கேட்டுக்கொள்கிறேன்.
I shall listen quietly.

எந்த நிலையில் உள்ளார்கள்?
What standing are they in?

கேட்டுத்தான் ஆக வேண்டும்.
There is a need to ask.

நீ தெளிவு பெற.
You shall get clarity.

எனக்கு அல்ல.
Not for me.

உமக்கு.
For you.

நீ அவர்களை நினைத்து வருத்தம் கொள்கிறாய் அல்லவா?
You are worried about their progress, right?

தெய்வமே வந்தாலும் நம்புவார்கள் இல்லை போலும்?
Even if God we to come, I wonder if they would believe?

அதான் கலி.
That is Kali (Yuga).

பித்தனைச் சித்தன் என்பார்கள்.
They would praise the mad as Siddhas.

சித்தனைப் பித்தன் என்பார்கள்.
They would condemn the Siddhas as mad.

மக்களுடன் நடமாடு.
Mingle with people.

பின்னர் தெரியும் அவர்களின் ஆன்மீக பயணம் என்னவென்று.
Then you shall know how each individual's spiritual journey is unfolding.

இங்கேயே நீ அமர்ந்து இருந்தால் ஒன்றும் அறியாது.
You will never know if you stay indoors.

மக்களோடு கலக்க வேண்டும்.
Go mingle with people.

அதனால் தான் நாங்கள் கலக்கிறோம்.
That is what we do too.

நாங்களே கலக்கிறோம் உனக்கு என்ன.
When we can do it, what restricts you?

உள் நோக்கி பயணம் ...
But Dad, you had me go within..

அதுதான் முடிவு உற்றதே.
That is over.

பின்னர் என்ன?
What then?

என்ன இது?
What is this?

பயணம் முடிந்து விட்டது.
Your journey has ended.

பிறகு என்ன?
What then (is holding you back)?

நீதான் தெளிவு பெற்றாயே.
You have attained clarity.

நீதான் சரியாக உள்ளாயே.
You are on the right path.

நீ தெளிவாக உள்ளாய்.
You are clear (in your thoughts).

உனக்குக் கிட்டிவிட்டது உள் பயணம்.
You had the privilege to travel within.

இப்பொழுது என்ன தயக்கம்?
Why the hesitation?

நீ இப்படி இருந்தால் அவர்கள் தவறாக எண்ணி இங்கு வரமாட்டார்கள்.
If you are like this (living in solitude) they shall have the wrong perception and never come here.

புரிந்ததோ?
Understand?

உன்னைக் கண்டு அனைவரும் அஞ்சுகிறார்கள்..
Everybody is fearful of you.

நீ கலந்தால் தான் மற்றவர்கள் அஞ்சமாட்டார்கள்.
When you mingle with others they shall lose their fear (of you).

நீ சரி செய்தால் எல்லாம் சரியாகி விடும்.
If you correct your stand, everything else will fall into its place.

இனியும் தனிமை வேண்டாம்.
Do not maintain the solitude any longer.

சொந்த பந்தம் சென்று பார்.
Go see your relatives and kin.

அவர்களின் நாடகத்தைப் பார்.
Go see their drama (too).

கதைகளைக் கேள்.
Listen to their stories.

நகைத்து விடு.
Have a good laugh.

போ.
Go.

திருமணத்திற்குப் போங்கல்.
Attend marriages.

குடும்பத்துடன் செல்லுங்கள்.
Go with your family.

குடும்பத்துடன் சென்று அவர்களின் நாடகத்தைக் கண்டு நகைத்து விடுங்கள்.
Go with the family, watch the drama and have a good laugh.

ஒன்றாகத் தம்பதிகளாய் செல்லுங்கள் இனிமேல்.
Henceforth go as couples.

மக்களோடு கலந்து விடுங்கள்.
Mingle with people.

செல்.
Go.

புரிந்ததோ?
Do you understand?

தெளிவு அடைந்தாயா?
Are you clear?

தம்பதிகளாகச் செல்லுங்கள்.
Go as couples.

குடும்பத்துடன் செல்லுங்கள்.
Go with the family.

இனி குடும்பத்துடன் தான் செல்ல வேண்டும்.
Henceforth you should go with the family.

தாய் வீட்டிற்குச் சென்றாலும், எங்குச் சென்றாலும்.
Whether going over to your parent's home or elsewhere.

காண வேண்டாமா தாய் தந்தையரை?
Don't you need to see your parents?

உன் கடமையைச் சரிவரச் செய்.
Carry out your responsibilities.

உனக்குத் திருப்தி தானே.
(Looking towards the wife) You are satisfied right?

ஆசைதானே ஒன்றாக குடும்பத்துடன் செல்ல வேண்டும் என்று.
You are happy to go places together and with the family, right?

மகிழ்ச்சியா?
Are you happy?
 
செல்.
Go.

எங்கே வேண்டுமானாலும் செல்.
Go wherever you want.

சுற்றுலாவுக்கு போ.
Go on a tour.

அனைவரும் அழைத்துச் செல்.
Bring everyone along.

பேரக்குழந்தைகள் அழைத்து சுற்றுலா போ.
Bring your grandchildren on trips.

அவர்களுக்கும் ஆசை உண்டு அல்லவா..
They too yearn for these moments right..

உன்னோடு சுற்றவேண்டும், திரியவேண்டும் என்று?
To travel with you?

பேர பிள்ளைகளை அழைத்துக் கொண்டு ஊர் திரிவாய்.
Bring your grandchildren along.

அவர்களுக்கும் ஆசைதானே.
They too yearn for this moment.

அவர்கள் என்ன அறிவார்களா?
What would they know?

புது மாப்பிள்ளை புது பெண் சுற்றித் திரியுங்கள்.
You are newlyweds now. Go places.

உன்னை இப்படி அடக்கிக் கொண்டால் சித்தர் வழிபாடு என்றால் வீட்டில் அடைந்து விட வேண்டும் என்றாகி விடும்.
If you keep to yourself further it would reflect wrongly on others that in the worship of Siddhas, one has to stay indoors.

நீ சற்று மாறு.
You change.

பிறகு எங்கும் மாற்றம் இருக்கும்.
And you shall see the change around you.

புரிந்ததா?
Do you understand?

காற்றோடு கலந்து விட்டாய்.
You have merged with the wind.

சுற்றித் திரியுங்கள் பறவை போல்.
Soar like a bird.