Wednesday, 30 September 2015

THE THIRUARUTPA PART 1

Ramalinga Adigal documented every single spiritual experience of his in the form of songs, the Thiruarutpa. But he had no intention to publicize them initially.

Dr MP Sivagnanam in his "Vallalar Kanda Orumaippadu", translated by Dr R Ganapathy, writes, "When followers wished to collect and publish his songs in book form, Ramalinga Vallalar did not give his consent"

Adigal's disciples Thozhuvor Velayudha Mudaliar and Irukkam Rathina Mudaliar wished to bring out "an anthology of Adigal's songs as a magnum opus" but were refused permission. Irukkam Rathina Mudaliar did not give up but instead went on a fast until Adigal consented and submitted.

According to Dr MP Sivagnanam, Adigal on hearing about Irukkam Rathina Mudaliar's fast wrote to him, "From the day I left the city of Madras and settled here, I had composed many verses. I did not aim to have all of them written down. They are scattered at random. But, they can be gathered in two months. I shall go over there in Panguni (March) and I shall bring them with me. This is a promise. I shall make them available to you at your place by all means ..." hence assuring Irukkam Rathina Mudaliar and bringing his fast to an end.

Thus the Arutpa came to be gathered, collected, compiled and published. Respecting the Adigal's wishes, Thozhuvor Velayudha Mudaliar only published the first four canons or Thirumuraigal in 1867. In 1880 the fifth canon was published by Irukkam Rathina Mudaliar. The devotees of the Universal, Pure and Righteous path movement in Madras published the sixth canon in 1885. 

Adigal's songs made its way into temples, schools and homes. Dr MP Sivagnanam writes, "After the publication of the volume of the songs of Divine Grace (Arutpa) they were recited in every nook and corner. The songs were widely and warmly received."

By composing several songs in the traditional folk metre, Adigal took his songs to the rural folks in the villages, thus bringing his highly esoteric songs to the masses. 

Following in the footsteps of Manickavasagar and his composition Thiru Unthiyar, Ramalinga Adigal composed his Thiru Unthiyar. It is interesting to note that many saints followed suite; the Upadesha Unthiyar of Sri Ramana Maharshi; the Tiru Unthiyar of Sri Muruganar; the Avirodha Unthiyar of Santalinga Swamigal and the Thiru Unthiyar of Uyyavantha Teva Nayanar.

The Thiru Unthiyar (திரு உந்தியார்), Kaliththaazisai (கலித்தாழிசை), is one of those songs that blends well with a local game or play. 

064. திரு உந்தியார்

1. இரவு விடிந்தது இணையடி வாய்த்த
பரவி மகிழ்ந்தேன்என்று உந்தீபற
பாலமுது உண்டேன்என்று உந்தீபற.

2. பொழுது விடிந்தது பொற்பதம் வாய்த்த
தொழுது மகிழ்ந்தேன்என்று உந்தீபற
தூயவன் ஆனேன்என்று உந்தீபற.

3. தூக்கம் தொலைந்தது சூரியன் தோன்றினன்
ஏக்கம் தவிர்ந்தேன்என்று உந்தீபற
இன்னமுது உண்டேன்என்று உந்தீபற.

4. துன்பம் தவிர்ந்தது தூக்கம் தொலைந்தது
இன்பம் கிடைத்ததென்று உந்தீபற
எண்ணம் பலித்ததென்று உந்தீபற.

5. ஞானம் உதித்தது நாதம் ஒலித்தது
தீனந் தவிர்ந்ததென்று உந்தீபற
சிற்சபை கண்டேன்என்று உந்தீபற.

6. திரையற்று விட்டது செஞ்சுடர் தோன்றிற்று
பரைஒளி ஓங்கிற்றென்று உந்தீபற
பலித்தது பூசையென்று உந்தீபற.

7. உள்ளிருள் நீங்கிற்றுஎன் உள்ளொளி ஓங்கிற்றுத்
தெள்ளமுது உண்டேன்என்று உந்தீபற
தித்திக்க உண்டேன்என்று உந்தீபற.

8. எந்தையைக் கண்டேன் இடரெலாம் நீங்கினேன்
சிந்தை மகிழ்ந்தேன்என்று உந்தீபற
சித்திகள் பெற்றேன்என்று உந்தீபற.

9. தந்தையைக் கண்டேன்நான் சாகா வரம்பெற்றேன்
சிந்தை களித்தேன்என்று உந்தீபற
சித்தெலாம் வல்லேன்என்று உந்தீபற.

10. முத்தியைப் பெற்றேன்அம் முத்தியினால் ஞான
சித்தியை உற்றேன்என்று உந்தீபற
சித்தனும் ஆனேன்என்று உந்தீபற.

064. thiru unthiyaar

1. iravu vitinthathu iNaiyati vaayththa
paravi makizntheenenRu unthiipaRa
paalamuthu uNteenenRu unthiipaRa.

2. pozuthu vitinthathu poRpatham vaayththa
thozuthu makizntheenenRu unthiipaRa
thuuyavan aaneenenRu unthiipaRa.

3. thuukkam tholainthathu suuriyan thoonRinan
eekkam thavirntheenenRu unthiipaRa
innamuthu uNteenenRu unthiipaRa.

4. thunpam thavirnthathu thuukkam tholainthathu
inpam kitaiththathenRu unthiipaRa
eNNam paliththathenRu unthiipaRa.

5. njaanam uthiththathu n-aatham oliththathu
thiinan- thavirnthathenRu unthiipaRa
siRsapai kaNteenenRu unthiipaRa.

6. thiraiyaRRu vittathu senjsutar thoonRiRRu
paraioLi oongkiRRenRu unthiipaRa
paliththathu puusaiyenRu unthiipaRa.

7. uLLiruL n-iingkiRRuen uLLoLi oongkiRRuth
theLLamuthu uNteenenRu unthiipaRa
thiththikka uNteenenRu unthiipaRa.

8. enthaiyaik kaNteen itarelaam n-iingkineen
sinthai makizntheenenRu unthiipaRa
siththikaL peRReenenRu unthiipaRa.

9. thanthaiyaik kaNteenn-aan saakaa varampeRReen
sinthai kaLiththeenenRu unthiipaRa
siththelaam valleenenRu unthiipaRa.

10. muththiyaip peRReenam muththiyinaal njaana
siththiyai uRReenenRu unthiipaRa
siththanum aaneenenRu unthiipaRa.

The game played by children

Ramalinga Adigal ends his Thiru Unthiyar with the refrain from a game played by girls in ancient times. 

Robert Butler in his "Unthiyar", writes, "The shout unthii para, sung originally as a refrain in a children's game, has been taken as a metaphor for the soaring of the human spirit in its quest for a spiritual knowledge which transcends the limitation of the time and space bound body, mind and senses."

Rakesh Krishna shares the following note.

உந்தீபற - உந்தி பறப்பாயாக. உந்தி-பறத்தல் தமிழக நாட்டுப்புறச் சிறுமியரின் விளையாட்டுகளில் ஒன்று. 

உந்தி என்பது வயிற்றுக் கொப்புள். கொப்புள் பறக்கும்படி சுழல்வது உந்தி பறத்தல். 

உந்தி-பறத்தல் விளையாட்டை எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த மாணிக்கவாசகர் தன் திருவாசகத்தில் குறிப்பிடுகிறார். 

பாடிக்கொண்டே பறப்பது உந்தி-பறத்தல். இரண்டு சிறுமியர் ஒருவர் கையை மற்றொருவர் பிடித்துக்கொண்டும், கால்களால் ஒருவரை ஒருவர் உதைந்துகொண்டும் சுற்றுவது உந்திப்பறத்தல். கைகளைப் பிடிக்கும்போது வலக்கையை வலக்கையாலும், இடக்கையை இடக்கையாலும் எதிரெதிர் நின்று பிடித்துக்கொள்வர். இதனால் கைகள் பின்னலிட்டது போல் இருக்கும். பின்னர் வலப்புறமாகச் சிறிது நேரமும், இடப்புறமாகச் சிறிது நேரமும் சுழல்வர். இப்படிச் சுழலும்போது பாட்டுப் பாடிக்கொண்டே சுழல்வர். 

எனக்கு தெரிந்து. பறத்தல் என்பது மிகவும் இனிய அனுபவும். யோசித்து பாருங்கள். மேலே ஆகாய மார்க்கத்தில் பறக்கும் போது, பூமியில் உள்ள படைப்புகள் அனைத்தும் பார்க்கும் போது, நமக்குள் ஒரு பரவசம் ஏற்படும். அது ஒரு ஆனந்த எல்லை என்றும் சொல்லலாம்.

ஆனால் திருவருட்பாவில் உள்ள உந்தீபற என்ற சொல்லின் பொருள் - ஒரு பேரானந்த பரவசம். அது பறத்தலை கடந்த நிலை. ஏனென்றால் அந்த நிலை அடையும் போது வள்ளலார் மேற்கோள் காட்டுவது. பாலமுது உண்டேன், தூயவன் ஆனேன், இன்னமுது உண்டேன், இன்பம் கிடைத்ததென்று, தெள்ளமுது உண்டேன், தித்திக்க உண்டேன், சிந்தை மகிழ்ந்தேன், சித்திகள் பெற்றேன், சித்தனும் ஆனேன் என்று. 

பாலமுது உண்டேன் என்று உந்தீபற.
தூயவன் ஆனேன் என்று உந்தீபற.
இன்னமுது உண்டேன் என்று உந்தீபற.
இன்பம் கிடைத்ததென்று உந்தீபற.
தீனந் தவிர்ந்ததென்று உந்தீபற.

இவையெல்லாம் நாம் கேட்கும் வார்த்தைகள் மட்டும் தான். ஆனால் இந்த நிலை நாம் அடையும் போது நாம் கண்டிப்பாக உந்தீபற என்ற நிலைக்கு செல்வோம்.

பறத்தல் - ஆனந்தம், அமைதி, இன்பம்
உந்தீபற - பேரானந்தம், பேரமைதி, பேரின்பம்

Another song that merges well with a game is Panthaadal

116. ஆடேடி பந்து 

1. ஆடேடி பந்து ஆடேடி பந்து 
ஆடேடி பந்து ஆடேடி பந்து. 

2. வாழிஎன் தோழிஎன் வார்த்தைகேள் என்றும் 
மரணமில் லாவரம் நான்பெற்றுக் கொண்டேன் 
சூழியற் செஞ்சுடர் தோற்றுறு கீழ்பால் 
தூய்த்திசை நோக்கினேன் சீர்த்திகழ் சித்தி 
ஊழிதோ றூழிநின் றாடுவன் நீயும் 
உன்னுதி யேல்இங்கே மன்னரு ளாணை 
ஆழி கரத்தணிந் தாடேடி பந்து 
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி 

3. இசையாமல் போனவர் எல்லாரும் நாண 
இறவாப் பெருவரம் யான்பெற்றுக் கொண்டேன் 
வசையாதும் இல்லாத மேற்றிசை நோக்கி 
வந்தேன்என் தோழிநீ வாழிகாண் வேறு 
நசையாதே என்னுடை நண்பது வேண்டில் 
நன்மார்க்க மாம்சுத்த சன்மார்க்கம் தன்னில் 
அசையாமல் நின்றங்கே ஆடேடி பந்து 
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி 

4. இன்பாலே உலகத்தார் எல்லாரும் காண 
இறவாப் பெருவரம் யான்பெற்றுக் கொண்டேன் 
தென்பாலே நோக்கினேன் சித்தாடு கின்ற 
திருநாள் இதுதொட்டுச் சேர்ந்தது தோழி 
துன்பாலே அசைந்தது நீக்கிஎன் னோடே 
சுத்தசன் மார்க்கத்தில் ஒத்தவ ளாகி 
அன்பாலே அறிவாலே ஆடேடி பந்து 
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி 

5. சதுமறை ஆகம சாத்திரம் எல்லாம் 
சந்தைப் படிப்புநம் சொந்தப் படிப்போ 
விதுநெறி சுத்தசன் மார்க்கத்தில் சாகா 
வித்தையைக் கற்றனன் உத்தரம் எனுமோர் 
பொதுவளர் திசைநோக்கி வந்தனன் என்றும் 
பொன்றாமை வேண்டிடில் என்தோழி நீதான் 
அதுஇது என்னாமல் ஆடேடி பந்து 
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி 

6. தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார் 
தாமுளம் நாணநான் சாதலைத் தவிர்த்தே 
எப்பாலும் எக்காலும் இருத்தலே பெற்றேன் 
என்தோழி வாழிநீ என்னொடு கூடி 
துப்பாலே விளங்கிய சுத்தசன் மார்க்கச் 
சோதிஎன் றோதிய வீதியை விட்டே 
அப்பாலே போகாமல் ஆடேடி பந்து 
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி 

7. வெங்கேத மரணத்தை விடுவித்து விட்டேன் 
விச்சைஎ லாம்கற்றென் இச்சையின் வண்ணம் 
எங்கேயும் ஆடுதற் கெய்தினேன் தோழி 
என்மொழி சத்தியம் என்னோடும் கூடி 
இங்கே களிப்பது நன்றிந்த உலகோ 
ஏதக் குழியில் இழுக்கும் அதனால் 
அங்கேபா ராதேநீ ஆடேடி பந்து 
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி 

8. சிவமே பொருள்என் றறிவால் அறிந்தேன் 
செத்தாரை மீட்கின்ற திண்மையைப் பெற்றேன் 
உவமேயம் இல்லாத ஒருநிலை தன்னில் 
ஒன்றிரண் டென்னாத உண்மையில் நின்றேன் 
தவமே புரிகின்றார் எல்லாரும் காணத் 
தயவால் அழைக்கின்றேன் கயவாதே தோழி 
அவமேபோ காதென்னோ டாடேடி பந்து 
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி 

9. துஞ்சாத நிலைஒன்று சுத்தசன் மார்க்கச் 
சூழலில் உண்டது சொல்லள வன்றே 
எஞ்சாத அருளாலே யான்பெற்றுக் கொண்டேன் 
இறந்தாரை எல்லாம் எழுப்புதல் வல்லேன் 
விஞ்சாத அறிவாலே தோழிநீ இங்கே 
வேதுசெய் மரணத்துக் கெதுசெய்வோ மென்றே 
அஞ்சாமல் என்னோடே ஆடேடி பந்து 
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி 

10. ஈரமும் அன்பும்கொண் டின்னருள் பெற்றேன் 
என்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி 
காரமும் மிகுபுளிச் சாரமும் துவர்ப்பும் 
கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி 
ஊரமு துண்டுநீ ஒழியாதே அந்தோ 
ஊழிதோ றூழியும் உலவாமை நல்கும் 
ஆரமு துண்டென்னோ டாடேடி பந்து 
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி 

11. துதிசெயும் முத்தரும் சித்தரும் காணச் 
சுத்தசன் மார்க்கத்தில் உத்தம ஞானப் 
பதிசெயும் சித்திகள் பற்பல வாகப் 
பாரிடை வானிடைப் பற்பல காலம் 
விதிசெயப் பெற்றனன் இன்றுதொட் டென்றும் 
மெய்யருட் சோதியால் விளைவிப்பன் நீஅவ் 
அதிசயம் பார்க்கலாம் ஆடேடி பந்து 
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி 

ஆடேடி பந்து ஆடேடி பந்து 
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. 

12. பூவாம லேநிதம் காய்த்த இடத்தும் 
பூவார் மலர்கொண்டு பந்தாடா நின்றேன் 
சாவா வரம்தந்து வாழ்வாயோ பந்தே 
சாவாமல் என்னொடு வீழ்வாயோ பந்தே.

116. aateeti panthu 

1. aateeti panthu aateeti panthu 
aateeti panthu aateeti panthu. 

2. vaazien thoozien vaarththaikeeL enRum 
maraNamil laavaram n-aanpeRRuk koNteen 
suuziyaR senjsutar thooRRuRu kiizpaal 
thuuyththisai n-ookkineen siirththikaz siththi 
uuzithoo Ruuzin-in Raatuvan n-iiyum 
unnuthi yeelingkee mannaru LaaNai 
aazi karaththaNin- thaateeti panthu 
arutperunj soothikaN taateeti panthu. aateeti 

3. isaiyaamal poonavar ellaarum n-aaNa 
iRavaap peruvaram yaanpeRRuk koNteen 
vasaiyaathum illaatha meeRRisai n-ookki 
vantheenen thoozin-ii vaazikaaN veeRu 
n-asaiyaathee ennutai n-aNpathu veeNtil 
n-anmaarkka maamsuththa sanmaarkkam thannil 
asaiyaamal n-inRangkee aateeti panthu 
arutperunj soothikaN taateeti panthu. aateeti 

4. inpaalee ulakaththaar ellaarum kaaNa 
iRavaap peruvaram yaanpeRRuk koNteen 
thenpaalee n-ookkineen siththaatu kinRa 
thirun-aaL ithuthottus seernthathu thoozi 
thunpaalee asainthathu n-iikkien nootee 
suththasan maarkkaththil oththava Laaki 
anpaalee aRivaalee aateeti panthu 
arutperunj soothikaN taateeti panthu. aateeti 

5. sathumaRai335 aakama saaththiram ellaam 
santhaip patippun-am sonthap patippoo 
vithun-eRi suththasan maarkkaththil saakaa 
viththaiyaik kaRRanan uththaram enumoor 
pothuvaLar thisain-ookki vanthanan enRum 
ponRaamai veeNtitil enthoozi n-iithaan 
athuithu ennaamal aateeti panthu 
arutperunj soothikaN taateeti panthu. aateeti 

6. thappaalee sakaththavar saavee thuNinthaar 
thaamuLam n-aaNan-aan saathalaith thavirththee 
eppaalum ekkaalum iruththalee peRReen 
enthoozi vaazin-ii ennotu kuuti 
thuppaalee viLangkiya suththasan maarkkas 
soothien Roothiya viithiyai vittee 
appaalee pookaamal aateeti panthu 
arutperunj soothikaN taateeti panthu. aateeti 

7. vengkeetha maraNaththai vituviththu vitteen 
vissaie laamkaRRen issaiyin vaNNam 
engkeeyum aatuthaR keythineen thoozi 
enmozi saththiyam ennootum kuuti 
ingkee kaLippathu n-anRintha ulakoo 
eethak kuziyil izukkum athanaal 
angkeepaa raatheen-ii aateeti panthu 
arutperunj soothikaN taateeti panthu. aateeti 

8. sivamee poruLen RaRivaal aRintheen 
seththaarai miitkinRa thiNmaiyaip peRReen 
uvameeyam illaatha orun-ilai thannil 
onRiraN tennaatha uNmaiyil n-inReen 
thavamee purikinRaar ellaarum kaaNath 
thayavaal azaikkinReen kayavaathee thoozi 
avameepoo kaathennoo taateeti panthu 
arutperunj soothikaN taateeti panthu. aateeti 

9. thunjsaatha n-ilaionRu suththasan maarkkas 
suuzalil uNtathu sollaLa vanRee 
enjsaatha aruLaalee yaanpeRRuk koNteen 
iRanthaarai ellaam ezupputhal valleen 
vinjsaatha aRivaalee thoozin-ii ingkee 
veethusey maraNaththuk kethuseyvoo menRee 
anjsaamal ennootee aateeti panthu 
arutperunj soothikaN taateeti panthu. aateeti 

10. iiramum anpumkoN tinnaruL peRReen 
enmaarkkam iRavaatha sanmaarkkam thoozi 
kaaramum mikupuLis saaramum thuvarppum 
kaippootee uppootee kasappootee kuutti 
uuramu thuNtun-ii oziyaathee anthoo 
uuzithoo Ruuziyum ulavaamai n-alkum 
aaramu thuNtennoo taateeti panthu 
arutperunj soothikaN taateeti panthu. aateeti 

11. thuthiseyum muththarum siththarum kaaNas 
suththasan maarkkaththil uththama njaanap 
pathiseyum siththikaL paRpala vaakap 
paaritai vaanitaip paRpala kaalam 
vithiseyap peRRanan inRuthot tenRum 
meyyarut soothiyaal viLaivippan n-iiav 
athisayam paarkkalaam aateeti panthu 
arutperunj soothikaN taateeti panthu. aateeti 
aateeti panthu aateeti panthu 
arutperunj soothikaN taateeti panthu. 
kaliviruththam 

12. puuvaama leen-itham kaayththa itaththum 
puuvaar malarkoNtu panthaataa n-inReen 
saavaa varamthanthu vaazvaayoo panthee 
saavaamal ennotu viizvaayoo panthee.