Poster by Bala Chandran Gunasekaran |
விதியின் பயன் வலிக்கிறது அய்யா..
அகத்திசனே சரண் சரணம்
உண்மைபொருளே சரணம்
அய்யனே போற்றி போற்றி
அருள் பெற்ற தேவே போற்றி
மெய்யனே போற்றி போற்றி
மெய் சுடர் அணிந்தாய் போற்றி
மெய் குளிர உன்னை காண வேண்டுகிறேன் அகத்தீசா
உந்தன் திருநாமம் சொல்லிடவே வாழுகின்றேன் அகத்தீசா
என் பாவங்கள் நீங்கிடவே உந்தம் பாதம் பணிகின்றேன்
எந்தன் கர்ம வினைகளை நீங்கிடவே உந்தன் கடைக்கண் காணுகின்றேன்
நின் தயவால் ஜோதி தரிசனம் எப்போது?
நின் கருணையால் தனிபெருங்கருணை எப்போது?
கண் திறந்து பாரையா
கண் திறந்து பாரையா
எம்மை காத்திட வேணுமையா
பரிவட்ட அழகினில் அரசனாய்
என் ஆத்மா மலர வேணுமையா
என் பாவங்கள் நீங்கிடவே உந்தம் பாதம் பணிகின்றேன்
எந்தன் கர்ம வினைகளை நீங்கிடவே உந்தன் கடைக்கண் காணுகின்றேன்
என் அகம் குளிர நான் அகத்தியர் தரிசனம் பெறவேண்டும்
சித்தர்களின் துதி சொல்லும் போதும் அகத்தீசா..
நீர் தான் முன் வந்து நிற்கிறீர்
எனை ஆளும் அரசே
ஒளி வெள்ளத்தில் நின் தரிசனம்
அகத்தியர் தரிசனம் கண்டேன்
உன்னத தரிசனம் பெற்றேன்
கண் குளிர உன்னை கண்டேன் அகத்தீசா
அகத்தியர் தரிசனம் பாவ விமோசனம்
நெற்றியில் சந்தன திலகம்
நம் வாழ்வில் வெற்றி திலகம்
அய்யனே போற்றி போற்றி
ஓம் அகத்தீசாய நமஹ