Sunday, 5 July 2026

ME

"ஜோதிடம் என்பது நம்முடைய குணங்களை புரிந்து கொள்ள உதவும் ஒரு வழிகாட்டி. அது நம்முடைய எதிர்காலத்தை முழுமையாக முடிவு செய்யும் சக்தி அல்ல. நாம் எடுக்கிற நல்ல முடிவுகள் நாம் செய்யும் நல்ல செயல்கள் நாம் வளர்த்து கொள்ளும் நல்ல குணங்கள் இவைகள தான் நம்முடைய வாழ்க்கையை உயர்த்தும்."

"நீங்கள் தனியாக இருக்கிறீர்கள் என்று நினைக்கிற ஒவ்வொரு நேரத்திலும் ஒரு விஷயத்தை மட்டும் மறந்து விடாதீர்கள். உண்மையான பக்தியுடன் இறைவனை நினைக்கும் மனிதன் ஒருபோதும் தனியாக இருப்பதில்லை. சிவபெருமானின் அருள் இருந்தால் இருளாக தோன்றும் பாதையிலும் ஒளி கிடைக்கும். நம்பிக்கை இருந்தால் சோதனைகளும் சாதனைகளாக மாறும். பொறுமை இருந்தால் காலமே உங்களுக்கு சாதகமாக வேலை செய்யும்."