M. Prasanna Kumar has posted a beautiful song on Lord Nadaraja, written by Sirumanavur Munusamy some 300 years back. This song has been written along the lines of Ramalinga Adigal's beautiful hymn in his Manumurai Kanda Vasagam.
Prasanna has written a review of the song too at https://www.youtube.com/watch?v=8tXXT731pYE.
நடராஜ பத்து - சுமார் முன்னூறு வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த சிறுமணவூர் முனுசாமி என்பவர் எழுதிய நடராஜ பத்து சைவ அன்பர்களிடம் மிக பிரபலாமக விளங்கியது. மிக எளிதாக விளங்கக் கூடிய வார்த்தைகள், செறிவு நிறைந்த கருத்துக்கள், அழகிய சந்தங்கள் என்பதாக அமைந்த விருத்தங்கள் வகையைச் சேர்ந்தது நடராஜ பத்து பாடல்கள். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் "ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே"என்று முடியும் வரிகள் நெஞ்சத்தைக் கொள்ளை கொள்வதாக அமையக்கூடியது. ஒவ்வொரு பாடலையும் மனமொன்றிப் படித்தால் அதன் பொருள் எளிதில் விளங்கும். தில்லையில் விளங்கும் ஸ்ரீ நடராஜரின் மேல் அளவிற்கடந்த பக்தியினால் "நடராஜ பத்து" பாடல்களை சிறுமணவூர் முனுசாமி எழுதியுள்ளார். - M. Prasanna Kumar