Sunday 7 June 2020

THE MEASURE OF A GURU 2

மோனா ஞான முழுதும் அளித்து
சிற்பரிப் பூரண சிவத்தைக் காண
நற்சிவ நிட்கள நாட்டமுந் தந்து
குருவுஞ் சீடனுங் கூடிக் கலந்து
இருவரும் ஒரு தனியிடந் தனிற் சேர்ந்து
தானந்தமாகித் தற்பர வெளியில்
ஆனந்த போத அறிவைக் கலந்து
ஈசனிைணயடியிருத்தி
மனத்தே நீயே நானாய்
நானே நீயாய்க்
காயா புரியைக் கனவெனவுணா்ந்து
எல்லாமுன் செயலென்ேற உணர
நல்லா உன்னருள் நாட்டந் தருவாய்
காரண குருவே கற்பகத் களிேற
வாரணமுகத்து வள்ளலே போற்றி

Its translation, a product of the limited capacity of my understanding.

Conferring the Silent Jnana,
Coming face to face with the final revelation of the source,
Giving birth to divine desires,
Hence the Guru and Student merge,
in a lone space, the Para Veli,
locked in blissful knowledge,
placed at the Holy Feet of Siva,
"Oh Maname, understand that you are ME, I am you,
the body is but just a fortress in a dream,"
Bring me to the realization that all is your doing,
Bring forth the yearning for your Grace in me,
Oh my Guru, Lord Vinayaga.

தந்தை தாய் ஆவானும், சார்கதியிங்கு ஆவணும்,
அந்தமிலா இன்பம் நமக்காவானும், எந்தனுயிர் தானாகுவானும்,
சரணாகுவானும், அருட்கோனாகுவானும் குரு.

சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்
அவனை வழிபட்டு அங்கு ஆமாறு ஒன்றில்லை
அவனை வழிபட்டு அங்கு ஆமாறு காட்டும்
குருவை வழிபடின் கூடலும் ஆமே.

குருவே சிவமெனக் கூறினன் நந்தி
குருவே சிவம்என் பதுகுறித் தோரார்
குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
குருவே உரையுணர் வற்றதோர் கோவே .

திருவடியே சிவமாவது தேரில்
திருவடியே சிவலோகஞ் சிந்திக்கில்
திருவடியே செல்கதி அது செப்பில்
திருவடியே தஞ்சம் உள்தெளி வார்க்கே

திருவடி ஞானம் சிவம் ஆக்குவிக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே