Nadi Noola Aasan Selvam R.T invites devotees to participate in the annual Sri Bhrigu Munivar's Aganda Jyothi Puja on 24 December 2015.
http://18siddhar.blogspot.in/2015/12/guru-pooja-maruderi-24th-dec-2015.html
http://birugu.blogspot.my/
http://birugu.blogspot.my/
சித்த அடியார்கள் அனைவரும் வருகிற 24-12-2015 ஸ்ரீ பிருகு முனிவரின் அகண்ட ஜோதி பூஜையில் கலந்து கொண்டு ஜோதி மயமான மகரிஷிகளின் ஆசியை பெற வேண்டுகிறோம்.
ஆத்ம நமஸ்காரங்களுடன்
செல்வம்
Blessings of the Siddhas from the Maruderi Nigandu
மருதேரி நிகண்டு
1) காலமிதில் செய்முயற்சி எங்கள் மார்கம்
காணும்வகை சிந்தையதை பலிதம் ஆக்கி
நிலமதனில் சூட்சமத்தை தூலமாக்கி
நயனமதில் பலனதுவை காட்டி விப்போம்
பிலமான மனோமய கோசம் தன்னை
பெருவழியில் பொதிந்தோர் வரங்கள் தன்னை
ஆலமான கருமமேனும் விடத்தை நீக்கி
அமிர்தமெனும் அழியாத மார்கம் செல்ல
2)செல்லவே வழிமுறைகள் உரைபோம் இப்போ
செப்புகின்ற கலியதிலே நாங்களும் தான்
அல்லலுறும் மாந்தர்களும் அவத்தை நீக்க
ஆசிரம நியதிபடி அவரவர் கர்மம் நீங்க
நல்லதொரு வழியளிக்கும் குடிலம் தன்னில்
நிர்மான வகை பூர்த்தி தருணம்யிதுவே
மாசில்ல தடம்தனில் பஞ்ச பூதம்
மணிவகுத்து நிற்குதப்பா திங்கள் முதல்
3) முதலான தீர்த்தம் அதே நிச்சயித்த
முடிவுருமோர் நந்தியதின் சின்னம் வைத்தே
பூதலத்தில் காமதேனு அம்சம் ஒப்பாய்
பெண் ஆணும் பாகமதாய் நிறுவிபாரே
ஒதவதால் ஊரணியும் தெய்வ அம்சம்
ஔடதமாய் சித்திக்கும் வருவோர்க்கு எல்லாம்
நாதமான சுழியரிவை அதிர்வை தூண்டி
நிலைநாட்டும் ஆத்மவிளக்கம் தன்னால் கூடும்
4) கூடுமப்பா இத்தேகம் தொட்ட சிந்தை
குருதியுற்ற பருவுடலும் அவற்றில் தோன்றும்
பீடு பிணியும் வாதமொடு பல்கால் நோயும்
பிறவிமுதல் தொட்டுவரும் குருதி கர்மம்
நாடும்பல அவத்தையோடு வாழ்வதெல்லாம்
நித்தியமாய் தொடரும் இந்த சழக்கில் விட்டு
கடுகளவு அதில் பயமும் துன்பம் நீங்கி
காலபயம் அன்றியே என் மக்கள் வாழ
5) வாழவே அத்தனான பிரம்ம விதி
வழிமாற்றி சென்றிடவே வழியில்லை என்றாலும்
சூழவே சித்தர்களின் வரங்களாலும்
சுத்த மனோ வேண்டுதலின் வரத்தினாலும்
ஆழந்த துயர் நீக்கி தேகதுச்சமாய்
அமைதியுற செய்யும் விதம் ஆசிஇன்று
சூழந்ததொரு இருள் அனைத்தும் விலகியோடி
சுத்தமுள்ள மார்கநெறி நிறுவி நிற்க
6) நிற்கவே சூட்சமத்தை இன்று சொல்வோம்
நெறியான ஞானத்திற்கு தடையானது தான்
உற்ற பசி அதனால் உண்டாகும் சினமும் தானே
ஒதிட்டோம் துர்வாசன் என்னும் உவமை
பெற்ற தனம் தனில்பசி ஆற்றுவிக்க
பிழையற பேதமற தலத்தின் அன்னம்
உற்ற செயல் மாறாது மாச்சரியம் அற்று
உள்ளம்நோகா மருந்தெனவே ஈவாய் அப்பா
7) ஈவாயே எக்குணமும் உள்ள மாந்தர்
இருளென்ற கடும் பீடை உள்ளவர்க்கும்
பூவுலகில் இறை பற்றே அற்றோர் ஆனாலும்
பற்றியும் தடம் நோக்கி வந்துவிட்டால்
கவனமுடன் குருசித்தமாகவே தானிருந்து
கலக்கமதை போக்கிடும் உபாயம் ஒன்று
குவலயத்தில் குருதர்மம் தனை போதித்து
கலக்கமதை தீர்க்கும் ஞான வாக்குரை
அப்பனே குடிலமது பொலிவும் காணவே
அகத்தியனும் நந்தியும் காப்பு செய்வார்
பூரணமாய் ஆசிபல சோதி கண்டோம்
புந்தி ஒன்றி உரைத்திட்ட வாக்கு முற்றே
http://agathiyarvanam.blogspot.my/2015/01/the-bhrigu-maharishi-guru-vizha.html, http://agathiyarvanam.blogspot.my/2014/12/bhirugu-maharishi-guru-puja.html