Friday 14 June 2019

THE BLISS THAT ENSUES 1

While the pleasures that are derived here right now are called Sithrinbam or momentary pleasures of life, the saints promise the kingdom of Erai and its accompanying Perinbam or everlasting bliss. Going through the many works of the saints, will give us an idea of the extent of this bliss that is derived when coming in close proximity to Erai. Ramalinga Adigal like those before him has had many moments of extreme bliss and joy in the presence of Erai. He boldly and openly declares all his experiences and encourages us to follow suit on his path. Even as a five-month-old child, he went into a state of ecstatic delight at seeing the Lord at Chidambaram for the very first time.

44.தாய்முதலோ ரொடுசிறிய பருவமதில் தில்லைத்
தலத்திடையே திரைதூக்கத் தரிசித்த போது
வேய்வகைமேல் காட்டாதே என்றனக்கே எல்லாம்
வெளியாகக் காட்டியஎன் மெய்உறவாம் பொருளே
காய்வகைஇல் லாதுளத்தே கனிந்தநறுங் கனியே
கனவிடத்தும் நனவிடத்தும் எனைப்பிரியாக் களிப்பே
தூய்வகையோர் போற்றமணி மன்றில்நடம் புரியும்
சோதிநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.

http://www.thiruarutpa.org/thirumurai/v/T292/tm/arulvilakka_maalai

In G Vanmikanathan's "Pathway to God Trod By Saint Ramalingar", we find the following written about the state of Ramalinga Adigal when he stood in the presence of his Lord.
Mani Thirunavukkaracu, a scholar of this century, has written thus in the 6th number of volume 6 (1928) of a Journal called “The Philosophy of Raamalinga Swaamikal’s Temple Worship”,
“My teacher used to say that our Raamalingam was, by and large, partial to Thiruvaachakam. It was his habit, he used to say, for him to stand often in the presence of Lord Thiyagesan in Otriyoor and keep singing the following stanza from the Thiruvaachakam with his eyes raining tears, the hair on his body standing erect and his voice tremulous with surcharged emotion, and, ultimately, fall down in a swoon”. 
பாரொடு, விண்ணாய், பரந்த, எம் பரனே! பற்று நான் மற்று இலேன் கண்டாய்;
சீரொடு பொலிவாய், சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!
ஆரொடு நோகேன்? ஆர்க்கு எடுத்து உரைக்கேன்? ஆண்ட நீ அருளிலையானால்,
வார் கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்; `வருக' என்று, அருள் புரியாயே.

Soon we come to learn of the spiritual advancement of Ramalinga Adigal that knew no bounds.

விரைந்து விரைந்து படிகடந்தேன் மேற்பால் அமுதம் வியந்துண்டேன்
கரைந்து கரைந்து மனம்உருகக் கண்­ர் பெருகக் கருத்தலர்ந்தே
வரைந்து ஞான மணம்பொங்க மணிமன் றரசைக் கண்டுகொண்டேன்
திரைந்து நெகிழ்ந்த தோலுடம்பும் செழும்பொன் உடம்பாய்த் திகழ்ந்தேனே.

Rapidly, rapidly I crossed the steps,
I partook of the ambrosia from above
in amazement;
with my mind dissolving, dissolving,
and melting,
with tears welling up,
with my thoughts blossoming out
and appropriating Him,
with the fragrance of gnosis rising up,
I realized the King of the Hall of Gems,
and I shone with a shining golden body
in place of the shrunken and flabby-skinned one.

(Translation by G Vanmikanathan from "Pathway to God Trod By Saint Ramalingar")

http://search.thiruarutpa.org/thirumurai/T363/tm/uRRa%20thuraiththal

In many of his hymns, Adigal regards the Lord as a Siddha. He claims that he was redeemed by the Siddha and has himself become one. He sings a beautiful hymn at the break of dawn when he attains the status of a Siddha, proudly announcing to the world the gifts showered on him as a result of his Lord's grace on him.

இரவு விடிந்தது இணையடி வாய்த்த
பரவி மகிழ்ந்தேன் என்று உந்தீபற
பாலமுது உண்டேன் என்று உந்தீபற.

பொழுது விடிந்தது பொற்பதம் வாய்த்த
தொழுது மகிழ்ந்தேன் என்று உந்தீபற
தூயவன் ஆனேன் என்று உந்தீபற.

தூக்கம் தொலைந்தது சூரியன் தோன்றினன்
ஏக்கம் தவிர்ந்தேன் என்று உந்தீபற
இன்னமுது உண்டேன் என்று உந்தீபற.

துன்பம் தவிர்ந்தது தூக்கம் தொலைந்தது
இன்பம் கிடைத்ததென்று உந்தீபற
எண்ணம் பலித்ததென்று உந்தீபற.

ஞானம் உதித்தது நாதம் ஒலித்தது
தீனந் தவிர்ந்ததென்று உந்தீபற
சிற்சபை கண்டேன் என்று உந்தீபற.

திரையற்று விட்டது செஞ்சுடர் தோன்றிற்று
பரைஒளி ஓங்கிற்றென்று உந்தீபற
பலித்தது பூசையென்று உந்தீபற.

உள்ளிருள் நீங்கிற்றுஎன் உள்ளொளி ஓங்கிற்றுத்
தெள்ளமுது உண்டேன் என்று உந்தீபற
தித்திக்க உண்டேன் என்று உந்தீபற.

எந்தையைக் கண்டேன் இடரெலாம் நீங்கினேன்
சிந்தை மகிழ்ந்தேன் என்று உந்தீபற
சித்திகள் பெற்றேன் என்று உந்தீபற.

தந்தையைக் கண்டேன் நான் சாகா வரம் பெற்றேன்
சிந்தை களித்தேன் என்று உந்தீபற
சித்தெலாம் வல்லேன் என்று உந்தீபற.

முத்தியைப் பெற்றேன் அம் முத்தியினால் ஞான
சித்தியை உற்றேன் என்று உந்தீபற
சித்தனும் ஆனேன் என்று உந்தீபற.


Having gained his grace Ramalinga Adigal assures us of his Lord's continuous blessings.

கைவிட மாட்டான் என்று ஊதூது சங்கே
கனக சபையான் என்று ஊதூது சங்கே
பொய்விடச் செய்தான் என்று ஊதூது சங்கே
பூசைப லித்ததென்று ஊதூது சங்கே.

தூக்கம் தொலைத்தான் என்று ஊதூது சங்கே
துன்பம் தவிர்த்தான் என்று ஊதூது சங்கே
ஏக்கம் கெடுத்தான் என்று ஊதூது சங்கே
ஏம சபையான்என்று ஊதூது சங்கே.

பொன்னடி தந்தான் என்று ஊதூது சங்கே
பொன்னம் பலத்தான் என்று ஊதூது சங்கே
இன்னல் அறுத்தான் என்று ஊதூது சங்கே
என்னுள் அமர்ந்தான் என்று ஊதூது சங்கே.

அச்சம் தவிர்த்தான் என்று ஊதூது சங்கே
அம்பல வாணன் என்று ஊதூது சங்கே
இச்சை அளித்தான் என்று ஊதூது சங்கே
இன்பம் கொடுத்தான் என்று ஊதூது சங்கே.

என்உயிர் காத்தான் என்று ஊதூது சங்கே
இன்பம் பலித்ததென்று ஊதூது சங்கே
பொன்உருத் தந்தான் என்று ஊதூது சங்கே
பொற்சபை அப்பன் என்று ஊதூது சங்கே.

சிவமாக்கிக்கொண்டான் என்று ஊதூது சங்கே
சிற்றம் பலத்தான்என்று ஊதூது சங்கே
நவநோக் களித்தான் என்று ஊதூது சங்கே
நான்அவன் ஆனேன் என்று ஊதூது சங்கே.

நாத முடியான் என்று ஊதூது சங்கே
ஞானசபையான் என்று ஊதூது சங்கே
பாத மளித்தான் என்று ஊதூது சங்கே
பலித்தது பூசை என்று ஊதூது சங்கே.

தெள்ளமு தானான் என்று ஊதூது சங்கே
சிற்சபை அப்பன் என்று ஊதூது சங்கே
உள்ளம் உவந்தான் என்று ஊதூது சங்கே
உள்ள துரைத்தான் என்று ஊதூது சங்கே.

என்னறி வானான் என்று ஊதூது சங்கே
எல்லாம்செய் வல்லான் என்று ஊதூது சங்கே
செந்நிலை தந்தான் என்று ஊதூது சங்கே
சிற்சபை அப்பன் என்று ஊதூது சங்கே.

இறவாமை ஈந்தான் என்று ஊதூது சங்கே
எண்ணம் பலித்ததென்று ஊதூது சங்கே
திறமே அளித்தான் என்று ஊதூது சங்கே
சிற்றம் பலத்தான் என்று ஊதூது சங்கே.

கரவு தவிர்ந்ததென்று ஊதூது சங்கே
கருணை கிடைத்ததென்று ஊதூது சங்கே
இரவு விடிந்ததென்று ஊதூது சங்கே
எண்ணம் பலித்ததென்று ஊதூது சங்கே.

எல்லாம்செய் வல்லான் என்று ஊதூது சங்கே
எல்லார்க்கும் நல்லான் என்று ஊதூது சங்கே
எல்லாம் உடையான் என்று ஊதூது சங்கே
எல்லாமும் ஆனான் என்று ஊதூது சங்கே.

கருணா நிதியர்என்று ஊதூது சங்கே
கடவுள் அவனேஎன்று ஊதூது சங்கே
அருள்நா டகத்தான் என்று ஊதூது சங்கே
அம்பலச் சோதிஎன்று ஊதூது சங்கே.

தன்னிகர் இல்லான் என்று ஊதூது சங்கே
தலைவன் அவனே என்று ஊதூது சங்கே
பொன்னியல் வண்ணன் என்று ஊதூது சங்கே
பொதுநடம் செய்வான் என்று ஊதூது சங்கே.

ஆனந்த நாதன் என்று ஊதூது சங்கே
அருளுடை அப்பன் என்று ஊதூது சங்கே
தானந்தம் இல்லான் என்று ஊதூது சங்கே
தத்துவச் சோதி என்று ஊதூது சங்கே.

பொய்விட் டகன்றேன் என்று ஊதூது சங்கே
புண்ணியன் ஆனேன் என்று ஊதூது சங்கே
மெய்தொட்டு நின்றேன் என்று ஊதூது சங்கே
மேல்வெளி கண்டேன் என்று ஊதூது சங்கே.


He goes on to reveal what is expected upon the arrival of his Lord in his life as experienced by him.

அம்பலவர் வந்தார் என்று சின்னம் பிடி
அற்புதம்செய் கின்றார் என்று சின்னம் பிடி
செம்பலன் அளித்தார் என்று சின்னம் பிடி
சித்திநிலை பெற்றதென்று சின்னம் பிடி.

சிற்சபையைக் கண்டோம் என்று சின்னம் பிடி
சித்திகள்செய் கின்றோம் என்று சின்னம் பிடி
பொற்சபை புகுந்தோம் என்று சின்னம் பிடி
புந்திமகிழ் கின்றோம் என்று சின்னம் பிடி.

ஞானசித்திபுரம் என்று சின்னம் பிடி
நாடகம்செய் இடம் என்று சின்னம் பிடி
ஆனசித்தி செய்வோம் என்று சின்னம் பிடி
அருட்சோதி பெற்றோம் என்று சின்னம் பிடி.

கொடிகட்டிக்கொண்டோம் என்று சின்னம் பிடி
கூத்தாடு கின்றோம் என்று சின்னம் பிடி
அடிமுடியைக் கண்டோம் என்று சின்னம் பிடி
அருளமுதம் உண்டோம் என்று சின்னம் பிடி.

அப்பர்வரு கின்றார் என்று சின்னம் பிடி
அற்புதம்செய் வதற்கென்று சின்னம் பிடி
செப்பநிலை பெற்றதென்று சின்னம் பிடி
சித்திபுரம்இடமென்று சின்னம் பிடி.

தானேநான் ஆனேன் என்று சின்னம் பிடி
சத்தியம்சத் தியம் என்று சின்னம் பிடி
ஊனே புகுந்ததென்று சின்னம் பிடி
ஒளிவண்ணம் ஆனதென்று சின்னம் பிடி.

வேகாதகால் உணர்ந்து சின்னம் பிடி
வேகாத நடுத்தெரிந்து சின்னம் பிடி
சாகாததலை அறிந்து சின்னம் பிடி
சாகாத கல்விகற்றுச் சின்னம் பிடி.

மீதான நிலை ஏறிச் சின்னம் பிடி
வெட்டவெளி நடு நின்று சின்னம் பிடி
வேதாகமம் கடந்து சின்னம் பிடி
வேதாந்தச் சித்தாந்த சின்னம் பிடி.

பன்மார்க்க மும்கடந்து சின்னம் பிடி
பன்னிரண்டின் மீது நின்று சின்னம் பிடி
சன்மார்க்கம் மார்க்கம் என்று சின்னம் பிடி
சத்தியம்செய் கின்றோம் என்று சின்னம் பிடி.

சித்தாடு கின்றார் என்று சின்னம் பிடி
செத்தார் எழுவார் என்று சின்னம் பிடி
இத்தா ரணியில் என்று சின்னம் பிடி
இதுவே தருணம் என்று சின்னம் பிடி.

http://www.thiruarutpa.org/thirumurai/v/T358/tm/sinnam_piti

Upon gaining access to his Lord's kingdom and his heart, he openly announces the blessings gained.

கருத்தனைஎன் கண்மணியைக் கண்ணுதலைப்
பெருங்கருணைக் கடலை வேதத்
திருத்தனைஎன் சிவபதியைத் தீங்கனியைத்
தெள்ளமுதத் தெளிவை வானில்
ஒருத்தனைஎன் உயிர்த்துணையை உயிர்க்குயிரை
உயிர்க்குணர்வை உணர்த்த னாதி
அருத்தனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.

மெய்யனைஎன் துயர்தவிர்த்த விமலனை என்
இதயத்தே விளங்கு கின்ற
துய்யனைமெய்த் துணைவனைவான் துரியநிலைத்
தலைவனைச்சிற் சுகந்தந் தானைச்
செய்யனைவெண் நிறத்தனைஎன் சிவபதியை
ஒன்றான தெய்வந் தன்னை
அய்யனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.

எப்பொருளும் எவ்வுயிரும் எவ்வுலகும்
விளங்கவிளக் கிடுவான் தன்னைச்
செப்பரிய பெரியஒரு சிவபதியைச்
சிவகதியைச் சிவபோ கத்தைத்
துப்புரவு பெறஎனக்கே அருளமுதம்
துணிந்தளித்த துணையை என்றன்
அப்பனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.

பிறிவெனைத்துந் தோற்றாதென் உளங்கலந்த
பெருந்தகைஎம் பெருமான் தன்னைச்
செறிவனைத்தும் என்மனத்துக் களித்தெனக்குப்
பெருங்களிப்புச் செய்தான் தன்னை
முறிவெனைத்தும் இன்றிஅருள் அமுதுணவு
கொடுத்தெனக்கு முன்னின் றானை
அறிவனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.

பொன்புனைஉள் ளொளிக்கொளியைப் பூரணமாம்
பெரும்பொருளைப் புனிதந் தன்னை
என்பிழையைப் பொறுத்தெனையும் ஏன்றுகொண்ட
பெருங்கருணை இயற்கை தன்னை
இன்பினைஎன் இதயத்தே இருந்தருளும்
பெருவாழ்வை என்னுள் ஓங்கும்
அன்பினைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.

இத்தனை என் றிடமுடியாச் சத்தி எலாம்
உடையானை எல்லாம் வல்ல
சித்தனை என் சிவபதியைத் தெய்வமெலாம்
விரித்தடக்கும் தெய்வந் தன்னை
எத்தனையும் என்பிழைகள் பொறுத்ததனிப்
பெருந்தாயை என்னை ஈன்ற
அத்தனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.

எம்மையும் என் தனைப்பிரியா தென்னுளமே
இடங்கொண்ட இறைவன் தன்னை
இம்மையில்என் தனக்கழியாத் திருவடிவம்
தந்தானை எல்லாம் வல்ல
செம்மைதரு சித்தனைஎன் சிவபதியைத்
தெள்ளமுதத் திரளை என்றன்
அம்மையைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.

என்னையும் என் பொருளையும்என் ஆவியையும்
தான்கொண்டிங் கென்பால் அன்பால்
தன்னையும்தன் பொருளையும்தன் ஆவியையும்
களித்தளித்த தலைவன் தன்னை
முன்னையும்பின் னையும்எனக்கே முழுத்துணையாய்
இருந்தமுழு முதல்வன் தன்னை
அன்னையைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.

எண்ணலைவே றிரங்கலைநின் எண்ணமெலாம்
தருகின்றோம் இன்னே என்றென்
கண்நிரம்ப ஒளிகாட்டிக் கருத்தில் அமர்ந்
திருக்கின்ற கருத்தன் தன்னைப்
புண்ணியனை உளத்தூறும் புத்தமுதை
மெய்இன்பப் பொருளை என்றன்
அண்ணலைசிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.

சாதியை நீள் சமயத்தை மதத்தை எலாம்
விடுவித்தென் தன்னை ஞான
நீதியிலே சுத்தசிவ சன்மார்க்க
நிலைதனிலே நிறுத்தி னானைப்
பாதியைஒன் றானவனைப் பரம்பரனைப்
பராபரனைப் பதிஅ னாதி
ஆதியைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.

http://www.thiruarutpa.org/thirumurai/v/T322/tm/assoop_paththu

Ramalinga Adigal reveals his utmost satisfaction and gratitude towards his Lord for appearing in his life.

மாலிலே மயங்கி மண்ணிலே அநித்த
வாழ்விலே வரவிலே மலஞ்சார்
தோலிலே ஆசை வைத்துவீண் பொழுது
தொலைக்கின்றார் தொலைக்கநான் உனது
காலிலே ஆசை வைத்தனன் நீயும்
கனவினும் நனவினும் எனைநின்
பாலிலே வைத்தாய் எனக்கிது போதும்
பண்ணிய தவம்பலித் ததுவே.

மதத்திலே சமய வழக்கிலே மாயை
மருட்டிலே இருட்டிலே மறவாக்
கதத்திலே மனத்தை வைத்துவீண் பொழுது
கழிக்கின்றார் கழிக்கநான் உன்பூம்
பதத்திலே மனத்தை வைத்தனன் நீயும்
பரிந்தெனை அழிவிலா நல்ல
பதத்திலே வைத்தாய் எனக்கிது போதும்
பண்ணிய தவம்பலித் ததுவே.

குலத்திலே சமயக் குழியிலே நரகக்
குழியிலே குமைந்துவீண் பொழுது
நிலத்திலே போக்கி மயங்கிஏ மாந்து
நிற்கின்றார் நிற்கநான் உவந்து
வலத்திலே நினது வசத்திலே நின்றேன்
மகிழ்ந்துநீ என்உளம் எனும்அம்
பலத்திலே நின்றாய் எனக்கிது போதும்
பண்ணிய தவம்பலித் ததுவே.

கூடவும் பின்னே பிரியவும் சார்ந்த
கொழுநரும் மகளிரும் நாண
நீடஎன் உளத்தே கலந்துகொண் டென்றும்
நீங்கிடா திருந்துநீ என்னோ
டாடவும் எல்லாம் வல்லசித் தியைப்பெற்
றறிவுரு வாகிநான் உனையே
பாடவும் பெற்றேன் எனக்கிது போதும்
பண்ணிய தவம்பலித் ததுவே.

உயத்திடம் அறியா திறந்தவர் தமைஇவ்
வுலகிலே உயிர்பெற்று மீட்டும்
நயத்தொடு வருவித் திடும்ஒரு ஞான
நாட்டமும் கற்பகோ டியினும்
வயத்தொடு சாகா வரமும்என் தனக்கே
வழங்கிடப் பெற்றனன் மரண
பயத்தைவிட் டொழித்தேன் எனக்கிது போதும்
பண்ணிய தவம்பலித் ததுவே.

நாடல்செய் கின்றேன் அருட்பெருஞ் சோதி
நாதனை என்உளே கண்டு
கூடல்செய் கின்றேன் எண்ணிய எல்லாம்
கூடிடக் குலவிஇன் புருவாய்
ஆடல்செய் கின்றேன் சித்தெலாம் வல்லான்
அம்பலம் தன்னையே குறித்துப்
பாடல்செய் கின்றேன் எனக்கிது போதும்
பண்ணிய தவம்பலித் ததுவே.

துதிபெறும் அயனோ டரிஅரன் முதலோர்
சூழ்ந்துசூழ்ந் திளைத்தொரு தங்கள்
விதியைநொந் தின்னும் விழித்திருக் கின்றார்
விழித்திருந் திடவும்நோ வாமே
மதியிலேன் அருளால் சுத்தசன் மார்க்க
மன்றிலே வயங்கிய தலைமைப்
பதிபதம் பெற்றேன் எனக்கிது போதும்
பண்ணிய தவம்பலித் ததுவே.

புரிசைவான் உலகில் பூவுல கெல்லாம்
புண்ணிய உலகமாய்ப் பொலிந்தே
கரிசெலாம் தவிர்ந்து களிப்பெலாம் அடைந்து
கருத்தொடு வாழவும் கருத்தில்
துரிசெலாம் தவிர்க்கும் சுத்தசன் மார்க்கம்
துலங்கவும் திருவருட் சோதிப்
பரிசெலாம் பெற்றேன் எனக்கிது போதும்
பண்ணிய தவம்பலித் ததுவே.

வேதமே விளங்க மெய்ம்மையே வயங்க
வெம்மையே நீங்கிட விமல
வாதமே வழங்க வானமே முழங்க
வையமே உய்யஓர் பரம
நாதமே தொனிக்க ஞானமே வடிவாய்
நன்மணி மன்றிலே நடிக்கும்
பாதமே பிடித்தேன் எனக்கிது போதும்
பண்ணிய தவம்பலித் ததுவே.

கட்டமும் கழன்றேன் கவலைவிட் டொழித்தேன்
கலக்கமும் தீர்ந்தனன் பிறவிச்
சட்டமும் கிழித்தேன் தூக்கமும் துறந்தேன்
சாவையும் நோவையும் தவிர்ந்தேன்
சிட்டமும் அடைந்தேன் சிற்சபை உடையான்
செல்வமெய்ப் பிள்ளைஎன் றொருபேர்ப்
பட்டமும் தரித்தேன் எனக்கிது போதும்
பண்ணிய தவம்பலித் ததுவே.