Friday 18 October 2019

SONGS OF BLISS


துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற்
றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே.

மந்திர நான்மறை யாகி வானவர்
சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன
செந்தழ லோம்பிய செம்மை வேதியர்க்
கந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே.

ஊனில் உயிர்ப்பை யொடுக்கி யொண்சுடர்
ஞான விளக்கினை யேற்றி நன்புலத்
தேனை வழிதிறந் தேத்து வார்க்கிடர்
ஆன கெடுப்பன அஞ்செ ழுத்துமே.

நல்லவர் தீயர் எனாது நச்சினர்
செல்லல் கெடச்சிவ முத்தி காட்டுவ
கொல்ல நமன்றமர் கொண்டு போமிடத்
தல்லல் கெடுப்பன அஞ்செ ழுத்துமே.

கொங்கலர் வன்மதன் வாளி யைந்தகத்
தங்குள பூதமும் அஞ்ச ஐம்பொழில்
தங்கர வின்படம் அஞ்சுந் தம்முடை
அங்கையில் ஐவிரல் அஞ்செ ழுத்துமே.

தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும்
அம்மையி னுந்துணை அஞ்செ ழுத்துமே.

வீடு பிறப்பை அறுத்து மெச்சினர்
பீடை கெடுப்பன பின்னை நாள்தொறும்
மாடு கொடுப்பன மன்னு மாநடம்
ஆடிஉ கப்பன அஞ்செ ழுத்துமே.

வண்டம ரோதி மடந்தை பேணின
பண்டை யிராவணன் பாடி உய்ந்தன
தொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க்
கண்டம் அளிப்பன அஞ்செ ழுத்துமே.

கார்வணன் நான்முகன் காணு தற்கொணாச்
சீர்வணச் சேவடி செவ்வி நாள்தொறும்
பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்
கார்வணம் ஆவன அஞ்செ ழுத்துமே.

புத்தர் சமண்கழுக் கையர் பொய்கொளாச்
சித்தத் தவர்கள் தெளிந்து தேறின
வித்தக நீறணி வார்வி னைப்பகைக்
கத்திரம் ஆவன அஞ்செ ழுத்துமே.

நற்றமிழ் ஞானசம் பந்தன் நான்மறை
கற்றவன் காழியர் மன்னன் உன்னிய
அற்றமில் மாலையீ ரைந்தும் அஞ்செழுத்
துற்றன வல்லவர் உம்ப ராவரே.

(Source: http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=3&Song_idField=3022)


பார் உரு ஆய பிறப்பு அற வேண்டும்
பத்திமையும் பெற வேண்டும்
சீர் உரு ஆய சிவபெருமானே,
செம் கமல மலர் போல ஆர் உரு ஆய என் ஆர் அமுதே,
உன் அடியவர் தொகை நடுவே,
ஓர் உரு ஆய நின் திருவருள் காட்டி,
என்னையும் உய்யக்கொண்டருளே.

பத்து இலன் ஏனும், பணிந்திலன் ஏனும்,
உன் உயர்ந்த பைம் கழல் காணப் பித்து இலன் ஏனும்,
பிதற்றிலன் ஏனும், பிறப்பு அறுப்பாய்
எம்பெருமானே! முத்து அனையானே! மணி அனையானே! முதல்வனே! `முறையோ?' என்று எத்தனையானும் யான் தொடர்ந்து உன்னை இனிப் பிரிந்து ஆற்றேனே


என்ன தருவான் தில்லை அம்பலத்தான் ?
தன்னையே தருவான் பொன் அம்பலத்தான்
என்ன தருவான் தில்லை அம்பலத்தான் ?
தன்னையே தருவான் பொன் அம்பலத்தான்
என்ன தருவான் தில்லை அம்பலத்தான் ?
தன்னையே தருவான் பொன் அம்பலத்தான்

பொன்னும் பொருளும் அள்ளித்தருவான் - உடன்
போதும் என்ற மனதையும் சொல்லித்தருவான்
பேரும் புகழும் பெற்றுத்தருவான் - அதன்பின்
போகாமல் வாழ்வதற்க்கு கற்றுத்தருவான் - அதன்பின்
போகாமல் வாழ்வதற்க்கு கற்றுத்தருவான்
என்ன தருவான் தில்லை அம்பலத்தான் ?

இக லோக வாழ்வில் உடன் இருப்பான் - ஆயினும்
பரலோக வாழ்வதற்கு வழி அமைப்பான்
சுகவாசி ஆயிருப்பான் அம்பலத்து பொதுவினிலே
சுகவாசி ஆயிருப்பான் அம்பலத்து பொதுவினிலே - அவனே
பரதேசி ஆய் திரிவான் அடியார்கள் நடுவினிலே - அவனே
பரதேசி ஆய் திரிவான் அடியார்கள் நடுவினிலே.



என்ன தருவான் தன்னையே தருவான்