Through a Devotee
18.3.2024
Once, when he came through a devotee on 18.3.2024, Agathiyar asked me why I came to him. Why did I walk his path? What did I expect to gain?
நீ எதற்கு என்னிடம் வந்தாய்? எதற்கு என் வழியில் வந்தாய்? எதை நாடி வந்தாய்?
I replied, "You asked to come in the Nadi reading. Come to your path. Worship you. Worship the Siddhas. Worship Siva. I did not expect anything else."
நீங்க வரச் சொன்னீங்க. நாடியில் என் வழிக்கு வா, என்னை வழிபாடு பண்ணு, சித்தர்களை வழிபாடு செய், சிவனை வழிபாடு செய் என்றீர்கள். வேர் ஏதும் எதிர்பார்க்கவில்லை.
He asked, "Who are you who came without any expectations. I am overjoyed. Bhogar is lamenting that he does not have a disciple like you. He is asking to come within you, to carry out treatment (for others). How can I allow him? You are mine."
யாரடா நீ எதையும் எதிர்பாராமல் வந்தாய். என் உச்சி குளிர்ந்தது. போகர் இதோ எனக்கு இப்பேற்பட்ட சீடன் அமையவில்லையே என்று கதறுகிறான். உன்னில் வரக் கேட்கிறான். வைத்தியம் பார்க்க வருகிறான். நான் எப்படி தருவேன். நீ என் தலைச்சேன் பிள்ளை.
Then Lobama joins in the conversation.
"Yes, you are my child. If Bhogar wants you, we can loan you."
ஆம், நீ என் தலைச்சன் பிள்ளை. வேண்டுமென்றால் இரவல் தருகிறோம்.
You have given yourself to us. You gave your body in your puja. You gave yourself in Yoga. You gave yourself, traveling with Tavayogi in the jungles and hills.
நீ உன்னையே எங்களுக்கு அர்பணித்துவிடாய். உன் பூஜையில் உன் உடலை அர்பணித்தாய். யோகத்தில் அர்பணித்தாய். தவயோகியுடன் காடு மலை பயணிக்கும் பொது அர்பணித்தாய்.
We can't wait to return home (AVM). Just wait another 4 months. We shall carry out some lila in your daughter's home first before returning. Why did I choose her? I shall talk through her. Then others shall believe. This shall continue."
உன் இல்லம் வர ஆவலாக உள்ளோம். இன்னும் 4 மாதம் பொறுத்து இருக்க வேண்டும். உன் மகள் இல்லத்தில் சில லீலைகள் புரிந்து விட்டு வருகிறோம். உன் மகளை ஏன் தேர்ந்தெடுத்தேன்? இனி நான் அவளுக்குள் வருவேன். அப்போது நம்புவார்கள். இது தொடரனும்.
All 18 Siddhas are gathered here. Sivavakiyar places his hand on your head. Patanjali is lying on your lap, holding your hands. He is asking if we should take you along.
இதோ அத்தனை 18 சித்தர்களும் இங்கு கூடி உள்ளனர். சிவவாக்கியர் உன் தலையைத் தொட்டு அழுதுகிறார். பதஞ்சலி உன் மடியில் படுத்திருக்கிறான். உன்னை எங்களுடன் அழைத்துச் செல்லலாமா என்கிறான். உன் கரங்களைப் பிடித்துக் கொண்டிருக்கிறான். உன் மீது சாய்ந்து கொண்டிருக்கிறான்.
Then Bhogar comes to address my daughter.
"I shall heal others through your father. Ask those who come to hug your father. Your father shall not heal. I shall heal through him. Prapanjam shall heal."
நான் போகன் வந்துள்ளேன். இனி உன் தந்தை மூலம் வைத்தியம் பார்ப்பேன். வருபவர்களிடம் உன் தந்தையை அணைத்துக்கொள்ளச் சொல். உன் தந்தை குணப்படுத்த மாட்டார். அவனுள் போகன் குணப்படுத்துவான். பிரபஞ்சம் சரி செய்துவிடும்.
Coming through the Nadi
21. 3. 2024
Coming through the Nadi, some 3 days later, he gives his blessings. He says that he is in my thoughts, moving me. He is overjoyed with our contributions towards his Marga. He then shared something that he asked me to keep to myself. He asked me to continue my tavam. Again, he blessed me with all good things to come.
மகத்துவங்கள் நிறைந்ததொரு மைந்தா வாழ்க. மகத்துவம் மேல் மகத்துவங்கள் உண்டும் வாழ்க. ஒப்பிலா ஆசியும் 18வர் வழியிலும், இறைபலமும் பெற்றதொரு மைந்தன் நீயாக இருக்க. அப்பா எல்லையில்லா சௌக்கியத்தைத் தொடர்ந்து காண. எங்கள் துணையுடனும் பார்வையும் நாளும் கணமும் உண்டு. சிந்தையிலே உன் சிந்தையைத் கலந்து அருள் பல புரிவோம். மிக்கதொரு மகிழ்ச்சியும் தான் செய்யும் தொண்டு மார்க்கமும். ....... தக்கதொரு தவத்தை முறையாய் பார்ப்பாய். உற்றதொரு ஒரு மண்டலம் இல்லத்திலே அங்கத்தைச் சுத்திட்டு தீபத்தை ஏற்றி ஒரு நாழி வணங்கிவர அற்புதம். வருகின்ற முழுமதி நாளும் தன்னில் ஒரு மகா சூட்சுமத்தை உனக்கு உரைப்பேன். தேகத்தில் எங்கள் ஆசி உண்டு. மகத்துவங்கள் நிறைந்த இன்பம் தொடர்ந்து தான், மங்கலத்தில் குறைவில்லா வெற்றியை மண்ணுலகில் கண்டு கழிக்கத் துணை இருப்போம் ஜீவா. முற்றும்.