Monday, 4 October 2021

CLARIFICATIONS FROM AGATHIYAR

After reading my last post this morning, a devotee was mooted to sit with a paper and pen by Agathiyar. Agathiyar revealed further about the subject, that of the body, soul, and spirit, immediately after I posted it. He practically came and dictated to him as the devotee took notes. We produce the exact words and full text as delivered by Agathiyar and a translation in English. I have avoided translating certain keywords for fear that I might mislead readers, since the English language does not have an equivalent for many Tamil words. This is only the beginning as Agathiyar had promised earlier that he would speak about the Atma henceforth through this blog. 
உனது உடலைப் பிரதானமாகக் கொண்டு இயங்குவது சுவாசம், அதுவே உயிர். உயிர் என்பது செயல் அற்று இருக்கக்கூடிய உறுப்பைச் செயல் பெறச் செய்வது. பிறக்கும் சிசு கருவுற மூலமாக இருப்பது பிராணவாயு. பிராணவாயு ஆணின் அணுக்களிலும் பெண்ணின் அணுக்களிலும் ஊடுருவி ஒன்றெனக் கலந்து பிரதான பொருள் வடிவம் அடையும் தன்மை உண்டானால் அங்கு உயிர் சக்தி உருவேற்ற படுகிறது.
 
உடல் என்பது ஐந்து உலோகங்களின் நுண்ணுயிர்களின் அளவுகளைத் தாங்கிக் கொண்டு பிண்டம் ஒன்றினை உருவ வடிவமாய் கர்ப்பகிரகத்தில் நிலை பெறுகிறது. பஞ்சபூதம் ஆகிய நீர், நிலம், ஆகாயம், காற்று, நெருப்பு அனைத்தும் தாய் தந்தையின் உடலிலிருந்தே  எடுக்கப்பட்டு சிசுவின் உடலைப் பிறப்பிக்கின்றது. இவைகளின் அளவுகள் குறையும் தருவாயில் சிசு தன் உடலின் பாகங்களில் கோளாறு ஏற்படுகிறது.

நிலத்தின் அளவு - 1/3
நீரின் அளவு – 4/3
நெருப்பின் அளவு – 5/6
காற்றின் அளவு – 8/2
ஆகாயத்தின் அளவு – 1/8
 
இவ்வாறு அதற்கென்று அளவுகள் பிரம்மதேவரால் கணக்கிட்டு உடலை உருவாக்கப்படுகிறது.
 
ஆன்மா உடலையும் உயிரையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளும் ஒரு சூச்சமம். இந்தச் சூச்சமத்தை பிறந்த குழந்தைகள் 1  முதல் 5 வராகை வரையிலும் உடன் இருந்து மறையும். மறைத்தலின் காரணம் இன்னதென்று இப்போது உனக்குச் சொல்ல இயலாது. ஆனபோதிலும் ஆன்ம ஒருவரின் செயலைப் பொறுத்தே மீண்டும் அவனை வந்து சேரும். ஆன்மா உன்னோடு இருந்து உன்னை ஒரு பாதைக்கு இழுத்து செல்லும் அப்போது நீ அதனை உணர்ந்தாள், உன்னில் அதிர்வாய் தோன்றி மறையும். அந்த அதிர்வினை நீ உனக்குள் நீடிக்கப் பழகினால் உன்னால் ஆன்மா என்னும் உனது அதிர்வுகளில் ஊடுருவி என்னுள் (இறை / அகத்தியன்) வந்து சேர ஒரு வழி. 

ஆன்மா உனது கர்ம வினை தாங்கி வருவது அல்ல, ஆனால் ஆன்மாவே உனது கர்ம வினையைச் சரிசெய்வதற்கு உதவி புரியும். கர்மவை சரி செய்த பின், ஆன்மாவின் தேடல் அதிகமாகி மனிதனின் அன்றாட தேடல் தீர்ந்து போகும். அவன் தேடல் முழுதாய் என்னையே தேடி வர முயற்சி செய்யும்.
 
இது இன்றைக்கு கொடுத்த பாடம் உனக்கு, மற்றவை உனக்கு மற்றொரு நாள் நான் வழங்குவேன்.

The breath primarily drives our body. Thus, it is Uyir. Uyir is that which moves limbs that are motionless.

Pranavayu is the reason for the embryo to conceive. This pranavayu that travels in the Anukkal within both the male and female, upon merging and when all configuration is in place and conducive to take a primary material form the Uyir Sakthi is given.

Udal that is a combination of the  Nun Uyir in certain proportions, present in the five materials takes on the form of a Pindam in the womb.

The Pancha Butham namely water, earth, sky, air, fire are derived from both the parent's body to produce the body of the developing baby.

When the proportions differ, there appears defects in the baby.

Earth 1/3
Water 4/3
Fire 5/6
Air 8/2
Sky 1/8

Hence, these proportions are determined by Lord Brahma as the body takes form.
 
The Atma keeps both the Udal and Uyir under its control in a secretive, subtle manner. This subtlety stays from 1 to 5 Varagai with the child before it's veiled. I cannot tell you the reason for it to be veiled now.
 
Nevertheless, the Atma will return unto him depending on his actions.

When the Atma in you pulls you to a path and if you realize it, it appears as an Athirvu or vibration and disappears. If you practice extending this vibration in you, you shall merge in this vibration that is the Atma and arrive at  Erai/ Agathiyan.
Here I have to make a correction to my earlier understanding,

Would I be wrong in equating them as follows? The physical body is an instrument and the test results or our daily experiences are conveyed and stored in the soul that already carries the imprints of the past, present, and future, all desires and past karma. As one travels the journey of life, seeing things, hearing things, tasting and touching and inhaling the scents and aroma, these are registered in the archives of the already overloaded soul. The soul is bombarded with the assault of the senses. Then we have emotions to deal with. These experiences either enrich it or degrades it. 

Agathiyar says,
The Atma does not carry our karma, but the Atma shall help rectify our karma. When the karma is rectified, the Atma's seeking shall be hastened to the extent man's daily seeking shall exhaust. His entire seeking shall shift towards efforts on reaching me (Agathiyan)
 
This is today's lesson for you. I shall reveal further another day.