Sunday, 12 April 2020

SEEING RESULTS 2

Ramalinga Adigal has a firm belief that the guru would not forsake him in his venture to know God. He prays fervently that his puja should bring results. Attaining that which he had wanted he shouts out to the world that He did not leave him nor forsake him but instead cleansed him and brought about numerous changes in him and finally came within him and merged with him.

1. கைவிட மாட்டான்என்று ஊதூது சங்கே
கனக சபையான்என்று ஊதூது சங்கே
பொய்விடச் செய்தான்என்று ஊதூது சங்கே
பூசைப லித்ததென்று ஊதூது சங்கே.

2. தூக்கம் தொலைத்தான்என்று ஊதூது சங்கே
துன்பம் தவிர்த்தான்என்று ஊதூது சங்கே
ஏக்கம் கெடுத்தான்என்று ஊதூது சங்கே
ஏம சபையான்என்று ஊதூது சங்கே.

3. பொன்னடி தந்தான்என்று ஊதூது சங்கே
பொன்னம் பலத்தான்என்று ஊதூது சங்கே
இன்னல் அறுத்தான்என்று ஊதூது சங்கே
என்னுள் அமர்ந்தான்என்று ஊதூது சங்கே.

4. அச்சம் தவிர்த்தான்என்று ஊதூது சங்கே
அம்பல வாணன்என்று ஊதூது சங்கே
இச்சை அளித்தான்என்று ஊதூது சங்கே
இன்பம் கொடுத்தான்என்று ஊதூது சங்கே.

5. என்உயிர் காத்தான்என்று ஊதூது சங்கே
இன்பம் பலித்ததென்று ஊதூது சங்கே
பொன்உருத் தந்தான்என்று ஊதூது சங்கே
பொற்சபை அப்பன்என்று ஊதூது சங்கே.

6. சிவமாக்கிக்கொண்டான்என்று ஊதூது சங்கே
சிற்றம் பலத்தான்என்று ஊதூது சங்கே
நவநோக் களித்தான் என்று ஊதூது சங்கே
நான்அவன் ஆனேன்என்று ஊதூது சங்கே.

7. நாத முடியான்என்று ஊதூது சங்கே
ஞானசபையான்என்று ஊதூது சங்கே
பாத மளித்தான்என்று ஊதூது சங்கே
பலித்தது பூசைஎன்று ஊதூது சங்கே.

8. தெள்ளமு தானான்என்று ஊதூது சங்கே
சிற்சபை அப்பன்என்று ஊதூது சங்கே
உள்ளம் உவந்தான்என்று ஊதூது சங்கே
உள்ள துரைத்தான்என்று ஊதூது சங்கே.

9. என்னறி வானான்என்று ஊதூது சங்கே
எல்லாம்செய் வல்லான்என்று ஊதூது சங்கே
செந்நிலை தந்தான்என்று ஊதூது சங்கே
சிற்சபை அப்பன்என்று ஊதூது சங்கே.

10. இறவாமை ஈந்தான்என்று ஊதூது சங்கே
எண்ணம் பலித்ததென்று ஊதூது சங்கே
திறமே அளித்தான்என்று ஊதூது சங்கே
சிற்றம் பலத்தான்என்று ஊதூது சங்கே.

11. கரவு தவிர்ந்ததென்று ஊதூது சங்கே
கருணை கிடைத்ததென்று ஊதூது சங்கே
இரவு விடிந்ததென்று ஊதூது சங்கே
எண்ணம் பலித்ததென்று ஊதூது சங்கே.

12. எல்லாம்செய் வல்லான்என்று ஊதூது சங்கே
எல்லார்க்கும் நல்லான்என்று ஊதூது சங்கே
எல்லாம் உடையான்என்று ஊதூது சங்கே
எல்லாமும் ஆனான்என்று ஊதூது சங்கே.

13. கருணா நிதியர்என்று ஊதூது சங்கே
கடவுள் அவனேஎன்று ஊதூது சங்கே
அருள்நா டகத்தான்என்று ஊதூது சங்கே
அம்பலச் சோதிஎன்று ஊதூது சங்கே.

14. தன்னிகர் இல்லான்என்று ஊதூது சங்கே
தலைவன் அவனேஎன்று ஊதூது சங்கே
பொன்னியல் வண்ணன்என்று ஊதூது சங்கே
பொதுநடம் செய்வான்என்று ஊதூது சங்கே.

15. ஆனந்த நாதன்என்று ஊதூது சங்கே
அருளுடை அப்பன்என்று ஊதூது சங்கே
தானந்தம் இல்லான்என்று ஊதூது சங்கே
தத்துவச் சோதிஎன்று ஊதூது சங்கே.

16. பொய்விட் டகன்றேன்என்று ஊதூது சங்கே
புண்ணியன் ஆனேன்என்று ஊதூது சங்கே
மெய்தொட்டு நின்றேன்என்று ஊதூது சங்கே
மேல்வெளி கண்டேன்என்று ஊதூது சங்கே.


In the following song, Ramalinga Adigal cries out affirming the numerous benefits that puja brought on him, bringing him to ascend the stages of advancement in his spiritual undertakings, becoming a Siddha himself. 

1. இரவு விடிந்தது இணையடி வாய்த்த
பரவி மகிழ்ந்தேன்என்று உந்தீபற
பாலமுது உண்டேன்என்று உந்தீபற.

2. பொழுது விடிந்தது பொற்பதம் வாய்த்த
தொழுது மகிழ்ந்தேன்என்று உந்தீபற
தூயவன் ஆனேன்என்று உந்தீபற.

3. தூக்கம் தொலைந்தது சூரியன் தோன்றினன்
ஏக்கம் தவிர்ந்தேன்என்று உந்தீபற
இன்னமுது உண்டேன்என்று உந்தீபற.

4. துன்பம் தவிர்ந்தது தூக்கம் தொலைந்தது
இன்பம் கிடைத்ததென்று உந்தீபற
எண்ணம் பலித்ததென்று உந்தீபற.

5. ஞானம் உதித்தது நாதம் ஒலித்தது
தீனந் தவிர்ந்ததென்று உந்தீபற
சிற்சபை கண்டேன்என்று உந்தீபற.

6. திரையற்று விட்டது செஞ்சுடர் தோன்றிற்று
பரைஒளி ஓங்கிற்றென்று உந்தீபற
பலித்தது பூசையென்று உந்தீபற.

7. உள்ளிருள் நீங்கிற்றுஎன் உள்ளொளி ஓங்கிற்றுத்
தெள்ளமுது உண்டேன்என்று உந்தீபற
தித்திக்க உண்டேன்என்று உந்தீபற.

8. எந்தையைக் கண்டேன் இடரெலாம் நீங்கினேன்
சிந்தை மகிழ்ந்தேன்என்று உந்தீபற
சித்திகள் பெற்றேன்என்று உந்தீபற.

9. தந்தையைக் கண்டேன்நான் சாகா வரம்பெற்றேன்
சிந்தை களித்தேன்என்று உந்தீபற
சித்தெலாம் வல்லேன்என்று உந்தீபற.

10. முத்தியைப் பெற்றேன்அம் முத்தியினால் ஞான
சித்தியை உற்றேன்என்று உந்தீபற
சித்தனும் ஆனேன்என்று உந்தீபற.


In another song, he sings of the arrival of the Lord whom he had yearned to see. He speaks of the results of his endeavor on the Holy path, bringing him the state of Siddhi and how he took on the form of the divine.

1. அம்பலவர் வந்தார்என்று சின்னம் பிடி
அற்புதம்செய் கின்றார்என்று சின்னம் பிடி
செம்பலன் அளித்தார்என்று சின்னம் பிடி
சித்திநிலை பெற்றதென்று சின்னம் பிடி.

2. சிற்சபையைக் கண்டோம்என்று சின்னம் பிடி
சித்திகள்செய் கின்றோம்என்று சின்னம் பிடி
பொற்சபை புகுந்தோம்என்று சின்னம் பிடி
புந்திமகிழ் கின்றோம்என்று சின்னம் பிடி.

3. ஞானசித்திபுரம்என்று சின்னம் பிடி
நாடகம்செய் இடம்என்று சின்னம் பிடி
ஆனசித்தி செய்வோம்என்று சின்னம் பிடி
அருட்சோதி பெற்றோம்என்று சின்னம் பிடி.

4. கொடிகட்டிக்கொண்டோம்என்று சின்னம் பிடி
கூத்தாடு கின்றோம்என்று சின்னம் பிடி
அடிமுடியைக் கண்டோம்என்று சின்னம் பிடி
அருளமுதம் உண்டோம்என்று சின்னம் பிடி.

5. அப்பர்வரு கின்றார்என்று சின்னம் பிடி
அற்புதம்செய் வதற்கென்று சின்னம் பிடி
செப்பநிலை பெற்றதென்று சின்னம் பிடி
சித்திபுரம்இடமென்று சின்னம் பிடி.

6. தானேநான் ஆனேன்என்று சின்னம் பிடி
சத்தியம்சத் தியம்என்று சின்னம் பிடி
ஊனே புகுந்ததென்று சின்னம் பிடி
ஒளிவண்ணம் ஆனதென்று சின்னம் பிடி.

7. வேகாதகால்உணர்ந்து சின்னம் பிடி
வேகாத நடுத்தெரிந்து சின்னம் பிடி
சாகாததலைஅறிந்து சின்னம் பிடி
சாகாத கல்விகற்றுச் சின்னம் பிடி.

8. மீதான நிலைஏறிச் சின்னம் பிடி
வெட்டவெளி நடுநின்று சின்னம் பிடி
வேதாக மம்கடந்து சின்னம் பிடி
வேதாந்தச் சித்தாந்த சின்னம் பிடி.

9. பன்மார்க்க மும்கடந்து சின்னம் பிடி
பன்னிரண்டின் மீதுநின்று சின்னம் பிடி
சன்மார்க்கம் மார்க்கம்என்று சின்னம் பிடி
சத்தியம்செய் கின்றோம்என்று சின்னம் பிடி.

10. சித்தாடு கின்றார்என்று சின்னம் பிடி
செத்தார் எழுவார்என்று சின்னம் பிடி
இத்தா ரணியில்என்று சின்னம் பிடி
இதுவே தருணம்என்று சின்னம் பிடி.


In yet another song, he rejoices in having these divine experiences and shares them calling the folks to partake the bliss and join him in attaining the state of deathlessness.

1. ஆடேடி பந்து ஆடேடி பந்து
ஆடேடி பந்து ஆடேடி பந்து.

2. வாழிஎன் தோழிஎன் வார்த்தைகேள் என்றும்
மரணமில் லாவரம் நான்பெற்றுக் கொண்டேன்
சூழியற் செஞ்சுடர் தோற்றுறு கீழ்பால்
தூய்த்திசை நோக்கினேன் சீர்த்திகழ் சித்தி
ஊழிதோ றூழிநின் றாடுவன் நீயும்
உன்னுதி யேல்இங்கே மன்னரு ளாணை
ஆழி கரத்தணிந் தாடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. 

3. இசையாமல் போனவர் எல்லாரும் நாண
இறவாப் பெருவரம் யான்பெற்றுக் கொண்டேன்
வசையாதும் இல்லாத மேற்றிசை நோக்கி
வந்தேன்என் தோழிநீ வாழிகாண் வேறு
நசையாதே என்னுடை நண்பது வேண்டில்
நன்மார்க்க மாம்சுத்த சன்மார்க்கம் தன்னில்
அசையாமல் நின்றங்கே ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. 

4. இன்பாலே உலகத்தார் எல்லாரும் காண
இறவாப் பெருவரம் யான்பெற்றுக் கொண்டேன்
தென்பாலே நோக்கினேன் சித்தாடு கின்ற
திருநாள் இதுதொட்டுச் சேர்ந்தது தோழி
துன்பாலே அசைந்தது நீக்கிஎன் னோடே
சுத்தசன் மார்க்கத்தில் ஒத்தவ ளாகி
அன்பாலே அறிவாலே ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. 

5. சதுமறை335 ஆகம சாத்திரம் எல்லாம்
சந்தைப் படிப்புநம் சொந்தப் படிப்போ
விதுநெறி சுத்தசன் மார்க்கத்தில் சாகா
வித்தையைக் கற்றனன் உத்தரம் எனுமோர்
பொதுவளர் திசைநோக்கி வந்தனன் என்றும்
பொன்றாமை வேண்டிடில் என்தோழி நீதான்
அதுஇது என்னாமல் ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து.

6. தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார்
தாமுளம் நாணநான் சாதலைத் தவிர்த்தே
எப்பாலும் எக்காலும் இருத்தலே பெற்றேன்
என்தோழி வாழிநீ என்னொடு கூடி
துப்பாலே விளங்கிய சுத்தசன் மார்க்கச்
சோதிஎன் றோதிய வீதியை விட்டே
அப்பாலே போகாமல் ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. 

7. வெங்கேத மரணத்தை விடுவித்து விட்டேன்
விச்சைஎ லாம்கற்றென் இச்சையின் வண்ணம்
எங்கேயும் ஆடுதற் கெய்தினேன் தோழி
என்மொழி சத்தியம் என்னோடும் கூடி
இங்கே களிப்பது நன்றிந்த உலகோ
ஏதக் குழியில் இழுக்கும் அதனால்
அங்கேபா ராதேநீ ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. 

8. சிவமே பொருள்என் றறிவால் அறிந்தேன்
செத்தாரை மீட்கின்ற திண்மையைப் பெற்றேன்
உவமேயம் இல்லாத ஒருநிலை தன்னில்
ஒன்றிரண் டென்னாத உண்மையில் நின்றேன்
தவமே புரிகின்றார் எல்லாரும் காணத்
தயவால் அழைக்கின்றேன் கயவாதே தோழி
அவமேபோ காதென்னோ டாடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. 

9. துஞ்சாத நிலைஒன்று சுத்தசன் மார்க்கச்
சூழலில் உண்டது சொல்லள வன்றே
எஞ்சாத அருளாலே யான்பெற்றுக் கொண்டேன்
இறந்தாரை எல்லாம் எழுப்புதல் வல்லேன்
விஞ்சாத அறிவாலே தோழிநீ இங்கே
வேதுசெய் மரணத்துக் கெதுசெய்வோ மென்றே
அஞ்சாமல் என்னோடே ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. 

10. ஈரமும் அன்பும்கொண் டின்னருள் பெற்றேன்
என்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி
காரமும் மிகுபுளிச் சாரமும் துவர்ப்பும்
கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி
ஊரமு துண்டுநீ ஒழியாதே அந்தோ
ஊழிதோ றூழியும் உலவாமை நல்கும்
ஆரமு துண்டென்னோ டாடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. 

11. துதிசெயும் முத்தரும் சித்தரும் காணச்
சுத்தசன் மார்க்கத்தில் உத்தம ஞானப்
பதிசெயும் சித்திகள் பற்பல வாகப்
பாரிடை வானிடைப் பற்பல காலம்
விதிசெயப் பெற்றனன் இன்றுதொட் டென்றும்
மெய்யருட் சோதியால் விளைவிப்பன் நீஅவ்
அதிசயம் பார்க்கலாம் ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. 

12. பூவாம லேநிதம் காய்த்த இடத்தும்
பூவார் மலர்கொண்டு பந்தாடா நின்றேன்
சாவா வரம்தந்து வாழ்வாயோ பந்தே
சாவாமல் என்னொடு வீழ்வாயோ பந்தே.


Can anyone ignore his calls after listening to these gems? His songs are soul-stirring and bring us his direct experiences. His experience becomes our experience in due time.