Friday, 7 February 2020

MAHIN'S JOURNEY 2

Mahindran continues to document his journey coming to the Siddha path in this post.

குருவின் வழியில் சீடன்

யார் எனது குரு என்ற கேள்விக்கு பதில் தருவதற்கு முன்பு, நான் எவ்வாறு சித்தர்களை பூஜிக்க ஆரம்பித்தேன் என்பதை சொல்லிக்கொள்கிறேன்

2013 எனது நண்பன் பாலச்சந்திரன் அகத்தியர் நாடி வாசிப்பு கண்டு வர, அவர் என்னையும் மற்ற நண்பர்களையும் அகத்தியர் நாடி பார்க்க வலியுறுத்தினார். அப்பொழுது அகத்தியர் யார் என்று எனக்கு தெரியாத நிலையில் நான் பாலச்சந்திரனிடம் இப்போது வேண்டாம், பிறகு தக்க  தருணம் வரும் நிலையில் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன்

அப்பொழுது நான் சிவன் மற்றும் அம்மன் வழிபாட்டில் (பக்தி வழிபாடு) இருக்க நாடி பார்க்கும் ஆவல் என்னிடம் இல்லை. அதையும் தாண்டி நாடிகளை வாழ்க்கையில் கஷ்டங்கள் இருப்பவர்கள் மட்டுமே பார்ப்பார்கள் என்ற அசட்டு தன்மை எண்ணம் இருந்தது

பக்தி மார்கத்தில் இருந்ததால் எனது சிறுவயதில் கோவிலுக்கு செல்லும் வழக்கம் அதிகமாகவே இருந்தது. அதை தொட்டு கோவில் அர்ச்சகர் சிறிது காலம் தன் தாய்நாட்டுக்கு செல்ல, என்னையும் எனது அண்ணனையும் கோவிலில் பூஜை செய்யும் வாய்ப்பு தந்தனர்அப்பொழுது நான் என் அம்மனோடு பேசுவது என ஒரு அம்மா மகன் உறவை வளர்த்துக்கொண்டேன்

அன்று முதல் நான் எந்த காரியம் செய்தலும் அம்மனிடம் உத்தரவு கேட்டுக்கொண்டு செய்வேன். அதைப்போலவே நாடி பார்ப்பதற்கும் அம்மாவின் உத்தரவு என்று கிடைக்கிறதோ அன்று பார்த்துக்கொள்ளலாம் என்றிருந்தேன்

அதன் பின்னர் பாலச்சந்திரன் எங்களை அகத்தியர் வனம் மலேசியாவிக்கு அறிமுகம் செய்து வைத்தார். அன்று தான் நான் முதல் முறையாக எனது குருவை கண்டேன், ஆனால் நான் உணரவில்லை அவர்தான் எனக்கு குருவாக அமைவார் என்று

சிலமாதங்கள் கடந்துபோக நாடியினை காணே வேண்டும் என்ற எண்ணம் வந்தது, அது அம்மனின் அருளாசி என்று கருதி நாடியை காண சென்றுதேன்.
அகத்தியர் அப்பா என்னது முன்ஜென்மத்தில் நான் இலங்கையில் பிறந்ததாகவும், நான் சிறுவயதிலேயே பிரம்மச்சரியம் ஏற்று இறைவனைநோக்கி பயணம் செய்ததாகவும், பின்னர் பல குருமார்களிடம் வித்தைகள் கற்றுக்கொண்டு சிந்தை சறுக்கி பல கொடிய செயல்கள் புரிந்து மக்களுக்கு கஷ்டங்கள் புரிந்திருக்கிறேன். எனது இறுதி காலத்தில் தவறினை உணர்ந்து வருந்தி திருந்தி நற்செயல்கள் செய்து எனது கர்மத்தினை கழித்ததாகவும் கூறினார். ஆனாலும் கர்மாக்கள் குறைந்த வனம் இல்லை என்று எனக்கு சில பரிகாரங்கள் சொல்லினர். அதனை அடுத்து நான் தீவிரமாக அகத்தியர் அப்பா சொல்லிய பரிகாரங்களை செய்ய துடங்கினேன்

பின்னர் அவர் ஆசியோடு இந்தியாவிற்கு நண்பர்களோடு 14 நவம்பர் 2014 அன்று பரிகாரம் செய்ய சென்றிருந்தேன். திருச்சி விமான நிலையம் அடைந்த நாங்கள் முதலில் தாய்வீடான கல்லாறு  ஆஸ்ரமம் சென்று ஷண்முகம் அண்ணனின் குருவான தவயோகி அப்பாவையும் மாதாஜி அம்மாவையும் கண்டோம். இரவில் அங்கே தங்கிவிட்டு மறுநாள் சித்தர் பூஜையில் கலந்துகொண்டப் பின்னர் ஜீவநாடி வாசிப்பு இருக்க நான் தயார் செய்து வைத்திருந்த கேள்விகளை கேக்க அப்பொழுதான் ஷண்முகம் அண்ணன் எனக்கு குரு என்று அகத்தியர் அப்பா சொன்னார். அதுமட்டும் அல்லாது தவயோகி அப்பாவும் எங்களை சீடர்களாக ஏற்றுக்கொண்டார். இரட்டிப்பு மகிழ்ச்சியோடு நான் எனது பரிகார பயணத்தை துவங்கினோன்.

பரிகாரங்கள் முடித்து மீண்டும் மலேசியா திரும்பிய நாங்கள் எங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய மாற்றங்களை கண்டுணர்த்தோம். பின்னர் ஷண்முகம் அண்ணனோடு எனது உறவினை நான் வலுப்படுத்திக்கொண்டேன். அன்றுமுதல் நான் அவருடைய அனுபவங்கை கேட்டு தெரிந்துகொள்ளே ஆவலாய் இருக்க அவரும் நான் அங்கு செல்லும் போதெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பார். தவயோகி அப்பாவோடு சேர்ந்து அவர் மேற்கொண்ட பயணங்கள் யாவும் கேட்பதற்கு மிக அற்புதமாகவே இருந்தது. அங்கிருந்து நான் பல வீசியங்களை கற்றுக்கொண்டு என்னது தினசரி வாழ்க்கையில் உபயோகம் செய்து வந்தேன்

நெருங்கி பழகியவராக இருந்தாலும் கடினமாக இருந்தாலும் ஒன்று கேட்க்கும் பொழுது என்னால் தட்டிக்கழிக்க முடியாது, உடனடியாக செய்துதர ஒப்புக்கொள்வேன். ஆனால் ஷண்முகம் அண்ணன் ஒருமுறை "NO" சொல்ல கற்றுக்கொள்ளுங்கள் அவை உங்களுக்கு எப்போதும் உதவியாக இருக்கும் என்று வலியுத்தினார். அப்பொழுது ஒரு தெளிவு பிறக்க என்னால் முடியாத ஒன்றினை நான் ஒப்புக்கொள்வதை நிறுத்திக்கொண்டேன். இப்பழக்கம் எனது தொழிலிலும் மற்றும் மற்ற உறவுகளிலும் எனக்கு மிக உறுதுணையாக இருந்தது.

இப்படியே எங்களின் உரையாடலில் நான் கற்றுக்கொண்டு பின்பற்றி வர எனக்குள் நல்ல மாற்றங்களை கண்டேன். உதாரணமாக வீண் வாதம் செய்வதை குறைத்து கொண்டேன், கோபத்தை குறைத்து கொண்டேன், அதிகம் சிந்தித்து செயல்பட தொடங்கினேன், முக்கியமாக அகத்தியர் அப்பாவோடு பேச கற்றுக்கொண்டேன். இறைவனாக பார்த்து பக்தி செலுத்தி தூரமாக பார்த்த அகத்தியரை அப்பாவாக, அம்மாவாக, நண்பராக என்ன பல உறவுகளில் காண வைத்தவர் எனது குரு.  

இவ்வாறு இருக்க 2016 இல் தவயோகி அப்பா மலேசியாவிட்கு வந்திருக்க நாங்கள் அனைவரும் அவரோடு அகத்தியர் வனம் மலேசியா நண்பர்கள் இல்லங்களுக்கு அகத்தியர் அப்பாவை அழைத்து சென்று பூஜை செய்தோம். அதேபோல் என்னுடைய இல்லத்துக்கு வருகை தந்த தவயோகி அப்பாவை கண்டதும் என்னை அறியாது ஓர் ஆனந்தத்தில் அவர் பாதம் பற்றி கண்ணீர் வடித்தேன், பிறவி பலனை அடைந்ததுபோல் அவ்வளவு ஆனந்தம்.

எனது இரு குருவும் எனக்கு காட்டியது அவரகளது திறமையை அல்ல. அவர்கள் எனக்கு அகத்தியர் அப்பாவை காட்டி இவரை பன்றிகொள் அதுவே உனக்கு உறுதுணையாக இருக்கும் என்றுதான். அவர்கள் சொல்லியவாறே நானும் இந்நாள்வரை அகத்தியர் அப்பாவை பின்பற்றி வருகிறேன் மனநிறைவோடு. இவ்வாறு இரண்டு குருவினை தந்தமைக்கு நான் அகத்தியர் அப்பாவிற்க்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்.