Sunday 4 January 2015

POURNAMI POOJA

Poster by Stalin

சித்தர் பூஜை நேரடி ஒளிபரப்பு

ஓம் அகஸ்திய மகரிஷி நமஹ!!!

அன்பான அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம். அய்யா திரு. சண்முகம் அவுடையப்பா (அகஸ்தியர்வனம், மலேசியா) அவர்களின் இல்லத்தில் தவகோலத்தில் அமர்ந்திருக்கும் மகரிஷி அகத்தியருக்கு நடைபெறும் பூஜை, அபிஷேகம், ஹோமம் மற்றும் இனிமையான பஜனை பாடல்களை சித்தர்களின் கருணையால் நமக்காக நேரடி ஒளிபரப்பு செய்கிறார்கள்.

http://agathiyarvanam.blogspot.com/…/…/siddha-puja-live.html

http://www.ustream.tv/channel/siddha-heartbeat

நாள்: 04.01.2015

நேரம்: மலேசியா (6.00 pm ) இந்தியா (3.30 pm)

மூன்று கட்டங்களாக நிகழ்ச்சி ஒளிபரப்பபடும். (முதலில் ஹோமம் - சிறிது இடைவெளி - அபிஷேகம் -இடைவெளி - பின்பு பஜனை.)

- Stalin

பூசையின் பலன்
நிகண்டு நாடியில் இருந்து அகத்திய மா முனிவர் அருளிய ஆசி சுக்கமம்

12.7.2010


உண்மையும் உத்தமமும் நிறைந்த பூசை
நிறைந்த இன்பம் தந்திடுமே மகத்துவப் பூசை
நிதானமானதொரு அற்புத பூசை
அறமுடனே அகிலம் காக்கும் பூசை

அருளான மாந்தரோடு செய்வாய் நன்றாய்
நன்றன புண்ணியங்கள் காக்கும் பூசை
நற்கதியும் பலர் அடைய செய்யும் பூசை
எண்ணாத சக்தி எல்லாம் தந்திடும் பூசை

எகாந்த நிலை அடைய வைக்கும் பூசை
வையகத்தின் மாந்தரின் அகத்தின் ஜோதி
வலமாக்கும் முழுமதி பூசை அப்பா
ஐயத்தை நீக்கிடும் பூசைதானே

ஆண்டவனை அடைய செய்யும் வழியும் இதுவே
வழி வகுக்கும் சேய்க்கும் மாந்தற்கும் தான்
வளத்திற்கும் அருளுக்கும் பொருளுக்கும்
அழியாத மார்கத்தில் இருந்த வண்ணம்

அகிலத்தில் நிலை பெற்று வாழ் வழிக்கும் பூசை
பூசையால் புண்ணியங்கள் கிட்டும் பூசை
பூர்வமும் போக்கிடும் பூசை அப்பா
இசையுடனே குடும்பவளம் தந்திடும் பூசை

எவை எல்லாம் வேண்டினும் தந்திடும் பூசை
தந்திடுமே தர்மம் தவ சிந்தை
தரித்திரியம் போக்கும் பூசை யாகும்
அந்தமும் ஆதியும் இல்லா

அகிலமதில் உயர்வு தரும் பூசை அப்பா
அப்பனே ஆண்டவனே உருகும் பூசை
அறிவிழந்தோன் அறிவாளி ஆக்கும் பூசை
ஒப்பில்லா மகத்துவம் கொண்ட பூசை

உயர்வோடு நீ எடுத்து செய்வாய் அப்பா
ஒப்பில்லா மாற்றங்கள் மகத்துவமும்
உயர் நிலை பூசையாலே இருக்குதப்பா

I shall try to stream live the pooja conducted at Agathiyar Vanam every Thursdays, on Full Moon and New Moon days too as listed on the tentative schedule at http://agathiyarvanam.blogspot.com/…/schedule-of-siddhar-po…

Please bookmark this page http://www.ustream.tv/channel/siddha-heartbeat and http://agathiyarvanam.blogspot.com/…/…/siddha-puja-live.html. Come check it out on these days. The pooja usually starts at 6 pm Malaysian time, 8 hours east of Greenwich.

We shall be broadcasting in three portions, with a break in transmission in between each portion. We shall start with the Homam. There will be a break in transmission to give us time to clear up and prepare for the next stage, the Abhisegam. We shall take another break to clear up and prepare for the final stage, the Bhajans. So please stay with us. If it is necessary, please refresh the page after every break.

I have provided the Siddha hymns too, so that you could follow singing the praise of the Siddhas in the comfort of your homes. The Siddhargal Potri is substituted with Swaha during the lighting of the sacrificial fire or homam.