Tuesday 4 October 2016

THE NEW KALLAR ASHRAM NEARING COMPLETION & AGATHIYAR'S NADI REVELATION

Dyalen Muniandi from AVM and his family are currently in India. He sent in these photos of Kallar Ashram.







புதிய ஆசிரமத்தில் அகத்தியரும், பதிணென் சித்தர்ளும் எழுந்தருள என்ன காரணம்?

கல்லாறு ஸ்ரீ அகத்தியர் ஞானபீடத்தில் உள்ள புதிய தவக்கூடத்தில் பதிணென் சித்தர்களும் எழுந்தருளி உள்ளது அனைவரும் அறிந்ததே. ஆனாலும் இந்த புதிய இடத்தில் ஆசிரம் ஏன் அமையவிருக்கிறது என்று பலர் மனதில் தோன்றியது. இந்த குடமுழுக்கு விழா எவ்வாறு நடைப் பெறும்? என்ன காரணத்தால் இந்த புதிய இடத்தில் ஆசிரமம் அமைந்தது என்று வினவிய போது அகத்திய பெருமான் ஜீவநாடியில் பொது வாக்கு பகர்ந்தார்.

அகத்திய பெருமான் ஜீவநாடியில் உரைத்ததாவது

“அண்ட சராசங்களில் துவங்கி நிற்கும் தேவ தேவா போற்றி!
அகிலத்து ஜீவராசிகளின் மூலமே போற்றி!
அடியவர்களுக்கு அருள்பாலிக்கும் தேவ தேவா போற்றி!
அடிபணிந்து அகத்தின் யான் உந்தனுக்குரைத்தேன்!

ஞானபீட திருச்சபை அன்பர்கள் ஒன்றுகூடி எனை அழைக்க பொதிகையிலிருந்து வந்தேன் யான்!

மக்களே! கேளுங்கள் எந்தனுக்கு ஆலயத்திருப்பணியும் எந்தன் விழாவும் நடக்க எத்தனித்துள்ள இனிய மனங்கள் கண்டு மகழ்ந்தோம். யாம் கடந்த கால என் விழாவில் ஆற்றிய தொண்டு அறிவோம் யாம்.

மக்களே கேளுங்கள்! எந்தனுக்கு ஆலயத் திருப்பணியும், என் விழாவும் நடக்க தொண்டுள்ளம் கொண்ட அன்பார்களே, என் மைந்தர்களே தொண்டின் சிறப்பை சொன்னோம் யாம் உணர்வு பூர்வமாக, உள்ள பூர்வமாக, சத்தியத்தின் சின்னத்தில் நின்று தொண்டு செய்வீர். அதன் நற்கர்மா புண்ணியம் பெறுவீரப்பா. உங்கள் துயர் தீரும்.

என் வடிவோம் பல ஆண்டு தவம் செய்ததற்குப்பின், பல இன்னல்கள் கண்டு இன்று எந்தனுக்கு பதிணென் சித்தர்களுக்கு ஆலயத்திருப்பணி செய்ய ஆசிதந்தோம். அன்னவனைக் கண்டு, கான மயிலாட, கண்டிருந்த வான்க் கோழிப் போல அறிவிலிகள் பல திடம் குன்றி ஆற்றாமையால் இடர் பேசுவார்கள் சிலர் கண்டோம் யாம். என் சுவடிதனை ஏளனம் பேசுவோரும் சிலருண்டு. கலியுகத்தில் கள்ளர், புல்லர், பலர் உண்டு. யாராயினும் என் பெயரை வைத்தோ என் நாமம், சொல்லியோ துர்போதனை செய்வோர், ஏற்றம் காண்பவர், இடர் காண்பவர்.

மக்களே கேளுங்கள்! வழிபடுவதற்கு மனோதிடம் வேண்டும். திடத்தை குலைக்க புல்லர்கள் வருவார். அவர் பேச்சை செவிமடுக்கா கடமைதனை ஆற்றுங்கள். மாந்தனுடைய எண்ணமெல்லாம் இறையால் அல்ல, என்னால்தான் என்ற எண்ணமுண்டு நானென்று ஆணவம் கொள்வோர். அவன் அழிவுக்கு வழி தேடுகிறான். அறிவாயப்பா!

என் ஆலயத்திருப்பணி நடக்க எத்தனம் செய்பவர்களுக்கு பதிணென் சித்தர்கள் ஆசிகள் என்றென்றும் உண்டு. என் குடமுழுக்கு விழாவில் தேவாதி தேவர்கள் எழுந்தருளுவர்.

என் ஆலயம் பூர்வ புண்ணிய ஸ்தல பெரிய விருட்சத்தின் அடியில் பல ஆண்டுகள் நான் தவம் செய்த இடம்.

மனம் கோணல், மனத்திற்கு நேர் பாதை தராது. கோணல் புத்தியுள்ளவன், எதையும் சாதிக்க இயலாது. நம்பிக்கையோடு, திடமோடு என்னை வழிபடுபவர்களுக்கு தொண்டு செய்பவர்களுக்கு நான் துணை இருப்பேன்.

பொதிகைக் குன்றில் என்னை நாடி அன்பர்கள் வந்தார்கள். இயற்கை அன்னையோ சீற்றம் மிகுதி காட்டினாள். அன்னதுவால் எம் மைந்தர்களுக்கு இடர் வருமே என்று அனுப்பித் தந்தோம். அங்கு ஆசி ஈந்தேன். என் உருவ மண்ணெடுத்து ஒருவன் வந்தான்.

லட்சியத்தில் கூறு வேண்டும். அதில் திடமாக நில்லுங்கள். இங்குள்ள மைந்தர்கள் அவர்களின் மனக்கூறு நானறிவேன்.

மக்களே! தர்மத்தின் வழிநின்று மாந்தர்களை காக்கப் பிறந்தவனே உன்னதமானவன். அவர்களே தவ வழியில் நிற்பவார்கள்.

சித்தர்களெல்லாம் இல்லையென்று சொல்லி சிவவழி தேடும் பித்தர்கள் சிலருண்டு. கண்டு தெளிவு பெறுவீர். உங்களுள்ளத்தில் நானுண்டு. உதிரத்தில் நானிருப்பேன். உங்களுக்கு எம்முடைய மனமுவந்த ஆசிகள் ஈந்து

“தொண்டு செய்! கண்டு கொள்வோம்! துயர் துடைப்போம்”

என்று கூறி விடை பெறுகிறேன். முற்றே!

Agathiyar speaks about the reason and need for moving into a new Ashram and on several other issues in a recent Jeeva Nadi revelation at Kallar Ashram.

Agathiyar is happy with the arrangements undertaken to carry out the inauguration and opening of his new Temple/Ashram/Meditation Hall complex on 16 December 2016 and to celebrate his big day on 18 December 2016 by the devotees at Kallar Ashram. He is aware of the service rendered and hardship they went through in making the fest a success the previous year. Agathiyar asks the devotees to carry on with their undivided and selfless service which would in return bring good karma and good merits. "Thy sorrow shall leave too", he adds.

After many years of tapas and overcoming many obstacles, Tavayogi has set out to build a temple for Agathiyar and the 18 Siddhas. Agathiyar has blessed him and his initiative and endures. He reminds us that much strength is required to be remain faithful and devoted to him. He adds that all his devotees will receive the blessings of the 18 Siddhas too. All the Devas and Devis will be present too at the coming fests.

Agathiyar points out to the location of a very old tree and reveals that he had been meditating at that spot for many years.

The tree that Agathiyar mentioned where he had meditated for many years
Finally Agathiyar speaks about the greatness of standing firm on the path of Dharma.

Agathiyar blesses everyone.