Wednesday, 30 April 2014

BENEFITS OF PERFORMING LIBATION OR ABHISEGAM


When Agathiyar came to Malaysia in the form of a bronze statue, he had asked that we conduct Nava Abhisegam or nine kinds of libation on him. Prior to that he was to be taken to the Aadhi Kumbeshwarar Temple in Kumbakonam and a ritual performed before he crossed the sea. This and other instructions were specifically mention in the Nadi. We did as instructed. That is how we came to conduct libation for Agathiyar every Thursdays, full moon days, new moon days, on festive occasions, and annually during Agathiyar's Jayanthi and Guru Puja.

What is the significance of performing libation?

Kumar Esan shared the following post on Fb by பட்டமங்கலம் ஜோதிடம் on the benefits of performing libation or abhisegam.

அம்மனுக்கு என்ன அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் ......

இந்த உலகை படைத்து, காத்து வரும் ஜகன்மாதாவுக்கு கீழ்கண்ட முறைப்படி அபிஷேகங்களைச் செய்தால் சிறப்பான பலன்களைப் பெறலாம்,

சந்தனாதித் தைலங்களால் அபிஷேகம் செய்பவர் சுகம் பெறுவர்,

அரிசி மாவு - மல நாசம் மலம் என்பது தீவினைகள்,

மஞ்சள் பொடி - ராஜ வசியம், அரசாங்க அலுவல்களை விரைவில் சாதகமாக்கிக் கொள்ளலாம்,

பஞ்ச கவ்யம் - ஆத்ம சுத்தி, தெய்வீக சாதனைக்கு உதவுவது, 

ரசபஞ்சாம்ருதம் - கார்யஸித்தி, எல்லாக் காரியங்களிலும் வெற்றி,

பல (பழ) பஞ்சாமிர்தம் - தனவிருத்தி குறைவற்ற செல்வம் தரும்,

பால் - தீர்க்காயுள், நீண்ட ஆயுள் தரும்,

தயிர் - குழந்தைப்பேறு உண்டாகும்,

நெய் - மோக்ஷம் மோட்சத்தைத் தரும். ஞான விருத்தி, ஞானத்தை அளிப்பது.

தேன் - வாக்ஸித்தி, இனிமையான குரலையும், சங்கீதத்தில் திறமையையும் அளிக்கும்,

கருப்பஞ்சாறு - நித்ய சுகம், அளவற்ற இன்பங்களைக் கொடுக்கும்,

சர்க்கரை - சத்ரு நாசம், எதிரிகளை விரட்டி வெற்றி தரும்,

வாழைப்பழம் - தான்யவிருத்தி, பயிர் விருத்தி அமோக விளைச்சல் செழிப்பு,

பலாப்பழம் - எவரையும் வசப்படுத்தும் வசீகரத் தன்மை,

எலுமிச்சம்பழம் - ம்ருத்யு நிவாரணம், அகால மரணத்தை நிவிருத்தி செய்து 
வியாதிகளைத் தீர்த்து நலம் தரும்,

அன்னம் - ராஜகௌரவம், அரசுரிமை, அரசனுக்குச் சமமான போக பாக்கியங்கள் தரும்.

இளநீர் - அபமிருத்யு நாசம், சத்புத்திரப்பேறு, கோரோசனை, தீர்க்காயுள், நீண்ட ஆயுள், 

பச்சைக்கற்பூரம் - பயத்திலிருந்து விடுவித்து மன நிம்மதியையும், 
சந்தோஷத்தையும் தரும்,

கஸ்தூரி - ஜயம் வெற்றி தரும்,

பன்னீர் - சாலோக்யம், தெய்வ உலகில் வாழும் பேறு கிட்டும்,

சந்தனக்குழம்பு - சாயுஜ்யம், சிறந்த ஞானம் பெற்று இறையுணர்வு பெற்று இறைவனோடு ஐக்கியமாகும் நிலை. சாயுஜ்ய நிலையளிக்கும்.

சுத்தமான குளிர்ந்த நீராலும், கங்கை முதலான புண்ணிய நதிகளின் தீர்த்தங்களால் அபிஷேகம் செய்பவர் அன்னையின் அருளுக்குப் பாத்திரமாகி அனைத்து வினைகளும் ஒழிந்து இவ்வுலக நலன்களும் மேலுகப் பேறும் ஒருங்கே பெறுவர்.