Sunday, 27 April 2014

REACHING OUT TO THE SIDDHAS PART 4/4

Bala Chandran, a devout devotee of Agathiyar continues his pilgrimage cum atonement or Parikaram at numerous temples around India and finally returns to Kallar before taking his flight back to Malaysia.

Thirutani
Sivanmalai


Chennimalai

Kallar




Arulmigu Pinnaakku Siddhar Tannaasi Eesar Thirukovil, Coimbatore

Kumar Esan shared the following post on Fb, by கிரிதரன் மகாதேவன் explaining the significance of the Arulmigu Pinnaakku Siddhar Tannaasi Eesar Thirukoyil in Selvapuram near Periyanayakanpaalaiyam in Kovai.
புத்தி சுவாதீனத்தை நீக்கும் தன்னாசியப்பர் ஆலயம்!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கோவை--பெரியநாயக்கன் பாளையத்தைஅடுத்த செல்வபுரம்தன்னாசியப்பர் ஆலயம்--பின்னாக்கு ஈசர் எனப்படும் தன்னாசிசித்தர்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
மருத்துவ சிகிச்சைகளால் தீர்க்க முடியாத புத்தி சுவாதீன நோயை குணமாக்கக்கூடிய திவ்ய தலமொன்று கோவை மாவட்டத்தில் உள்ளது.
அதுதான் பாலமலைத் தொடரின் கீழ் அமைந்துள்ள தன்னாசியப்பர் ஆலயம். 
பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்த செல்வபுரம் என்னும் கிராமத்தில் உள்ள ஆலயத்தில்தான் மேற்சொன்ன அற்புதம் நூற்றாண்டுகளுக்கும் மேலாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
கிட்டத்தட்ட நானூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஆளரவமே இல்லாத இந்த மலையில் உள்ள சிறிய குகையில் சித்தர் போலிருந்த தன்னாசி என்பவர் வசித்து வந்தார். இவர் தினமும் மலையடிவாரத்தில் இருந்த ஆலமரத்திற்கு கீழ் அமர்ந்து தியானம் செய்வது வழக்கம். அப்பகுதியில் கால்நடை மேய்ப்போர் இவரிடம் பழகி வந்தனர். யாரிடமும் அதிகம் பேசாமல் அடிக்கடி நிஷ்டையில் இருந்த இவரின் முகத்தில் இருந்த தேஜûஸக் கண்டு பின்னாளில் வணங்க ஆரம்பித்தனர். அத்துடன் தமக்கு வந்த கஷ்டங்களை சொல்லி அதனை போக்கவும் வேண்டினர். அவர் அருளாசி வழங்கியதால் நோய்கள் பறந்தோடின. இதனால் சித்தரின் புகழ் மற்ற கிராமங்களுக்கும் பரவ ஆரம்பித்தது.
இந்நிலையில் ஒருநாள் குகைக்குள் சென்றவர் மீண்டும் வெளியில் வரவேயில்லை. இதனால் அதிர்ச்சியுற்ற மக்கள் அவரின் வரவிற்காகக் காத்திருந்தனர். குகைக்குள் செல்லவும் பயம். ஆனால் இறுதிவரை அவர் வெளியில் வரவே இல்லை. பெரும்பாலும் வெகு அமைதியாக வனவிலங்குகள் சுற்றித் திரிந்த அந்த பகுதியில் அவரை வணங்கக் காத்திருந்தவர்கள் அவர் வராமல் போகவே வருத்தமடைந்தனர். அவர் தவம் செய்த ஆலமரத்திற்கு கீழ் சிலை வைத்து அவரை வணங்க ஆரம்பித்தனர். 
பிற்காலத்தில் பலர் தங்கள் நோய் தீர அங்கேயே தங்கி வணங்கினர். வனவிலங்குகள் அதிகமிருந்ததால் ஆண்டிற்கொரு முறை மட்டும் அங்கு விழா நடத்திக் கொண்டாடினர். 
தற்போது பல்வேறு பக்தர்களின் பணியினால் இன்று மிகப் பெரிய ஆலயமாகத் திகழும் இக்கோயிலில் இரு வேளை பூஜை நடக்கிறது.
கோயில் அமைப்பு: பக்தர்களின் அருட்கொடையால் தற்போது கருவறை,விமானம், முன்மண்டபம் கட்டப்பட்டு சிறப்புறக் காட்சியளிக்கிறது. கருவறையில் தன்னாசி ஈசர் மிகப் பெரிய மீசையுடன் அருள்பாலிக்கிறார். கோயிலின் தெற்குப் பகுதியில் விநாயகர் கோயில் உள்ளது. வடக்குப் பகுதியில் பெருமாள் கோயிலும், அதற்குப் பின்னால் ஆஞ்சநேயர் சந்நிதியும் உள்ளன. மேற்குப் பகுதியில் மாரியம்மன் கோயில் உள்ளது. நவக்கிரக் கோயிலும் இருக்கிறது. 
அகஸ்திய சித்தர், சட்டைநாத சித்தர், பின்னாக்கு ஈசர் எனப்படும் தன்னாசிசித்தர், பாம்பாட்டிசித்தர், மச்சமுனிசித்தர், குதம்பைச்சித்தர், இடைக்காடர்சித்தர் உள்ளிட்ட சித்தர்களின் சிலைகளோடு, திருமூலர், போகர், கோரக்கர், கருவூரார் சிலைகளும் வரிசையாக பிரதிஷ்டை செய்யப்பட்டு தினமும் பூஜிக்கப்படுகின்றன.






அதிசயம்: இன்னுமொரு சுவாரஸ்யமாக நிகழ்வும் இங்கே நடக்கிறது. 
கருவறைக்கு பின்னால் உள்ள ஆலமரத்தடியில் யோக நிலையில் சித்தர் ஒருவர் சிலை உள்ளது. தங்கள் மனதில் நினைத்துள்ள காரியம் வெற்றி பெற வேண்டும் என்ற கோரிக்கையோடும், நம்பிக்கையோடும் வருவோர் இவரின் முன்பு உள்ள தரையில் இரு கைகளை விரித்து வைத்து வேண்டினால் தானாகவே இரு கைகளும் இணைகின்றன. இணையவில்லை என்றால் நினைத்த காரியம் வெற்றி பெறாது என்று அர்த்தமாம். இதற்காகவே பலர் இக்கோயிலை நாடி வருகின்றனர்.
நோய்கள் தீரும் அற்புதம்: புத்திசுவாதீனம் இல்லாதவர்கள்,பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இக்கோயிலில் தங்கி மூலிகை சிகிச்சை பெறுகின்றனர். இங்கு தற்போது உள்ள அர்ச்சகர் இதனைச் செய்கிறார். இந்நோய்களால் பாதிக்கப்பட்ட பலர் இங்கே தங்கி தன்னாசி ஈசரின் அருளால் குணமாகிச் செல்வது காலங்காலமாக நிகழ்ந்து வரும் அற்புதம்.
அமைவிடம்: கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் 20 கி.மீ. தொலைவில் உள்ள பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள வீரபாண்டி பிரிவில் இறங்க வேண்டும். அங்கிருந்து மேற்கே திருமலைநாயக்கன்பாளையம் வழியாக 5 கி.மீ. தொலைவில் உள்ள செல்வபுரம் கிராமத்திற்கு வரவேண்டும். இதுவரை பேருந்து வசதி உள்ளது. இதற்கு பின் மீண்டும் மேற்கே 2 கி.மீ. தொலைவு தோட்டங்களினூடே செல்லும் பாதையில் நடந்து சென்றால் கோயிலை அடையலாம். தங்குவதற்கு வசதியுண்டு.
நடை திறந்திருக்கும் நேரம்: காலை 7 மணி முதல் மதியம் 1 மணிவரை.மாலை 4 மணிமுதல் 7 மணிவரை. யானைகள் உலவும் காட்டுப் பகுதி என்பதால் மாலை 6 மணிக்கு மேல் செல்வதைத் தவிர்ப்பது நலம்.