I am no authority on the Siddhas. Neither am I a spokesman for them. What I share on these pages is my journey in trying to understand and comprehend the ways of the Siddhas as they begin to interact in my life and those close to me. Occasionally a friend and devotee would share their experiences too that I post too for the benefit of readers and seekers on the path.
A friend shared the following,
One of the events that is to take place when one reaches a particular level in his/her sadhana is சக்தி நிபாதம் .... The descent of Grace. How do we know if such has taken place? It is obvious, isn't it, that the Guru appears.
One should be blessed to have a guru look over his shoulders. My friend has Krishnaveni Amma who passes him messages in his meditation. He shares some beautiful thoughts.
In so far that duality exists, the external worship will exist, as will the many pilgrimages. However, when one resides totally in the seventh stage, after transcending the six chakras, the differentiation will vanish, like the siddhas. Maybe that is the secret of "The Seventh Heaven". சித்தம் தெளிந்தவன் சித்தன். The siddhas come down to the sixth to look after and guide Creation.
He shared another pearl that was shared to him. It is another wonderful composition by Isaikavi Ramanan posted on his fb with a translation given by him too.
மார்கழிப் பனித்துளிகள் 25 : ஜனவரி 9, 2021நமச்சிவாயனுக்கு..
என்னென்று தெரியாமலே, அன்று
என்னெஞ்சை நானிழந்தேன்
ஏனென்று புரியாமலே, ஒரு
வானெங்கும் நான்மிதந்தேன்
என்கண்கள் வழியே நான்கொள்ளை போனேன்
எல்லோரும் காண சிறுபிள்ளை ஆனேன்
கண்முன்பு ஏதும் காணேன்! (என்னென்று)
பொன்போன்ற மேனி தீயோடும் கண்கள்
புனலாடும் சடைமீது பூப்போன்ற நிலவு
வினையஞ்சும் சூலம் விளையாடும் நாகம்
நல்லோர்க்கும் தீயோர்க்கும் நடுவான பாதம்
கண்பார்க்க முடியாமல் கால்களில் வீழ்ந்தேன்
கண்ணாரக் காணவே மெல்லநான் நிமிர்ந்தேன்
கண்பார்க்க முடியாமல் கால்களில் வீழ்ந்தேன்
நடமாடும் ஒருகால் நகராமல் ஒருகால்
நலமா எனக்கேட்கும் கரமொன்றும் ஒருபால்
இடமாடும் உமையே! இனியேது சுமையே!
இனியெந்த நேரத்தும் இமைக்காது இமையே!
உன்னெஞ்சில் நானும் பூவாகினேனா
என்னெஞ்சில் நீயும் விரிகின்ற வானா
எதுநெஞ்சம் எனக்கொஞ்சம் சொல்வாயென் ஐயா!
என்னென்று தெரியாமலே, அன்று
என்னெஞ்சை நானிழந்தேன்
ஏனென்று புரியாமலே, ஒரு
வானெங்கும் நான்மிதந்தேன்
ரமணன்