Monday, 29 June 2015

அகத்தியர் வனப் பூசை! (Agathiyar Vana Poosai!)


A beautiful digital composition by Bala Chandran Gunasekaran 
Saravanan Palanisamy who contributes his art regularly to Siththan Arul, has dedicated a hymn to Agathiyar at Agathiyar Vanam Malaysia in his blog http://arulgnanajyothi.blogspot.com/2015/06/agathiyar-vana-poosai.html today. He first surprised us during puja at AVM sometime back by rendering a few verses from this hymn. I reproduce below his beautiful composition for readers of Siddha Heartbeat.
அகத்தியர் வனப் பூசை! 
வணக்கம்...
மகாகுரு அகத்தியர் அருளால், அகத்தியர் வனப் பூசை என்ற செய்யுளை எழுத்தும் வாய்ப்பு அடியேனுக்கு கிடைத்தது. இந்த செய்யுளை அகத்தியர் வனத்தில் நடை பெற்ற அமாவாசை பூசையன்று அவர் முன் பாடும் வாய்ப்பையும் அவர் அருளினார். அகத்தியர் அடியவர்களுக்கு இதனை அன்புடன் சமர்ப்பிக்கிறேன்.
மாந்தர் எல்லாம் வந்திடுவார் உந்தனுக்கு பூசை செய்ய,
கூடிடுவோம் நாங்கள் எல்லாம் அகத்திய வனமதிலெ,
செய்திடுவோம் யாகமுடன் அபிஷேக பூசையும் தான்,
அக மகிழ்ந்து அகத்தீசா எங்களுக்கு அருள்வாயே!
சித்தர்களும் தேவர்களும் உன்னை நாடியே,
எங்களுடன் வந்தமர்வார் உன்னை காணவே,
என்ன தவம் செய்தோம் நாங்கள் இந்த வாழ்விலே,
பெரும் புண்ணியனே உன் பாத கமலங்களை பற்றவே!
யாகமதில் சுடர் ஒளியாய் வந்து நிற்பவனே,
எங்கள் வினை அனைத்தும் சுட்டெரிக்க வந்தாய் நீயோ?
சுடர் ஒளியாய் வந்திடுவாய் பேரொளியை காட்டிடவே,
பேரொளியை காட்டியே எங்களை பரி பூரனமாக்கிடுவே!
பாலிலே நீ குளித்து பல வினைகளை அறுத்திடுவாய்!
சந்தனத்தில் நீ குளித்து சந்தான பாக்கியத்தை தந்திடுவாய்!
மஞ்சளிலே நீ குளித்து சகல மங்களத்தையும் அருள்வாய்!
பன்னீரிலே நீ குளித்து பங்கங்களை போக்கிடுவாய்!
பாங்கான பட்டுடன் மலர் மாலைகளை சூட்டிடுவோம்,
வாச மலர்களை துவியே உன் பாதத்தில் பணிந்திடுவோம்,
பழமுடன் பக்ஷினங்கள் மகிழ்வுடன் படைத்திடுவோம்,
வந்திடுவாய் அகத்தீசா ஓடோடி வந்திடுவாய்!
சேய் நாங்கள் அழைக்கின்றோம் ஓடோடி வருமப்பா!
ஓடோடி வந்து இங்கு எங்களுக்கு அருள் தருவாய்,
வையகத்தின் வாழ்வு தன்னை வாழ் வாங்கு வாழவே,
வந்திடுவாய் அகத்தீசா தந்திடுவாய் ஆசி தன்னை!
Agathiyar Vana Poosai
Greetings,

By the grace of mahaguru Agathiyar, I had the chance to write a hymn on the prayers being done at Agathiyar Vanam (Malaysia). Mahaguru also gave me an opportunity to recite the hymn in front of Him on new moon prayer held at Agathiyar Vanam. I would love to present this hymn to all Agathiyar devotees.

Maanthar yellaam vanthiduvaar unthanukku poosai seiya,
Koodiduvoam naanggal yellaam agathiya vanamathile,
Seithiduvom yaagamudan abhishega poosaiyumthaan,
Aga magizhnthu agattheesaa yenggalukku arulvaaye!

Sitthargalum thevargalum unnai naadiyeh,
Yenggaludan vanthamarvaar unnai kaanaveh,
Yenna thavam seithoam naanggal intha vaazhvileh,
Perum punniyaneh un paatha kamalanggalai patraveh!

Yaagamathil sudar oliyaai vanthu nirpavaneh,
Yenggal vinai anaitthum sutterikka vanthaai neeyoh?
Sudar oliyaai vanthiduvaai pehroliyai kaattidaveh,
Pehroliyai kaattiyeh yenggal pari pooranamaakkidaveh!

Paalileh nee kulitthu pala vinaigalai arutthiduvaai!
Santhanatthil nee kulitthu santhaana bhaakkiyatthai thanthiduvaai!
Manjalileh nee kulitthu sagala manggalatthaiyum arulvaai!
Panneerileh nee kulitthu panggangalai poakkiduvaai!

Paanggaana pattudan malar maalaigalai soottiduvoam,
Vaasa malargalai thuuviyeh un paathatthil paninthiduvoam,
pazhamudan pakshinanggal magizhvudan padaitthiduvoam,
vanthiduvaai agattheesaa odoadi vanthiduvaai!

Sei naanggal azhaikkindrom odoadi vaarumappaa!
Odoadi vanthu inggu yenggalukku arul tharuvaai,
Vaiyagatthin vaazhvu thannai vaazh vaanggu vaazhnthidaveh,
Vanthiduvaai agattheesaa thanthiduvaai aasi thannai!
Saravanan Palanisamy