Wednesday 8 February 2017

SACRED REVELATIONS 4 - DEATHLESSNESS

Aasan TR brings Bharathi's prayers to Vaalaikumari or Manonmani to our attention and goes on to explain the Siddha's concept of deathlessness that Bharathi too took up.



எனக்கு முன்னே சித்தர் பல ரிருந்தாரப்பா!
யானும்வந்தே நொரு சித்தனிந்த நாட்டில்
மனத்தினிலே நின்றிதனை யெழுது கின்றாள்
மனோன்மணியென் மாசக்தி வையத் தேவி

தினத்தினிலே புதிதாகப் பூத்து நிற்கும்
செய்யமணித் தாமரை நேர் முகத்தால் காதல்
வனந்தனிலே தன்னையொரு மலரைப் போலும்
வண்டினைப்போ லெனையுமுரு மாற்றிவிட்டாள்

தீராதகாலமெலாந் தானு நிற்பாள்
தெவிட்டாத இன்னமுதின் செவ்வி தழ்ச்சி
நீராகக் கனலாக வானாக் காற்றா
நிலமாக வடிவெடுத்தாள்நி லத்தின் மீது

போராக நோயாக மரணமாகப்
போந்திதனை யழித்துடுவாள் புனர்ச்சி கொண்டால்
நேராக மோனமகானந்த வாழ்வை
நிலத்தின் மிசை யளித்தமரத் தன்மை ஈவாள்

மாகாளி பராசக்தி உமையா ளன்னை
வைரவிகங் காளி மனோன் மணிமா மாயி
பாகார்ந்த தேமோழியாள் படருஞ் செந்தீ
பாய்ந்திடுமோர் விழியுடையாள் பரம சக்தி

ஆகார மளித்திடுவாள் அறிவு தந்தாள்
ஆதிபரா சக்தியென தமிர்த்ப் பொய்கை
சோகா டவிக்கு ளெனைப் புக வொட்டாமல்
துய்ய செழுந் தேன்போலே கவிதை சொல்வாள்

மரணத்தை வெல்லும் வழி 

பொன்னார்ந்த திருவடியைப் போற்றி யிங்கு
புகலுவேன் யானறியு முண்மை யெல்லாம்
முன்னோர்க லெவ்வுயிருங் கடவுலென்றார்
முடிவாக அவ்வுரையை நான் மேற்கொண்டேன்

அன்னோர்க ளுரைத்த தன்றிச் செய்கையில்லை
அத்வைத நிலை கண்டால் மரணமுண்டோ?
முன்னோர் களுரைத்த பல சித்தரெல்லாம்
முடிந்திட்டார், மடிந்திட்டார், மண்ணாய் விட்டார்

பொந்திலே யுள்ளாராம், வனத்தி லெங்கோ
புதர்களிலே யிருப்பாராம், பொதியை மீதே
சந்திலே சவுத்தியிலே நிழலைப் போல
சற்றே யங் கங்கே தென் படுகின் றாராம்

நொந்த புண்ணைக் குத்துவதிற் பயனொன்றில்லை
நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்
அந்தணனாம் சங்கரா சார்யன் மாண்டான்
அதற்கடுத்த இராமா நுஜனும் போனான்

சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்
பலர்புகழு இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்
பார்மீது நான்சாகா திருப்பேன் காண்பீர்!

மலிவுகண்டீ ரிவுண்மை பொய் கூறேன்யான்
மடிந்தாலும் பொய்கூறேன் மானு டர்க்கே
நலிவுமில்லை, சாவுமில்லை, கேளீர், கேளீர்!
நாணத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை

அசுரர்களின் பெயர்

அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால்
அப்போது சாவுமங்கே அழிந்து போகும்
மிச்சத்தை பின்சொல்வேன், சினத்தை முன்னே
வென்றிடுவீர்மே தினியில் மரணமில்லை

துச்சமெனப் பிறர் பொருளைக் கருதலாலே
சூழ்ந்ததெலாங் கடவுலேனச் சுருதி சொல்லும்
நிச்சயமாம் ஞானத்தை மறத்த லாலே.
நேர்வதே மானுடர்க்குச் சினத்தீ நெஞ்சில்.

It would not be an overstatement to mention that just as Tavayogi showed me Agathiyar, Aasan TR showed me Siddha Bharathi.