Thursday 1 July 2021

WHAT I CAME TO UNDERSTAND

Mahindren after reading the last post called me and subsequently wrote the following piece.

Siddha Heartbeat இன் முந்தைய பதிவை ஒட்டி மகின்திரன் இந்தப் பதிவினை எழுத்தி உள்ளார்.

நான் உணர்ந்தவை

இந்தப் பதிவு எதைப் பற்றியது என்றால், Siddha Heartbeat இன் முந்தைய பதிவை ஒட்டியதுதான். நம்மில் பலருக்கு இந்த வலைப்பதிவு மிகப்பெரிய வழிகாட்டியாகவும், சித்தர்களின் லீலைகளைப் பற்றியும் அறிமுகம் செய்தவையாகவும் இருக்கும். சித்தர்களின் அறிமுகமே இல்லாத எனக்கு இந்த ஊடகம் மிகவும் உறுதுணையாக இருந்துகொண்டு வருகிறது. நான் கடந்து வந்த பயணங்களை இங்குச் சிலமுறை நான் பதிவு செய்ததுண்டு. அவை அனைத்துமே நான் அகத்தியர் அப்பா சொல்லிய பரிகாரங்களை செய்ததாலும், அவரின் வழிப்பாதையில் நடப்பதினாலும் நடந்த மாற்றங்களே.

இப்பொது இந்த ஊடகத்தின் முந்தைய பதிவைப் படித்ததும், அதிலிருந்து எனக்குப் புரிந்ததை சிறிது விளக்கமாகச் சொல்லலாம் என்றே இந்தப் பதிவை எழுத முனைகின்றேன். அதற்கு முன்பு நாம் அந்தப் பதிவின் சுருக்கத்தைக் கண்டுவிடுவோம். 

விமலாவின் உந்துதலில் "Hamilton : An American Musical" என்ற நிகழ்ப்படத்தை பார்த்தபோது அதில் அரங்கேற்றபட்ட "Who Lives, Who Dies, Who Tells Your Story" என்னும் பாடல் "Hamilton” என்னும் மாமனிதரின் கதையை தழுவியது என்று அறிந்தேன். அவர் தனது வாழ்நாளை தனது நாடாகிய "அமெரிக்க” வை வளம் மிகுந்தவையாக மாற்ற முயற்சித்தார். அப்படிருக்க 47 - 49 வயதில் சுட்டு கொல்லப்பட்டார். இப்பொது இவரது கதைகளை யார் சொல்லுவது, இவரது கதையைச் சொல்லும் அளவிற்கு இவர் என்ன செய்துவிட்டார்? மனிதன் என்பவன் ஒரு கோட்பாடோடு வாழ்ந்து வந்தநிலையில், இவர் மட்டும் தனது வாழ்க்கையின் நோக்கம் என்னவென்று அறிந்து புதிய பாதையைத் தனக்கென அமைத்துக்கொண்டு நடக்கவே "அமெரிக்க” விற்கு மாற்றம் கொண்டுவரவே, "Founding Fathers of America" என்று மற்றவர்களால் அழைக்கப்பட்டு, அவரின் கதை பேசப்பட்டு வருகிறது.

இந்தக் கதையிலிருந்து எனக்குப் புலப்பட்டது என்னவென்றால், பிறப்பினால் ஒன்றுபட்ட மனிதர்கள் தங்களுக்கென்று ஒரு தனித்துவம் இருப்பதை உணர்ந்து அதனை ஒரு கோட்பாடாக எடுத்துக்கொண்டு வாழ்ந்தால் எல்லோருமே ஒரு சுயசரிதைக்கு உரியவர்கள் ஆவார். அகத்தியர் அப்பா எப்பொழுதும் சொல்வதைப் போலச் சித்தர்கள் வழியில் நடக்கும் நாம் கூட நமது தனித்துவம் என்னவென்று அறியவே பலவழிமுறைகளை வகுத்து தந்து இருக்கிறார். சரியை, கிரியை, யோகம், ஞானம் இவைகளை கடைப்பிடித்து வருவதோடு உள்பயணமாகிய தியானத்தையும் செய்து வரும்போது நம்மை நாம் அறியும் வாய்ப்பு கிடைக்கும். இதன் வெளிப்பாடே ஞானத்தை நோக்கிப் பயணம் பெற உறுதுணையையாய் இருக்கும். நாம் செய்யும் செயலுக்கு ஏற்பவே நமக்கு அந்த ஞானம் வந்தடையும். இவை ஒவ்வொருவருக்கும் வேறுபட்டே இருக்கும் என்று அகத்தியர் அப்பா சொல்லி இருக்கிறார்.

இப்போது நாம் அகத்தியர் அப்பாவையும், மற்ற சித்தர்களையும் பற்றிப் பேசும் நிலையில் இருக்க, அகத்தியர் அப்பா நம்மையும் அவர்களைப் போல் சித்தர்களின் வரிசையில் சேர்பதற்கே நம்மோடு பயணம் செய்கிறார். இவ்வாறு இருக்க, நாம் கற்றதையும் தம்மோடு வைத்துக்கொள்ளாது, நம்மொடு மற்ற ஜீவராசிகளையும் மேல்நிகைக்கு கொண்டு வரும் போது நாம் புளங்காகிதம் அடைவோம். அதாவது இந்த ஊடகத்தில் கூறிய பலவழிமுறைகளை ஒருமனத்துடன் செய்துவரவே நம்முள் ஏற்படக்கூடிய மாற்றங்கள், நமது சிந்தனை திறனையும் மாற்றம் அடையச்செய்யும். ஒருமனதோடு செய்யும்போது நாம் இந்த பிரபஞ்சத்தோடு இணைகிரோம். அந்நிலையில் நாம், நம்மைச் சுற்றி இருக்கும் எல்லா உயிரினங்களும், பொருட்களும், எண்ணங்களும், செயல்களும் ஒன்றிணைத்து வெட்ட வெளியில் இணைக்கிறோம். அந்த நிலையில் நீ வேறு நான் வேறு என்ற வேற்றுமை மறைந்து எல்லாம் சமநிலை அடைந்து, அவற்றுக்குப் பெயர் சொல்லமுடியாத நிலைக்கு நாம் தள்ளப்படுவோம். அதையே நக்கீரர் விநாயகர் திரு அகவல் பாடல் வரிகளில் அருமையாகச் சொல்லிருப்பார்.

மோன ஞான முழுதுமளித்து
சிற்பரிபூரண சிவத்தை காண
நற்சிவ நிட்கள நாட்டமுந் தந்து
குருவும் சீடனும் கூடிக் கலந்து
இருவரும் ஒரு தனி இடம் தனில் சேர்ந்து
தானந்தமாகித் தற்பர வெளியில்
ஆனந்த போத அறிவைக் கலந்து
ஈசனிணையடியிருத்தி மனதே
நீயே நானாய் நானே நீயாய்க்
காயா புரியைக் கனவெனவுணர்ந்து
எல்லாமுன் செயலென்றேயுணர
நல்ல உன்னருள் நாட்டந் தருவாய்
காரண குருவே கற்பகக் களிறே
வாரணமுகத்து வள்ளலே போற்றி


யோகத்தினால் கூடிய ஞானத்தில் சும்மா இருக்கும் சுகத்தை அடைய சிவனை முழுதாய் ஏற்று, சுய விருப்பு வெறுப்பற்ற நிலையில் குருவோடு சேர்ந்து சீடனாகிய நாமும் வெட்டவெளியில் நமது முயற்சி அற்று குருவின் அருளால் கலவைக்கொண்டு, எல்லாம் சமமே என்ற உணர்வினை உணர்ந்து அறிவைப் பெற்று, மனதினை சிவத்தோடு ஐக்கியப்படுத்தி கொண்டு வரவே இவை யாவும் கனவென்று உனர அதனை உண்மைப்படுத்த வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வர இவை யாவும் நமக்கான சரித்திரத்தை மாற்றி எழுதும். இதுவே அப்பதிவு எனக்கு ஊற்றிய ஞானப்பாடம்.