Saturday 22 February 2014

AGATHIYAR ARUL VAKKU



அகத்தியனோ வான்மீகியோ ஆதிசேடன் தானோ
மகத்துவமாம் சம்பந்த வள்ளலோ
இகத்தில் சச்சிதானந்தத்தின் தண்ணளியோ
யென்னென்பேன் மெச்சுமதி இராமலிங்கவேள்

Agathiyanoh vaanmigiyoh aathisedan thaanoh
Maguthavamaam sambantha vallaloh
Egathil chat chit anandathin thanoliyoh
Yennenben mechumathi Ramalingavel

In verses 4895 till 4904, song 107 titled Thiru Unthiyaar, on page 927 of the Complete Poetical Works of Sri Ramalinga Adigal's THIRUARUTPA compiled and chronologically arranged by Ooran Adigal for the Samarasa Sanmarga Aaraichi Nilaiyam, Ramalinga Adigal sings a beautiful hymn at the break of dawn upon attaining the status of a Siddha and many more.

இரவு விடிந்தது இணையடி வாய்த்த
பரவி மகிழ்ந்தேன் என்று உந்தீபற
பாலமுது உண்டேன் என்று உந்தீபற
பொழுது விடிந்தது பொற்பதம் வாய்த்த
தொழுது மகிழ்ந்தேன் என்று உந்தீபற
தூயவன் ஆனேன் என்று உந்தீபற
தூக்கம் தொலைந்தது சூரியன் தோன்றினன்
ஏக்கம் தவிர்ந்தேன் என்று உந்தீபற
இன்னமுது உண்டேன் என்று உந்தீபற
துன்பம் தவிர்ந்தது தூக்கம் தொலைந்தது
இன்பம் கிடைத்ததென்று உந்தீபற
எண்ணம் பலித்ததென்று உந்தீபற
ஞானம் உதித்தது நாதம் ஒலித்தது
தீனம் தவிர்ந்ததென்று உந்தீபற
சிற்சபை கண்டேன் என்று உந்தீபற
திரையற்று  விட்டது செஞ்சுடர் தோன்றிற்று
பரை ஒளி ஒங்கிற்றென்று உந்தீபற
பலித்தது புசையென்று உந்தீபற
உள்ளிருள் நீங்கிற்று என் உள்ளொளி ஒங்கிற்றுத்
தெள்ளமுது உண்டேன் என்று  உந்தீபற
தித்திக்க உண்டேன் என்று  உந்தீபற
எந்தையைக் கண்டேன் இடரெல்லாம் நீங்கினேன்
சிந்தை மகிழ்ந்தேன் என்று  உந்தீபற
சித்திகள் பெற்றேன் என்று  உந்தீபற
தந்தையைக் கண்டேன் சாகா வரம் பெற்றேன்
சிந்தை களித்தேன் என்று உந்தீபற
சித்தெலாம் வல்லேன் என்று உந்தீபற
முத்தியைப் பெற்றேன் அம் முத்தியினால் ஞான
சித்தியை உற்றேன் என்று உந்தீபற
சித்தனும் ஆனேன் என்று உந்தீபற