AVM's journey has been quite unique. It started with an individual's home puja that was joined by seekers who later became devotees of Agathiyar. It was akin to elementary school then. We were given a long list of Siddha names that were tough to remember and to recite by heart like we used to recite the alphabet and the numbers in kindergarten. Then with the coming of Tavayogi, we moved to the intermediate school where we were given the freedom to experiment with rituals, mantras, etc. It was playtime and we had lots of fun. In view of the need to advance further Agathiyar dropped the bombshell on these rituals and began to retrain us in Yoga to assimilate the next level of advanced lessons. Yoga was a breath of fresh air literally. We enjoyed it as the benefits were instantaneous and its results visible and felt immediately as opposed to rituals that we more subtle and still a mystery. Now we have entered university where we are now away from home and on our own as AVM has closed its doors on mass gathering that was once the norm in the beginning years. The pandemic came along to tighten and prolong the duration of the closure. The physical guru too is no more in flesh. We are learning online these days too without physical contact. Only now I have come to realize the exact reason why Agathiyar broke this wonderful group of devotees that came under the banner or umbrella of AVM. He taught us the survival skills in worship and have us use them in times of the lockdown that followed the pandemic that was to come, that would shut down all the avenues for one to worship if he had yet to take up the worship in his home. Agathiyar made us stand on our own feet instead of depending on others, on centers and temples to channel our prayers. I believe many have progressed in the span of the past year and a half and are capable of performing rituals, yoga, meditation and can now deliver sermons based on their learning and experiences. It would be interesting to hear from them about their journey and travel and the progress that they had made in this time.
If all these while we have seen many write in to tell us how they came to the Siddhas, as Mahin said we should ask why they came too, we came to learn that many come with expectations and leave when either it is fulfilled or in the event, it doesn't fulfill look for another place that does fulfill their wants. As Tavayogi said very few come in search to know the self, very few come to know their purpose in life too. The Siddhas can show us both but many are not interested to know. They see the Siddhas as astrologers, mediums, medicine men, but not as ones who can bring upon us self realization or Gnanam and bring an end to this cycle of rebirth.
Just as Michael Wood says in the episode "Ancestors" of "The Story of China" on BBC Earth, that "Confucious is a living teacher in an unbroken tradition", Agathiyar too is one. Then sadly Michael moves on to say that "No ruler bought into Confucious's manifesto for change." Ramalinga Adigal too tried hard to bring change but left disappointed telling his followers that they had failed to listen and that the west shall catch up and pick up his teachings. We too have shoved the Siddhas into the pages of history and into the large volumes of books that carry their story. It remains a mere story to this day. Agathiyar lamented to us once that no one follows his way, "சித்தர் வாழ்கை நெறி முறைகள்"
My story shall reveal that they are living amongst us. This blog and the stories it carries can attest to it. He is willing to teach to those willing to listen. He is willing to accept us into his tradition that of the Siddhas, வாழையடி வாழை என வந்த திருக் கூட்டம் if only we take the first step. The divine is not beyond our reach. The Siddhas are accessible and not hidden or stash away in the songs and sacred texts to be discovered by only a few learned and well versed in the classic languages. If the divine were to do that he would be depriving the commoner of the opportunity to know him and eventually reach him. I once walked away from a burning fire pit or Yagam at a temple as the priests announced that one could bring back Goddess Lakshmi to their home for a price. He was selling the coins that were offered into the sacrificial fire. I thought what about those who could not pay for it, will the Goddess not step into their homes then. I had the money but refused to submit to their manipulation. Should not they in the first place just give away the coins to all those who came and see their lives change overnight if what he said was the truth. I for one shall rejoice in seeing more happy faces coming back to my temple.
In the years of our worship to the Siddhas, we found that calling them out brings them running to us just as the parent rushes on hearing the child's call. That is the nature of the Siddhas. Going by the earlier interviews of devotees who were seekers then, that I uploaded in my YouTube channel, I made the call to readers and devotees to write in and share the progress they have made over the years. Mahin responded with the following lengthy but beautiful piece within a day. I shall give way to him now.
சித்தர்களின் வழிகாட்டுதலில் நான்நான் எவ்வாறு சித்தர்களின் வழியில் வந்தேன் என்று சொல்லுமுன், எனக்குச் சித்தர்களைப் பற்றிய கருத்து என்னவென்றும் பார்த்துவிடலாம். நான் தமிழ் பள்ளியில் படித்து வந்திருந்தாலும், எனக்குச் சித்தர்களை யார் என்பது அறியாமலே இருந்துவந்தது. அவர்களைப் பற்றி நான் எனது 23 அகவையில்தான் எனது நண்பன் பாலச்சந்திரன் மூலம் அறியவந்தது. பாலச்சந்திரன் சூழ்நிலையின் காரணமாக அகத்தியரின் நாடி நூல் படிக்கும் வாய்ப்பு வந்தது. அதனைச் சரிவர உபயோகப்படுத்திக்கொண்டு, தன்னுடைய முன்ஜென்ம பலன்களையும் அதனால் விடுபடக் கர்மவினைகளை கூறி அதற்குப் பரிகாரங்களையும் சொல்லியனுப்பினார் அகத்தியர் பெருமான்.அதனை அடுத்து பாலச்சந்திரன் என்னிடமும் எங்கள் நண்பர் பட்டாளத்திலும் தனது அனுபவத்தைத் தெரிவித்தார். எனக்கோ அப்போது அகத்தியர் யார், சித்தர்கள் யார் என்று தெரியதாகாரணத்தினாலும் மற்றும் சிறு வயதிலிருந்தே காளியம்மன் மற்றும் காவல்தேய்வங்களை வழிபட்டு வந்துருந்த காரணத்தினாலும் அன்று பாலச்சந்திரனிடம் நான் எப்போ எனது தாய் காளியம்மன் அகத்தியர் நாடியை பார்த்து வா என்று சொல்லுகிறாரோ அன்று நான் வருவேன் என்று சொல்லியிருந்தேன். இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்கும் எனக்குச் சித்தர்கள் பற்றி ஒன்றுமே தெரியாது, மற்றும் அவர்களின் மீது எந்த ஒரு கருதும் அப்போது எனக்கு இல்லை என்று.அப்படி இருக்க நான் எப்படி அகத்தியர் வழிக்கு வந்தேன் என்ற கேள்வி எழலாம். அதற்குப் பதில் அளிக்கும் வகையில் நான் மீண்டும் 2013 ஆண்டுக்கு வாசகர்களை அழைத்துப்போக விரும்புகிறேன். அதாவது எனது 23ம் அகவைக்கு. நான் ஒரு காளியம்மன் பக்தன் என்று முன்னமே சொல்லியதுபோல், எனக்கும் காளியம்மனுக்கும் ஒரு பரிபாசை உண்டு. அதை வைத்து நான் அவரோடு உரையாடுவேன். ஒரு தாய் மகன் பந்தம் எங்களோடு இருந்துவந்தது. இப்படியே காலம் சுமுகமாகவே கடந்து கொண்டிருந்தது. அதே சமயம் பாலச்சந்திரனுக்கு ஷண்முகம் ஐயா அவர்களிடம் சித்தர்கள் யார், அவர்களை எப்படி பூஜிப்பது என்று கற்றுக்கொள்ளுமாறு அகத்தியர் ஓலைச்சுவடியில் வந்துருக்க, அவரும் ஷண்முகம் ஐயாவை தொடர்புக்கொண்டு அகத்தியர் சொல்லிய வாக்குகளைப் பகிர்துகொள்ளவே, அவரும் வந்து பூஜையில் கலந்துகொள்ள உத்தரவு அளித்தார்.பாலச்சந்திரன் பூஜையில் கலந்துகொண்டதும் எங்களிடமும் அதைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார். அவ்வப்போது எங்களையும் அழைத்துப்போவதாகச் சொல்லி நவம்பர் 2013 இல் முதல் முதலில் எங்களை அழைத்துபோனார். அப்போதுதான் அகத்தியர் வானம் மலேசியாவுக்கு முதல் விஜயம் செய்வதால் ஒரு அச்சத்துடன் நாங்கள் இருதோம். நாங்கள் என்பது இங்கு எனது நண்பர்களாகிய தயாளன், சுகுமாரன், மலர்வதி மற்றும் சஹாலினி. பாலச்சந்திரன் எங்களிடம் பூஜையில் கலந்துகொண்டதை பற்றி சொல்லும்போது ஷண்முகம் அண்ணன் என்றே சொல்லியதால், நாங்களும் அவரை அப்படியே அழைக்கலானோம். எனக்கு ஓர் ஆர்வம் இருக்கவே செய்தது, யார் சித்தர்கள், யார் அகத்தியர் என்று. அதற்கு விடையளிக்கும் வகையில்தான் அன்று நாங்கள் அகத்தியர் வனத்திற்கு சென்றிருந்தோம் என்று எனக்குத் தெரியவில்லை.எங்களை அன்போடு முகம் மலர ஷண்முகம் அண்ணனும், அண்ணனின் துணைவியார் மகேஸ்வரி அம்மா அவர்களும் அழைக்கவே நாங்கள் இல்லம் புகுந்தோம். எங்களை முதலில் கால்களை அலம்பச் சொல்லிவிட்டு அகத்தியர் இருக்கும் அரைக்கும் வழிகாட்டிச் சென்றார் பாலச்சந்திரன். அங்கு நான் கண்டது கனவா அல்லது எனது கற்பனையா எனபது இன்னும் சந்தேகமே. மற்றவர்கள் கண்களுக்கு அகத்தியர் உருவ சிலையாய் தெரியவே எனக்கு மட்டும் அங்குச் சிவனின் லிங்கவடிவமே முதலில் தோன்றியது. பின்பு சிறிது நேரத்துக்கெல்லாம் அகத்தியர் உருவமே தெரிய ஆரம்பித்தது. முதலில் அதை யாருக்கும் சொல்லும் நோக்கம் இல்லாமல் இருந்தது. அதோடு அகத்தியரை உச்சிகுளிர வழிபாடு செய்துவிட்டு வாழறைக்கு (Living Room) வந்து அமர்ந்தோம். பாலச்சந்திரன் எங்களை அறிமுகம் செய்யவே, எனது எண்ணம் மட்டும் நான் கண்ட காட்சியைப் பற்றியே யோசனையில் இருந்தது. எங்களின் அனுபவங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டிருந்த ஷண்முகம் அண்ணனிடமே எனது குழப்பத்துக்குப் பதிலைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று அவரிடம் நான் கண்ட காட்சியை விவரித்தேன். அதைக் கேட்டதும் அவர் சொன்னது எனக்கு வியப்பூட்டியது. நான் ஒன்னும் முதல் மனிதன் அல்ல அகத்தியரின் ரூபத்தை மாற்று ரூபமாகக் கண்டிருப்பது. என்னக்கு முன்னதாகவே பலரும் கண்டிருப்பதாகச் சொல்லியபோது எனக்கு அது கற்பனை அல்ல நிஜமே என்றும் அகத்தியர் எனக்குச் சிவனின் மேல் இருக்கும் பற்றையும் காட்டிருப்பதாக நான் உணர்ந்தேன். இதுவே எனக்கு முதல் அனுபவம்.இப்போது நாங்கள் அகத்தியர் வனத்துக்குச் செல்வதை கொஞ்சம் வாடிக்கையாக்கிக்கொண்டோம். எனவே அப்போதுதான் சித்தர்களைப் பற்றி நான் நன்கு அறிந்துகொள்ள முடியும் என்று அவ்வாறு ஒரு யுக்தியை கையாண்டோம். அதுபோலவே, நாங்கள் பூஜை இல்லாத நாளிலும் சென்று அவரின் நீண்டகால அனுபவங்களைக் கேட்டு மகிந்தோம். அப்போது நான் உணர்ந்தது, அகத்தியர் மற்றும் சித்தர்கள் யாவரும் மனிதர்களை நெறிப்படுத்தி எது உண்மை எது போலி என்று கல்வி எடுப்போர் அல்ல, அவர்கள் தாங்கள் கண்டு வந்த பாதையில் மற்றவர்களையும் அழைத்துப் போக முயற்சிக்கிறார்கள் என்று அறிந்தேன். இவ்வாறு இருக்க, ஒரு சமயம் எனது அன்னை காளியம்மன் எனக்கு அகத்தியரின் ஓலைசுவடி பார்த்து வா என்று உணர்த்திய படியால் நானும் பாலச்சந்திரனிடம் நாடி நூல் வாசகர் திரு தி. இரமேஷ்மிடம் நியமனம் தேதி கேட்குமாறு சொல்லிருந்தேன். அதன்படி எனக்கு 24/06/2014 இல் வாய்ப்பு கிடைத்தது.என் அன்னையிடம் நான் ஒரு நிபந்தனை வைத்தே நாடியை பார்க்கச் சென்றேன். அதாவது எனக்கான ஓலை அங்கு இருக்க வேண்டும், மாற்றாரைபோல் ஓலை இருந்தும் படிப்பதற்கு முதலில் சில பரிகாரங்கைளை செய்யவோ, அல்லது ஓலை இல்லாமலோ போகக் கூடாது என்ற நிபந்தனையைத் தாக்கல் செய்தேன். அன்று நான் சென்றபோது ஒரு கட்டு ஓலையை எடுத்துத் தேடியபோது எனக்கான ஓலை இல்லை. உடனே நாடிவாசகர் மற்றொரு அறைக்குச் சென்று இன்னொரு ஓலை கட்டை எடுத்துவந்தார். அதிலும் பல ஏடுகள் திருப்பபட்டுக்கொண்டே இருந்த நிலையில் நான் பொறுமையாய் அவர் கேட்க்கும் கேள்விக்கு "ஆம்" "இல்லை" என்றே சொல்லிகொண்டுருந்தேன். ஒருகணம் ஓலை இல்லையோ என்று சந்தேகம் வந்தபோது நாடிவாசகர் எனக்கான ஓலையைக் கண்டுகொண்டார். சிறிது சிரித்துக்கொண்டு என் அன்னையின் விளையாட்டை ரசித்தேன்.பிறகு, நாடிவாசகர் ஓலையை வாசிப்பதற்காக ஆயத்தம் செய்யும்வண்ணமாக ஒலி பதிவு பெட்டியைக் கையில் எடுத்தார். வெளியில் இருந்த எனது நண்பன் பாலச்சந்திரனை அழைத்துக்கொண்டு நாடியை வாசிக்க ஆரம்பித்தார். அதற்கும் முன்னதாக எனக்கு எந்தெந்த காண்டங்கள் படிக்க வேண்டும் என்று கேட்கவே, அன்று முழுமையாக 19 காண்டங்கள் இருந்ததால், நான் குறிப்பிட்ட சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்தேன். முதலாவது காண்டமாகிய பொது பலன், ஏழாவது காண்டமாகிய திருமண பலன், பதிமூன்றாவது காண்டமாகிய முன்ஜென்மம் அறிதல் மற்றும் பதினான்காவது காண்டமாகிய பரிகார காண்டம் பார்க்கப்போவதாக உறுதியளித்தேன். அதன்பேரிலே நாடிவாசகரும் எனது ஓலையை வாசிக்கத் தொடங்கினார். நானும் பாலச்சந்திரனும் வியப்புடனும் சிரிப்புடனும் கேட்டுக்கொண்டிருந்தோம், முதலாவது காண்டத்திற்கும் ஏழாவது காண்டத்திற்கும். ஆனால் இப்பொதுழுதான் வாசகம் சூடுபிடிக்க ஆரம்பித்தது, எனது முன்ஜென்ம காண்டைதை வாசிக்கதொடங்கியபொழுது.ஆரம்பமே நான் அயோத்தியில் பிறந்ததாகவும், சிறு அகவையிலே துறவியான தாவும், பல வகை சித்துக்களை குருவிடம் கற்றுக்கொண்டு ஒரு கால கட்டத்தில் அவைகளை நான் துர்ப்பிரயோசனம் செய்ததாகவும் அகத்தியர் ஓலையில் எழுதி இருந்தார். அதோடு மட்டும் அல்லது, செய்த தவறினால் அந்தப் பிறவிலேயே முதிர்ந்த வயதில் பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு, சில பரிகாரகரங்களையும் செய்ததாகச் சொல்லினர். பின்னர் இப்பிறவியிலும் ஞானியாகும் பாக்கியம் இருக்கிறது அதற்கு அகத்தியர் சொல்லும் பரிகாரங்களையும் செய்ய வேண்டும் என்று சொல்லிப் பரிகார காண்டத்தில் எழுதி இருந்ததை நாடிவாசகர் சொல்லிமுடித்தார். ஒரு கணம் வருத்தப்பட்டாலும், மறுகணமே பரிகாரம் சொல்லி எனது மனதை சாந்தம் செய்தார் அகத்தியர். அகத்தியர் சொல்லியவாறே நானும் கால அட்டவணை தயார் செய்து, பரிகாரங்களை செய்யலானேன். சில பரிகாரங்கள் மலேசியாவிலும் சில பரிகாரங்கள் இந்தியா தேசத்திலும் செய்யுமாறு கட்டளை பிறப்பித்தார். அதே ஆண்டு நானும் எனது நண்பர்களும் சொல்லிய பரிகாரங்களை செய்து முடிக்கவும் அகத்தியர் துணை இருந்தார்.பரிகாரங்களை செய்யத் தொடங்கிய பொழுதே வாழ்க்கையில் பல மாற்றங்களைக் கண்டேன், அதையும் ஷண்முகன் அண்ணனிடம் பகிர்ந்துகொண்டேன். அவ்வாறு நாங்கள் அகத்தியர் மீது வைத்திருந்த பற்றை கண்டு அண்ணனுக்கு எங்கள்மீது அளவுகண்டாந்த அன்பு மிகுந்தது. பிறகு அவரே எங்களுக்குக் குருவாங்க மாறினார். மலேசியாவில் பரிகாரம் முடித்து இந்தியா தேசத்துக்கும் போனோம், அங்குத் தவயோகி தங்கராசன் அடிகளார் மற்றும் மாதாஜி சரோஜினி அம்மையார் இருவரின் ஆசியும், அரவணைப்பும் கல்லாறு ஆஷ்ரமத்தில் கிடைத்தது. தவயோகி தங்கராசன் அடிகளார் அவர்கள் ஷண்முகன் அண்ணனின் குரு ஆவர். ஆகையால், அங்கு ஓர் இரவு தங்கி மறுநாள் எங்களின் யாத்திரையை தொடங்கினோம். இச்சமயம் நான், தயாளன், சுகுமாரன் மற்றும் மலர்வதி, அவரின் தயார் மற்றும் சித்தியும் எங்களோடு வந்திருந்தார்கள். அகத்தியர் அருளினால் ஒரு வாரப் பயணத்தை நாங்கள் மேற்கொண்டு எல்லாருடைய பரிகாரங்களையும் செய்துமுடித்து மலேசியா திரும்பினோம். இதுவே எனக்கு இரண்டாவது அனுபவம்.மலேசியா திரும்பியதும் நாங்கள் எப்போதும் போல் அகத்தியர் வானம் சென்று பூஜைகளும் சத்சங்கமும் செய்வதை வழக்க படுத்திக்கொண்டோம். அப்போதுயெல்லாம் மனதில் ஒரு பெரிய ஆசை வரும், அகத்தியருக்கு நாம் அபிஷேகம் செய்து அலங்காரம் செய்ய மாட்டோமா என்று. அவரே ஒருநாள் எனக்கு வாய்ப்பை ஷண்முகன் அண்ணன் மூலமாக அளித்தார். மகிழ்ச்சி எனும் அலைக்கடலில் தத்தளித்தவன் போல் உள்ளத்துக்குள் துள்ளிகுதித்தேன். இருந்தும் அகத்தியர் விக்கிரகத்தைத் தொட்டு அலங்காரம் முதலில் செய்வேண்டும் என்று அருகில் சென்றதும் உள்ளம் படபடத்தது. அகத்தியரிடம் உள்ளளவில் அனுமதி கேட்டுக்கொண்டு எனக்குத் தெரிந்த கலையை நான் செய்யத் தொடங்கினேன். அலங்காரத்தின் அழகை கண்ட ஷண்முகன் அண்ணன் மற்றும் மகேஷ் அம்மா அன்று முதல் என்னையே அகத்தியருக்கு அலங்காரம் செய்ய வேண்டும் என்ற ஆசையை முன்வைத்தார்கள். இதைக் கேட்டு என் உள்ளத்தில் பொங்கிய மகிழ்ச்சியை வார்த்தையால் சொல்லமுடியுமா!அந்த நிகழ்வுக்கு அடுத்தபடியாக எங்களையும், அகத்தியர் வனத்திற்கு வரும் மற்ற பக்தர்களுக்கும் ஹோமம், அபிஷேகம் செய்ய வாய்ப்பளித்தார்கள், ஆனால் அலங்காரம் மாடும் நானே செய்வேன். அகத்தியரை இந்த எட்டு வருடகாலத்தில் பல பல விதத்தில் அலங்கரித்து மகிழ்ந்தேன். முக்கியமாக வேண்டுமானால், வள்ளலார், ராகவேந்திரர், விஷ்ணு, அம்பாள், விநாயகர், முருகன், பைரவர், நரஷிமா என்று சொல்லிக்கொண்டே போகலாம். இத்தனை அகலங்காரத்தையும் நான்தான் செய்தேன் என்று பெருமிதம் கொள்வதைவிட, அகத்தியரே தமக்கு செய்துகொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். என்னை ஒரு கருவியாகவே உபயோகப்படுத்திக்கொண்டார். பூஜைகள், அலங்காரம், ஹோமம் என்று நாங்கள் இதுநாள்வரை சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு கோட்ப்பாடுகளில் முதலாவது கோட்ப்பாடையே அறியாது செய்ந்துகொண்டிருந்தோம். இதைத் தொடர்ந்து அகத்தியர் எங்களைத் தர்மம் செய்யத் தூண்டி, "தொண்டு செய்வோம்" என்ற குழுவைச் செப்டம்பர் 2014 பாலச்சந்திரன் தலைமையில் நண்பர்களாகச் சேர்ந்து உருவாக்கினோம். சிறிய அளவில் செய்தாலும் நாட்டு மக்களையும் அவர்கள் கவலைக்கிடமான நிலைமையும் அகத்தியர் எங்களுக்கு உணர்த்த தொடங்கினார். அவ்வாறு செய்ய, "அமுதசுரபி" எனும் மற்றோரு குழுவை அகத்தியர் வானம் மலேசியா உறுப்பினர்களோடு சேர்ந்து தொடங்கினோம்.தொண்டு என்று வந்தவுடன் அகத்தியர் எங்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தார்! அதாவது யாருக்கு, எப்படிப்பட்டவருக்கு என்று விசாரணை எதுவும் செய்யாமலும், செய்தபின் அதனைப் பற்றி விசாரிக்கவும் வேண்டாம் என்று கட்டளை இட்டார். இம்முறை தேர்வு செய்த பக்தர்களின் மூலமே வந்து இவற்றை அறிவித்தார். அதன் படியே சில ஆண்டுகள் செவ்வன தொண்டை செய்து வந்தோம். உறுப்பினர்களின் ஆதரவு ஓங்கிருப்பதால் சேவையை நீண்டு பெரிதாகும் நிலைமை வந்தது. அப்போது அகத்தியர் அப்பா மீண்டும் தோன்றி இன்று முதல் செய்யும் தொண்டினை முறைப்படுத்தி அரசாங்க பதிவேட்டில் பதிந்து, யாருக்கு தொண்டு செய்ய வேண்டும் என்று நன்கு அலசி ஆராய்ந்த பின்பே செய்ய வேண்டும் என்று சொல்லினர். வாசகர்களுக்கு இப்போது சந்தேகம் வரலாம், ஏன் இப்போது அகத்தியர் அறிந்து தொண்டு செய்யச்சொல்கிறார் என்று. இதோ அதற்கான காரணத்தையும் அடியேன் சொல்லுகிறேன். குழு உறுப்பினர்கள் அனைவர்க்கும் தொண்டு செய்யும் மனம் இயல்பாகவே வர வேண்டும் என்பதற்காகவே அகத்தியர் தீட்டிய திட்டம் அது. தொண்டு செய்ய வேண்டுமென்றால் ஒருவனுக்கு தற்புகழ்ச்சியோ, செய்யலாமா வேண்டாமா என்ற எண்ணம் வருவது சாத்தியம். ஆகையினால் அகத்தியர் எங்களுக்குத் தொண்டை எவ்வித எதிர்பார்ப்புமின்றி செய்வது எப்படி என்ற கல்வியை யாசகமின்றி சொல்லித்தந்தார் என்றால் நாங்கள் எவ்வளவு பாக்கியம் பெற்றவர்கள். இது எனக்கு மூன்றாவது அனுபவம் மட்டும் அல்ல, கிரியையும் மறைமுகமாவே செய்ய வைத்துவிட்டார் அகத்தியர் அப்பா. இத்தகைய குருவை நான் பெறுவதற்கு எந்த ஜென்மத்தில் நான் செய்த புண்ணியமோ தெரியவில்லை.காலம் புரண்டு ஓட, 2019 ஆம் ஆண்டில் அகத்தியர் என்னை இத்தனை காலமாகச் செதுக்கிய காரணத்தைச் சொல்லத் தொடங்கினார். அதற்கு முன்பதாகவே வள்ளலாரை எங்களுக்கு அறிமுகம் செய்து வைக்க, அவரும் எங்களோடு பயணம் தொடங்கினார். இப்போது அகத்தியர் வனத்தில் நானும் என் தோழி மலர்வதியும் அகத்தியர் வாக்குக்கு உட்பட்டு தினம்தோறும் அகத்தியர் வனத்திற்கு சென்று அவருக்கு அபிஷிகேம் செய்து அகத்தியரை குளுமை அடைய செய்தோம். அவ்வப்போது அகத்தியர், வள்ளலார் தோன்றி எங்களுக்குப் பிரபஞ்சத்தோடு தொடர்பு கொள்ளும் பயிற்சிகளை அளித்து வந்தார்கள். அது மட்டுமின்றி ஷண்முகம் அண்ணன் தவயோகி தங்கராசன் அப்பா கற்று தந்ததை எனக்கும் கற்று தந்தார்.அகத்தியர் அப்பா கூறுவதற்கு ஏற்ப, எதையும் குறித்த நேரத்திலே செய்ய வேண்டும், அப்பொழுதுதான் காரியம் கைகூடும். இல்லாவிடில் தாமதம் அடையும் அல்லது நிறைவேறாமலே இருந்துவிடும். ஆகையால் கற்று கொண்ட அன்றே நான் பயிற்சி போட்டுவிட்டேன். நாசியில் இடகலை பின்களை என்று பிரித்து, சந்திரனுக்கும் சூரியனுக்கும் ஒப்பிடுவார்கள். ஆகையினால் இருநாசிகளையும் சுத்தம் செய்தபின், ஒரு நாசியினை விரலினால் மறைத்து, மறுநாசியில் பிராணவாயுவை உள்ளிழுத்து, அதே நாசியில் விட வேண்டும். இவாறு மாற்றி மாற்றிச் செய்ய வேண்டும். தொடர்ந்தாற்போல் இன்னும் பல பிராணாயாம பயிற்சிகை செய்துவர எனக்கு உடல் உற்சாகம் பெறுவதையும் கண்டேன். அதோடு நிறுத்திவிடாது, முன்பு ஆச்சார்யா குருதாசன் என்றும் நாங்கள் அன்போடு அழைக்கும் "மாஸ்டர்" இடம் இருந்து கற்றுக்கொண்ட கிரியா யோகா ஆசனத்தையும் பயிற்சிபோட்டு கொண்டு வந்தேன். காலம் கடந்து கற்று கொண்டதால் என்னமோ உடலை யோகா ஆசன முறைக்கு ஏற்ப முழுமையாக வளைத்துச் செய்யலாகாத போதிலும், முயன்றவரை செய்து வந்தேன். ஆகையினால் உடலின் மாற்றம் நன்மை தருவதையே உணர்ந்து மகிழ்ந்தேன்.இப்படி பிராணாயாமமும் யோகமும் செய்துவரவே அகத்தியர் இந்தனை காலமாகச் செதுக்கிய காரணத்தைச் சொல்லத் தொடங்கினார். சரியை கிரியை என்பது யாராயினும் செய்ய முடிந்த காரியமே. ஆனால், யோகத்தை அவ்வாறு எல்லாராலும் கையாள முடியாது. ஆகையினாலே, 2019 ஆண்டு தொடக்கத்திலே ஷண்முகம் அண்ணன் மூலமாக எனக்குச் சொல்லித்தர பட்டுப் பின்பு ஆண்டு இறுதில் மற்றும் பல அகத்தியர் வானம் மக்களும் சொல்லித்தந்தார். அதை ஒரு சோதனையாகவே எல்லோருக்கும் சொல்லித்தந்தார் என்றே சொல்ல வேண்டும். எனில் ஒவ்வொரு முறையும் எங்களைக் கண்காணித்து வருவதும், சில சமயங்களில் செய்யும் பயிற்சிகளைப் போட்டுக் காட்டும் படியாகச் சொல்லிச் சோதித்து வந்தார். அதோடு நிறுத்திவிடாது, எங்களை உள்நோக்கி பயணிக்குமாறு வலியுறுத்தினார். அதாவது, வெளிப்புற தேடலை நிறுத்திவிட்டு உட்புற தேடலைத் தொடங்குமாறு சொல்லினர். அவரின் வழிநடத்தலின் பேரில் நான் முயற்சிக்க முனைந்தேன். ஆரம்ப நிலையில் தியானம் என்பது குதிரை புடியாகவே இருந்தது, பல சிந்தனைகளும், எண்ணலைகளும் மாறி மாறி வந்தவண்ணமாக இருந்தது. அதை எல்லாம் பொறுப்படுத்தாது, அகத்தியர் கூறியதுபோல் சுவாசத்தில் கவனத்தை செலுத்தி வந்துகொண்டிருந்தேன். இவ்வாறு ஒரு வருடகாலம் கடந்தபடியால் தியானத்தில் ஒரு மாற்றம் காண உணர்தேன், அதாவது எவ்வித தொல்லைகளும் இல்லது, உடலளவிலும் மனதளவிலும் மௌனத்தை மட்டுமே நீடிக்கும் தருணம் வந்தது. இதுவே எனது நான்காம் அனுபவம் மற்றும் யோகத்தின் பயணம்.அகத்தியர் எங்களைச் சரியையும் கிரியையும் விடுவிட்டு யோகத்துக்கு போகச்சொல்லி அழுத்தமாகச் சொல்லியதன் பொருள் அன்று எங்களுக்கு விளங்காத பொருளாகவே இருந்து வந்தது. ஆனால், எப்போதும் போலே அவர் சொல்லுவதில் உள்ளர்த்தம் இருக்கும் என்று தெரிந்தே நான் அதைத் தடைபோடாது செய்து வந்தேன். 2019 ஆண்டின் இறுதியில் கொரோனா வைரஸ் தாக்கம் ஆரம்பமாகும் தருணம் அது. அப்பொழுது ஷண்முகம் அண்ணன் வழியாக "அமுதசுரபி" குழுவை மூடப்பட்டு, தனிமனித பயணத்துக்கு எங்களைத் தயார் செய்து வந்தார் என்பது அரிய கண்டோம். March 2020 இல் மலேசியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததால் என்னால் அகத்தியர் வனத்திக்கு செல்லும் வாய்ப்பை நான் மூற்றிலும் இழந்து வறுந்த கண்டேன். ஆனபோதிலும், என்னைத் தனிமனித பயணத்துக்குத் தயார்செய்கிறார் என்று உணர்ந்து நானும் அகத்தியர் தந்த எல்லா பயிற்சிகளையும் தின்தோறும் செய்துவந்தேன். தனிப்பயணத்தின் கருத்தை உணர்த்தினார் அகத்தியர் அப்பா, அதாவது ஜனனம் எனபது ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடக் கூடியது ஆகையால் அவர் அவர் தனித்தே செயல்பட வேண்டும். அதனைப்பொருட்டு நானும் "தொண்டு செய்வோம்" குழுவின் உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டேன். சரியை கிரியை இரண்டும் தனிமனிதன் செய்ய கருமவினையை குறைக்கும் வலிமை கொண்டுளது. ஆகையால், அகத்தியர் அப்பா அருளினால் என்னமோ அவர் கடைக்கண் பார்வை பட்டு எனது கர்மாக்களை போக்கிவிட்டார் போலாகும். அதற்காகவே இனி அதிகம் சரியை கிரியா செய்து நல்ல கர்மாவை சேகரித்துக்கொள்ளாதே என்று சொல்லி எங்களைக் குழுவிலிருந்து விலகிக்கொள்ள செய்தார் என்பது பின்பு அவரே வந்து எங்களுக்கு விளக்கம் அளித்தார். இதுவே எனது ஐந்தாம் அனுபவம், தனிமனித பயணத்தின் தொடக்கம்.இவ்வாறு பரிணாமம் அடைந்து கொண்டிருந்தபொழுது, கோவிட்-19 தொடரின் பரவல் அதிகமாகத் தொடங்கின. ஆகையால் அகத்தியர் எங்களை மீண்டும் ஹோமம் செய்து சிவனை நோக்கிப் பிராத்தனை வைக்கச் சொல்லவே அதற்கு மிருதுஞ்சாயா மந்திரம் தன்வந்திரி மந்திரமும் தந்து பூஜை செய்யச் சொன்னார். குறைந்தது 1 1/2 வருடம் மனித இனத்தையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் இந்த நோய்க்குப் பதில் சொல்லும் வண்ணமாக 15/05/2021 சிவனே கருணைக் கொண்டு எங்களுக்குப் பதில் அளித்தார். அகத்தியர் கூறிய யாகத்தை செய்து வரவே, பிரபஞ்சத்தோடு இணைந்தும், பிரபஞ்சத்தைக் கவசமாகப் பாவித்துப் பிரபஞ்சத்தைச் சுத்தம் செய்துவந்தால் இந்த நோய் குணமடையும் என்று சொல்லிச் சென்றார்.இவாறு தகுந்த நேரத்திற்கு வந்து எங்களுக்குக் கவசமாக இருக்கும் அகத்தியர் மற்றும் அணைத்து சித்தர்களுக்கும் எங்களது நன்றிகளைச் சமர்பித்து கொள்கின்றோம்.என்னை இப்படியொரு அதிசயம் மிக்க பாதைக்குக் கொண்டு வந்த என் அன்னை காளிஅம்மனுக்கு நன்றி.அதோடு எனக்கு இன்னால்வரை வழிகாட்டியாக இருக்கும் ஷண்முகம் அண்ணனும், அருவமாக வழிநடத்தும் தவயோகி அப்பாவிற்கும் நன்றிகள்.அகத்தியர் வனத்திற்கு வருகை புரியும் போதெல்லாம், அன்னபூரணியாய் எனக்கு வயிறு நிறைய அமுது படைக்கும் மகேஸ்வரி அம்மாக்கும் நன்றி.எங்களை அகத்தியர் வனத்திற்கு அறிமுகம் செய்து வைத்த நண்பன் பாலச்சந்திரனுக்கும் நன்றி.