Friday 5 April 2024

ANOTHER DEVOTEE'S JOURNEY

Another devotee wrote in about her journey. 

சிறு வயது முதலில் எனக்கு இறைவன் மீது அதிதி நாட்டம் இருந்தது. நானும் சாதாரண மனிதர்கள் போல் பூஜை இல்லத்தில் செய்வது, ஆலயங்களுக்குச் செல்வது, பஜன் தேவாரம் பாடல்கள் பாடுவது, ஆன்மீக நூல்கள் படிப்பது, இறப்பு பிறப்பை எப்படி என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.

எனது 16ஆம் வயதில் என் கனவில் பாபா, பாபாஜியை வணங்குவது போல் கனவு கண்டேன். ஒரு வாரத்தில் தாய் பாபாவின் புகைப்படம் தோழியின் மூலம் வாங்கி வந்தார். பிறகு பாபாஜியின் படத்தை நானே வாங்கி வந்தேன்.

எப்பொழுதும் வியாழன் தோறும் விருதம் எடுத்து வந்தேன். செவ்வாய் தோறும் துர்க்கை தேவிக்கு ராகு கால பூஜை செய்து கொண்டுவந்தேன். எப்பொழுதும் பூஜையின் பொழுது அடியேன் இறைவனிடம் யாசகம் கேட்பது எப்பொழுது எனக்கு முக்திக்கு வழி கிடைக்கும் என்று.

18ஆம் வயதில் பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் எனக்கு விடை கிடைத்தது.

அப்பொழுதுதான் எனக்கு ஓலைச்சுவடி பார்க்க வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுதுதான் எனக்குச் சித்தர்கள் பற்றி, முழுமையாக அறியவில்லை என்றாலும், சிறிதளவு தெரிந்து கொண்டேன். இதற்குமுன் புராணத்தில் அவர்களைப் பற்றி கேள்விபட்டுளேன். சுவடி வசிப்பின் பிறகு அவர் என்னைக் காந்தம் போல் ஈர்த்தார். அவரை பற்றி அறிந்து கொள்ள முயன்றேன். அவரைப்பற்றி நூல்கள் ஒரு சிலர் என்னிடம் கொடுத்தார்கள். அனைத்தையும் மறந்து தியானிக்க ஆரம்பித்தேன்.

எவ்வளவு லீலைகள் செய்துள்ளார். அவைபற்றி இங்கு என்னால் உரைக்க இயலாது. வார்த்தைகள் இல்லை. அவரை போல் சிறந்த தாய், தந்தை, நண்பன், குரு எவரும் இல்லை இவ்வுலகில்.

இன்னும் நம்முடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். நாம் நினைப்பு பேசுவதனைத்தையும் அறிவார்கள். இன்னும் நம்முடன் இவ்வுலகில் மறைந்து கொண்டு நமக்கு வழிகாட்டிக் கொண்டு இருக்கிறார்கள். அதை நான் உணருகிறேன். அனுபவமும் கொண்டுள்ளேன்.

அடியேன் கும்பேஸ்வரன் ஆலயத்திற்குச் சென்ற பொழுது அந்த பண்டிதர் "இன்று கதவுகள் திறக்கப் படாது. வியாழன் மட்டும் தான் திறக்கப் படும்" என்றார். அப்பொழுது நானும் என் தாயாரும் மன வருத்தம் கொண்டு அகஸ்தியரிடம் பிரார்த்தனை செய்தோம். அந்த பண்டிதர் விறுவிறுவென வந்து கதவைத் திறந்து பூஜை செய்தார். நாங்கள் திகைத்துப் போனோம்.

அவர் பல நேரம் ஆறுதல், தைரியம், தன்னம்பிக்கை,  உற்சாகம் இது எல்லாம் அகஸ்தியரே கொடுத்தார். நான் இன்னும் துவன்றுபோகவில்லை. என் பயணம் சித்தர்களை நோக்கி இனி ஆழமாகப் போகும். அகஸ்தியரிடம் இருந்து என்னைப் பிரிக்க வேண்டும் என்றால் முதலில் என் உடலில் உள்ள பிராணம் போக வேண்டும்.

இனி எனக்கு எந்த ஒரு குருவும் தேவை இல்லை. அனைத்திலும் அகத்தியனைக் காண்கிறேன். உணருகிறேன். உதாரணம் ஒன்று கூறுகிறேன். சுவடி வாசிப்பின் பொழுது ஒவ்வொரு முறையும் அகஸ்தியர் ஷீர்டி சாய் பாபா, பாபாஜியும் என் குரு, மற்றும் அகஸ்தியரும் என் குரு என்பார். அவர் ஒரு பொழுது அவர்களை மறக்கவும், பூஜிக்க வேண்டாம் என்று கூறியதே இல்லை. அவர்களின் ஆசி எனக்கு எப்பொழுதும் உள்ளது என்பார். எந்த ஒரு குருவும் தான் சீடனிடம் மற்ற குருமார்கள் பற்றி பேச மாட்டார்கள். ஆனால் அவர்கள் அனைவருமே ஒரே ப்ரஹ்மம் என்று நமக்கு உணர்த்துகிறார்கள். அவர்களுள் பிரிவினை இல்லை. நாம் சித்தர்களை பின் பற்றினாள் அனைத்து மென்மையும் அறிந்து கொள்ளலாம். இது வெறும் கட்டுக்கதையில்லை. அடியேன் அவர்களிடம் இருந்து அறிந்தது. மெய்யை உணர்ந்தவனுக்கு அனைத்திலும் ப்ரஹ்மத்தை காணலாம். அடியேன் ப்ரஹ்மத்தை அகஸ்தியனிடம் காண்கிறேன்.