Thursday 9 March 2023

LOOKING BACK

As I revisit my earlier Nadi readings, it dawns on me that the path was laid out even as early as when I was an embryo in my mother's womb. As Agathiyar explained to us, the Atma leaves after being with us for a period of time that is 1 to 5 Varaagai. The reason it is veiled was not revealed to us at this juncture. Our actions determine when the Atma resurfaces again. 

ஆன்மா உடலையும் உயிரையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளும் ஒரு சூச்சமம். இந்தச் சூச்சமத்தை பிறந்த குழந்தைகள் 1  முதல் 5 வரகை வரையிலும் உடன் இருந்து மறையும். மறைத்தலின் காரணம் இன்னதென்று இப்போது உனக்குச் சொல்ல இயலாது. ஆனபோதிலும் ஆன்மா ஒருவரின் செயலைப் பொறுத்தே மீண்டும் அவனை வந்து சேரும்.

Agathiyar stood watch over our (Jeeva)Atma and lent a hand in removing our karma through his Nadi revelation for us. Once the karma was out of the way, the search intensified, and we lost interest in our search for material gains. Now our search is fully centered on reaching Agathiyar. 

ஆன்மாவே உனது கர்ம வினையைச் சரிசெய்வதற்கு உதவி புரியும். கர்மாவை சரி செய்தபின், ஆன்மாவின் தேடல் அதிகமாகி மனிதனின் அன்றாட தேடல் தீர்ந்து போகும். அவன் தேடல் முழு தாய் என்னையே தேடி வர முயற்சி செய்யும்.

When he leads us on the path, Agathiyar is realized as a vibration within. Prolonging these vibes will sustain us in his state. We are then a realized soul. 

ஆன்மா உன்னோடு இருந்து உன்னை ஒரு பாதைக்கு இழுத்துச் செல்லும் அப்போது நீ அதனை உணர்ந்தாள், உன்னில் அதிர்வாய் தோன்றி மறையும். அந்த அதிர்வினை நீ உனக்குள் நீடிக்கப் பழகினால் உன்னால் ஆன்மா என்னும் உனது அதிர்வுகளில் ஊடுருவி என்னுள் (இறை / அகத்தியன்) வந்து சேர ஒரு வழி. 

Traveling along, he came to lead us further, giving practices and encouraging us further, boosting our spirits along. It just needed us to arrive at the moment and after experiencing it to realize the fact that it was all laid out and mentioned earlier. 

Agathiyar some time back asked that I share my knowledge on the Atma with those keen to learn. I was tasked to bring those lagging behind to the forefront. 

இனி இங்கு ஆத்ம ஞானம் மட்டுமே நடக்கும். பின்னனிருப்போர் உந்தி தள்ளிக் கொண்டுவா. மாதத்திற்கு ஒரு முறை எமது பக்தர்களுக்கு அழைப்பிடு. ஆன்மஞானத்தை அறிய விரும்புவோருக்குக் கற்பித்து வா. எனது முழு ஆசியினை பெற்ற சீடனப்பா நீ. இல்வாழ்க்கையில் இருப்பதினாலே உன்னை யாம் தனித்து குருவாக்க விரும்பவில்லை. உன்னில் இருக்கும் ஆன்மாவின் தேடலை மற்றவர்களுக்கும் வரச்செய். அவர் அவர் எண்ணம்போல் உமது போதனை அவர்களை அடையும். போதிப்பது மட்டுமே உனது கடமை. பலன் அவர்களுடையது. 

Recently he asked that I share the changes that are going on within me so that those keen to reach the state of Jothi would know what they have to encounter and face.

இனி உன் எழுத்துக்கள் உடல் மாற்றங்கள் பற்றியதாக இருக்கட்டும். எனது பெருமை போதும். ஜோதியினை வழி பட்டால் அதோடு இணைய வேண்டும் என்றால் உடலில் எவ்வித மாற்றங்கள் ஏற்படும் என்று உன் வாசகர்களுக்குத் தெரியப் படுத்து. உனது அனுபவம் எனது அறிவு. 

I have to then go back and reminiscence what the Siddhas had directed me to do as to arrive at this moment. 

20.1.2007 Reading by Sugabrahma

அறிவிப்பேன் சுகப்ரஹ்மர் ஆசி தன்னை. வினவச் சொன்னார் கும்பமுனி ஞானம் பற்றி. ஞானத்தைப் புகுத்தி அறிவையும் தெளியவைத்தோம் மைந்தா. மைந்தனே நீ உரைக்கும் வார்த்தை எல்லாம் மென்மையாய் நாங்கள் இருந்து அருள்பாலிப்போம். கூசாது குரு தன்னை மகிழ்வித்துத் தான் குறை இல்லா பிழை இல்லா கடமை செய்தாய். கல்லாறு சித்தன் பார்வை, அருள் தந்த சுப்பிரமணியர் ஆசி தீட்சை, மாசில்லா இக்கணமும் துணையாய் இருக்க. உணர உணர அற்புதங்கள் அதிசயங்கள் ஊக்கமுடன் தந்து நாங்கள் தெளிவு அடையச் செய்வோம். எண்ணமெல்லாம் சித்தர் சுவாசம் இழைவதாலே இறப்பில்லை இப்பிறவி ஞான மோட்சம் திண்ணம். திண்ணமாய் வானுலகோர், குமரன் அருள் இருக்க தேவலோக வானுலகோர் ஆசிபழ கிட்டும். உண்மையாக உன் அகத்தில் தேவதைகள் பால்வார் உயர்வாகக் குடி இருக்கக் கண்டேன் யானும். யான் உனக்கு ஞானம் பற்றை தன்னை புகட்டும் முன்னே யோகா சேயாய் உருவெடுத்தாய் பண்டிதன் அருளால். மேலான வாக்கு தான் அடுத்த முனிவர் முற்றே.

27.1.2007 by Bhrigu Muni

சித்தியை முக்தியை நோக்கிப் பூஜை செய்வாய். திண்ணமாய் ஞானத்தை, தவத்தையும் தான் தீர்க்கமாய் நலமாகச் செய்திடத் தான் சிறப்பு மைந்தா. சித்தர் பார்வை, ஆசி, கருணை, கல்லாறு சித்தன் ஆசி இருக்கத் தவம் ஞானம் சித்திக்கும் உனக்கு. நாயகனே காலங்கள் கனியச் சிறப்பு. சிறப்பிற்கு மனைவிக்கும் மக்களுக்கும். சித்தி நிலை முக்தி நிலை யாவருக்கும். அற்புதங்கள் அதிசயங்கள் உன்னைப் போல ஆனந்தம் குடில் மாந்தர் யாவரும் காண்பார். விளையாடுவோம் சித்தர் எல்லாம் உன்னோடு தான் தரணியிலே. உரைக்க உள்ளார் காகபுஜண்டர் வாக்கு உனக்கு முற்றே. 

3.2.2007 by Kagabhujandar

பொதிகை யான் வாக்கு உரைக்கச் சொன்னார் அப்பா. தப்பாது ஞானத்தைப் பெறுவாய் மைந்த. அப்பனே அருள் மிகுந்து இருப்பதானாலே அவ்வுலகில் நல் மோட்சம் பெறுவாய் திண்ணம். ஒப்பில்லா பாக்கியங்கள் பூசையாலே, ஓயாத தவசிந்தையில் பெற்று விட்டாய் புண்ணியங்கள் பலவிதம். நெறியான தவத்தின் வழி பூசையாலே நிலையான அனுபவங்கள் பலதும் பெருகும். பெருகிடும் தான் ஞான வழி சூட்சும உண்மை. மகத்துவங்கள் பொருந்தி உள்ள சித்தன் நீ என்பேன். மகத்துவத்தை நீ உணர மாட்டாய் இப்போது. இப்போதும் உலகு உனக்குப் புரியாது தான். இருக்குதப்பா மாற்றம் பல பின்னே உனக்கு.

10.2.2007

பொறுப்பான குருவை நீ தேர்ந்து எடுத்தாய். புவனத்தில் சமாதி நிலை கண்டது உண்மை. பற்று கொண்டார் சுப்பிரமணியம் உன்னிடம் தான். நன்றான தீட்சையும் உபதேசம் இனி நலமான கல்லாறு சித்தர் வழி உண்டு. வையகத்தில் பலன் இருக்கிறது பூஜைக்குத் தான். முனை திறக்கப் பூஜை பல வழிபாடும் தியானமும் செய்வாய் நன்றாய். முனை திறக்கும் சூழ் ஆண்டு பின்னே உனக்கு (10.2.2010). நலமுடன் ஞானத்தைப் பூர்த்தி கண்டு நானிலத்தில் கரையேற வாய்ப்பு முழுமை உண்டு, முற்றே.

17.2.2007

முக்தியை நோக்கி ஆராய்ச்சி பயிற்சி முறையாக வழிபாடும் பூஜை பல்வாராய் செய்திடுவாய் பிழையும் ஏது. பக்தியில் தெரிகிறது அப்பா முக்தி பூர்த்தி என்று. விளையாட்டு சித்தனைப் போல் இருப்பாய் இப்போது. உன்னுள் உள்ள சக்தி எங்களுக்கு மட்டும் உயர்வாகத் தெரிந்திருக்க அதனால் சொன்னோம் நீ ஒரு தவயோகி. மாந்தர் வியக்க வெளிப்படும் தான் உன் ஞானம் ஒருநாள். ஞானத்தால் அறிவின் வழி தேர்ச்சி தன்னால் நானிலத்தில் நூல் எழுத யோகம் உண்டு. நித்திரை கூட உனக்குத் தவமாய் ஆகும். இருள் ஏது பகல் ஏது உன் சிந்தைக்கு. இரு நேரமும் தவ சிந்தை ஞானத்தோடு பூசையில் இருப்பாய் மகிழ்ச்சி. அதிசயத்தைக் கண்டு கண்டு வியக்கும் வண்ணம் ஒவ்வொரு கடிகையிலும் அற்புதம் உண்டு.

24.2.2007 by Kagabujandar

ஊமைபோல் இருந்து தான் உயர் ஞானம் பெற்று உயர்ந்து உள்ளாய். எல்லை இல்லா சூட்சுமங்கள் அறிந்து நீயும் இவ்வுலகில் அமைதி காப்பாய் முக்தி காண வேண்டி. தவத்தையும் ஞானத்தையும் பார். மகானாக விளங்கி நிற்பாய்.

4.3.2007

அப்பனே எங்களுக்குப் பூசை நீயும் அற்புதமாய் செய்கிறாயே அணுஅணுவாய் களித்தேன். ஊழ் எல்லாம் தவத்தாலே போக்கி நீயும் சுமையெல்லாம் படிப் படியாய் பூசையாலே குறைத்து சுகம் காண்பாய் இக்கணத்தில். தப்பாது தவம் ஞானம் மேன்மேலும் உயர .....

சுந்தரமாய் தேகத் திடம் ஆரோக்கியங்கள் சுருதியாய் தவாத் தேகம் அமையும் தானே. நலிவில்லை ஞானமும் தவமும் தன்னில். தன் நிலையில் மாற்றம் பல மாந்தர் அறிந்து தான் அவர்கள் தவ வாழ்வை பின் பற்றும் வண்ணம் உன் தவமும் சித்திக்கும் உண்மை.

10.3.2007 by Bhrigu Munivar

விண்ணமிலா தவஞானம் பெற்று உள்ளாய். கலக்கமில்லா மேன்மேலும் ஞானம் உயர .......

ஒப்பிலா ஞான கனல் தேகம் தன்னில் உருவாகும் தவஞான பயிற்சி தன்னால். தான் உனக்குள் உட்டினங்கள் அதிகமாகும் தான். அதனால் சாத்வீக உணவே சிறக்கும். தனக்கும் தான் மகாமந்திரம் அருட்பெருஞ்ஜோதியைத் தவறாது ஓதி வணங்கி வர படி படி தேக வழி மாற்றம் ஏற்படும். பொறுப்புடன் பூசைகளும் செய்வாய் இப்போது. வினையெல்லாம் பூசையில் போக்கி தவத்திற்கே உகந்த பிள்ளை ஞானம் பெற ஜனித்த பிள்ளை நீ.

23.4.2007 by Kagabujandar

எங்களைப் பற்றிய சிந்தை மட்டும் சிறு சிறு நொடி போதும் ஓடுகிறது அப்பா. தான் நீயும் எங்களோடு உரையாடுகின்றாய். தவசிந்தை தர்மத்தால் இது புண்ணியம் பெற்றாய். 

8.5.2007 by Tirumular

மைந்தனே சித்தர்களின் ஆலோசனையோடு மகத்துவமாய் பூசைகளும் செய்வாய் நன்றாய்.

12.6.2007

மாசிலா சித்தர்களைக் குடியில் அழைத்து மகத்துவமாய் வாழ வைப்பாய் மைந்தா. மைந்தனே உன் குடும்பம் எங்கள் குடும்பம் மகான் எல்லாம் வாழுகின்ற சித்தர் குடும்பம். சுந்தர முருகனே வாழும் குடி. குடும்பத்தில் நாங்கள் எல்லாம் குடி இருக்கக் குவலயத்தில் ஆசிரம வாழ்வு வேண்டாம் உனக்கு. இல்லத்திலிருந்து நீயும் யோகமெல்லாம் அனுபவிப்பாய் மைந்தா. யோகத்தின் சக்தியை நாங்கள் அறிந்து யோகிகளை இல்லத்திற்கு வரவழைத்தோம் நாங்கள். நாங்களும் இருக்கின்ற குடி தன்னில் நாளும் நாளும் சித்தர்கள் வாசம் மிகுமே. மகிழ்ச்சியும் அளவில்லா எங்களுக்கும் உண்டு. அதன் காரணம் எங்களோடு வருவாய் என்றே. பக்குவங்கள் முறையாக ஆசான் வழியே பலகோடி சூட்சுமங்கள் பெற்று விட்டாய். பெற்ற உண்மை பிறகு உனக்கே தெரிய வரும். தான் பெரும் ஞானம் நீயும் சேர்த்து உள்ளாய் மைந்தா. முக்திக்கு இவை எல்லாம் உதவும் மைந்தா.

24.7.2007

மகத்துவங்கள் பெறுவதற்கே ஜனித்தாய் அப்பா. சூக்குமங்கள் பலவிதமாக விளம்ப நல் ரகசியமும் குரு நூல் வழியே கண்டு கொண்டாய். திட வாழ்வு சுப்ரமணியன் குரு ஆசியாலே. அற்புதங்கள் நிகழும் குடியில்.

23.9.2007 by Tirumular

மாசிலா மகத்துவமாய் பூஜை தன்னை மகன் நீயும் செய்வதனால் மனம் குளிர்ந்தோம் நாங்கள். நாங்கள் எல்லாம் குடி கொண்டோம் உந்தன் இல்லில். வினை அறிந்து வாழ்வை நல் வகுத்து வாழ்வாய். இறவா வரம் பீறவா வரம் உண்டு முற்றே.

13.10.2007

குவலயத்தில் நாங்கள் எல்லாம் ஒளியாய் உள்ளோம். உள்ளதொரு உண்மையை அறிந்து பூஜை உலகத்தில் செய்வதால் தெய்வமாவாய். உடம்பு ஆன்மா ஜோதி தீபம். காலை நீ வைத்து வணங்க மாற்றம் உண்டு. வாசி தன்னை நிலை நிறுத்தி உண்டாகும் குண்டலினி சக்தி உனக்கு உயர்ந்ததைக் கண்டு நாங்கள் வியந்தோம் அப்பா. மண்ணுலகில் பிறவிக்கு அர்த்தம் உண்டு. அர்த்தம் அதைக் கண்டிடவே ஆராய்ச்சிகள் அனுமாரா செய்திடுவாய் யாவும் உண்மை.

23.11 2007

தான் உனக்குள் பல உண்மை ரகசியம் தன்னை தரணியிலே சித்தர் நாங்கள் புதைத்து உள்ளோம். அன்றாடம் ஞானத்தைப் பெற்று அஞ்ஞானம் முழுமையாக விலகக் காண்பாய். அனந்த கண்ணீர் பெருக்கெடுத்து ஓட அன்பின் வழி ஞானத்தைப் புகட்டி உள்ளோம். கள்ளமில்லா நாள் நாளும் சித்தர் பூசை, குருமார்கள் நாமம் அதைச் சொல்லிச் சொல்லி நீ குருவாக அமர்ந்து உள்ளாய் ஜெகத்திலே எங்களுக்கு நிகராகத் தான்.

27.12.2007

அறியும் நாள் சித்தர் நாங்கள் கல்லாறு தன்னில் அமர்ந்து அருள்வாக்கு சொல்வோம் இப்போது. விண் உலகம் திறக்கும் போல் உந்தன் பூஜை அமைந்திடுமே அறிந்துதான் கும்பன் சொல்வேன். ஆண் நீயும் செய்கின்ற பூசை தன்னில் சுமை இல்ல ஆண்டவனும் செவி சாய்த்துக் கேட்பான். வண்ணமுற இல்லமதில் மந்திரம் பல ஓதி வலுத்த தான் சக்தி பல மிகுந்தது இல்லில்.