Friday 23 February 2024

LESSONS ON DEVOTION, THE DISCIPLE, THE FAMILY & THE GURU

பக்தி. 

Devotion

மார்க்கம், மார்க்கம் என்கிறீர்கள். 

You speak about the path, way and Margam again and again.

உண்மையைக் கூறும் போது, எவரும் வருவதில்லை. 

When the Truth is spoken, no one comes (to listen)

என்ன பக்தர்கள்? 

What (kind of) devotees are these?

பக்தி என்பது அது அல்லவா.. கற்பூரம். 

(Pointing us to a devotee) Bakthi is how he portrays. (He who is a true devotee is like ) a camphor (that lights up easily).


மாணவன். 

The Disciple

மாணவன் என்பவன் கற்பூரம் போல் இருக்க வேண்டும். 

A disciple has to be like a camphor.

"இதோ வருகிறேன்." 

"Here I come."

அவன் மாணவன்.

He then is a disciple.

"இதோ வருகிறேன்."

"Here I come."

கூறியவுடன் வருகிறான் அல்லவா....

The one who comes that instant ..

அவன் கற்பூரம். 

..is camphor.

குரு பேச்சுக்கு எதிர் பேச்சு இருக்க கூடாது.

He should not dispute the guru's speech.

மறு பேச்சு இல்லை. 

No second thoughts.

காரணம் கூற கூடாது. 

He gives no reason.

இல்லை குரு, பார்க்கிறேன், யோசிக்கிறேன்...

"No guru, I shall see, I shall think over it"....

நீ மாணவன் அல்ல. 

You are not a disciple then.

வெறும் வாழை தண்டு. 

Just a banana trunk.

"அவகாசம் கொடுங்கள்." 

"Give me time, please."

அவன் கரி கட்டை. 

He is charcoal.

ஊதி வரவைத்து விடலாம்.

We can blow (as in fanning the flame) and bring him (to us).

இவள் போல் கேள்வி எழுப்புங்கள். 

(Pointing to a devotee) Ask questions like she does.

சந்தேகம் கேட்பதில் இவள் அழகாக தன்னடக்கமாக கேட்டால். 

She asks questions beautifully and humbly. 

"இதை நான் கேட்க வேண்டும்."

"I have to ask something."

"நீண்ட நாளாக அறியவில்லை."

"I have not known it for a long time."

இதுவல்லவா தன்னடக்கம். 

Isn't this humbleness. 

பணிவு உண்டு. 

There is humility.

அதற்கு என்று முறை உண்டு. 

There is a manner for even questioning. 

கதவை திறங்கள். 

Open your doors (to your hearts).

உங்களையும் பாருங்கள். 

Look at yourself. 

அது போல் இருக்கனும். 

Be like her.

என்பாள் அன்பும் பக்தி. அப்படி இருக்க வேண்டும்.

She has love and devotion towards me. That is how it should be.

என்னிடம் கேட்பாள். 

She would ask me.

"நான் இதை இடுகிறேன்." 

"I am adorning this on you."

"நீ அணி" என்று கூறமாட்டாள்.

"I shall not force it on you."

முன்பு சொல்வாள், "உங்களுக்கு இது பிடித்திருக்கிறதா? எனக்கு தெரியவில்லை". 

She would say back then, "I do not know if you like this?"

"நீங்களும் நேரில் வரமாட்டிர்."

"You never come before me."

"பிழையாக இருந்தால் மன்னித்து விடுங்கள்."

"If it is wrong, please forgive me."

"எடுத்து விடுகிறேன்."

"I will remove (discard) them."

"இந்த உணவு பிடித்திருக்க?"

"Do you like this food?"

"நான் அறியவில்லை." 

"I do not know."

"உண்ணுங்கள்" என்பார்.

She would say, "Please consume it".

உரையாடலாம் இறைவனிடம். 

You can talk to God.

நாங்கள் நன்றாக கேட்கிறோம். 

We listen pretty well.

நீங்கள் அன்பு செலுத்தினால் நாங்கள் செலுத்துவோம்.

If you shower love we too shall shower it.


குடும்பம். 

The Family

எனக்கு ஒரு நிமிடம் செலவிட்டால் போதும். 

Spend a minute for me. That is enough.

இல்லறத்தில் அமர்ந்து கொண்டு, அவர் கடமையை சரிவர செய்ய, கொஞ்ச நேரம் வகுத்து கொண்டு, மனதார, அன்பாலே செலுத்தினாலும் அனைத்தும் சரியை. 

Living with the family, carrying out one's responsibilities well, wholeheartedly, and with love, besides giving me some time is indeed Sariyai.

அன்பில்லாத பக்தியும், ஒரு நிலை இல்லாத பக்தியும், ஏற்க கூடியது அல்ல. 

Devotion without love, without a standing, is not acceptable. 

அனைவரின் விருப்பத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

Appease everyone's wishes.

நேரத்தை வகுத்து வைத்துக்கொள். 

Divide your time wisely...

குடும்பம், தொழில், எனக்கு ஒரு நிமிடம். 

..between your family, work, and for me. 

நீ உணவு உண்ணும் பொழுதோ, தொழில் செய்யும் பொழுதோ, அகத்தீசா என்று அன்புடன் கூறினாலே போதும். 

It is sufficient that you call out to me when you eat or work.

மனதை ஒரு நிலை படுத்தி, அன்பு வகித்தாலே போதும். 

Bring your mind to focus and concentrate. Shower love. That is all to it.

அவரவர் விருப்பத்தை பூர்த்தி செய் இல்லறத்தில்....

Stay in the family and take care of everyones needs. 

அனைவரையும் காய படுத்தக்கூடியது பக்தி அல்ல.

Devotion is about not hurting people. 

நான் தம்பதிகளாக உள்ளேன். 

We too are a couple (Agathiyar and Lobama).

உங்களை எப்படி பிரித்திடுவேன்?

How would I separate you?

இது உத்தமம் இல்லையே. 

That would be highly wrong.

இருவரும் ஒன்று இணைந்து தம்பதிகளாகவே வணங்க வேண்டும். 

You should come together as couples into worship.

தம்பதிகளாக பயணிக்க வேண்டும்.

You should travel as couples.

இதுவே சத்தியம்.

This is the truth.

இதோ இவர்கள்.

Here they are.

இதை கண்டு அனைவரும் உணருங்கள்.
Watch them and learn.

இதன் தர்மம், கடைகாலம் வந்த பிறகு இவர்களை போலே வாழ வேண்டும்.
This is the Dharma or Aram. When one is approaching his last days, live like this couple.

அனைவரும் ஒன்றாக இருந்து பழகி, நேரத்தை வகுத்து..
Be as a family, divide your time accordingly.

பக்தி என்பது பிரித்து வைப்பதல்ல.
Devotion does not mean separating couples.

பக்தி என்பது ஆத்மான அன்பு. 

Devotion is love at the level of the soul.

ஒரு நிலை மனது...

One pointedness...

தர்மம் காரியங்கள்...

Dharmam as in charity and service...

தாயும் வந்துள்ளார். 

Ma (Lobamitra) has come too.

இனி இருவரும் ஒன்றாகத்தான் உண்ணுவோம்.

Henceforth we shall dine together.

ஒன்றாகத்தான் இருப்போம். 

We shall be together.

நீங்கள் அனைவரும் இப்படித்தான் இருக்க இயலும். 

Follow us. Live like us.

அதைத்தான் நாங்களும் விரும்புகிறோம். 

That is our wish too.

அதைத்தான் நாங்களும் ஏற்போம். 

That is what we expect too.

இருந்தாலும் அச்சம் உண்டு அனைவருக்கும். 

But there is anxiousness and fear in all.

அது மனிதனின் இயல்பு.

That is man's nature.

சில சமயம் அனைவருக்கும் மனதில் தயக்கம் உண்டு. 

At times there is hesitation in all of you.

பயம் உண்டு. 

Fear in you.

மனதின், மனித இயல்பு அது. 

That is the mind's nature. Man's nature.

சுபாவம். 

One's nature.

சிறு சிறு தயக்கம். 

Little hesitations. 

பயம். 

Fear.

நடுக்கம். 

Shivers.

அனைத்தும் தெளிவு பெற வேண்டும். 

All these need to be cleared.

மனித சிந்தனை அப்பால் பட்டது. 

Man's thoughts (mind) are beyond imagination. 

சித்தனை வழிபட்டால் பித்தனாய் ஆகமாடிர். 

You are not mad to worship a Siddha.

ஞானம்  பெறுவீர். 

 You shall gain divine and spiritual wisdom or Gnanam.

யாரும் வனத்திற்கு செல்ல வேண்டாம். 

 No one needs to go to the jungles (to meditate).

இருந்த இடத்திலே அனைத்தையும் காணலாம். 

You can see all that is to see by merely sitting where you are.

இக்காலத்தில் வனத்தில் போய் அமர இயலாது.

You do not need to stay in the forest in these times.

வனத்திற்கு செல்ல வேண்டாம்.

No need to go into the forest.

எங்கும் செல்ல வேண்டாம். 

There is no need to go places.

இல்லறத்திலே. 

It can happen at home (with your family)

இதுதான் உத்தமம். 

This is the best option.

இதைத்தான் யாம் விரும்புகிறோம். 

This is what we desire (for you).

ஆனால் மனிதனின் பார்வை அப்படி அல்ல. 

But man's preception is otherwise. 

சித்தன் என்றால் நீண்ட ஜடா முடி.

A Siddha has to have long tresses.

காஷாயம். 

Clad in saffron clothing.

தனித்து வாழ வேண்டும். 

Keeps to himself.

நிலை அப்படி என்றால் அனைவரும் என்ன ஆவது? 

If that is the case what shall happen to all out there?

எப்படி நல்ல தலைமுறை உருவாவது? 

How is a good generation to evolve and come about?

அனைத்துள்ளும் இறைவன் உள்ளான். 

God is in all.

ஞான கதவுகள் திறந்த பின்னர் யாவரும் உணர்வார்.

Once the doors to Gnanam are opened all shall realize this.

அனைவரும் பயிற்சியை விடாமல் செய்து கொண்டே இருங்கள். 

Do not leave your practices (Vaasi and Pranayama)

ஏதேனும் சந்தேகம் உண்டா?

Do you have any doubts?

நன்றாக சிந்தித்து ஒரு நாள் கேள்.

Ponder over it and ask another day.


குரு. 

The Guru

குருமார்களே தடுமாறுகிறார்கள். 

Even Gurus falther and stumble.

ஞானமே அளிப்பதில்லை. 

They do not transfer wisdom or Gnanam.

ஞானம் அளிக்க மறுக்கிறார்கள்.

They refuse to share their wisdom or Gnanam.

நீங்கள் எம்மாத்திரம்? 

What am I to say about you?

அதனால் தான் கண்டிப்பாக நடந்து கொள்கிறேன் சில சமயம். 

That is the reason I have to be harsh (towards them).

ஒரு குரு ஸ்தானத்தில் உள்ளோர் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும். 

One who is a guru must show a good example to others.

நாம் பிழை செய்யும் முன் சிந்திக்க வேண்டும். 

He needs to think before he makes a false move.

தவயோகி போல் இப்போது யாரும் இல்லை. 

There is no one alike Tavayogi (Thangarasan Adigal)

அவனுக்கு பிறகு யாரும் இல்லை. 

There is no one after him.

கேட்டவுடன் கொடுக்கும் போலி சாமியார்கள் தான் இவர்களுக்கு வேண்டும். 

They want false gurus who give them all that they ask for.

ஆம், கையை வைத்தவுடன் தங்கம், வைரம், வைடூரியம், மந்திரம், பணம்.....

Yes. When they extend their hands, gold, diamonds, cat's eye, mantras, money.... (appear)

கேட்டால் நாம் பைத்தியம். 

When we question these, we are labelled mad.

சிலபேர் சுயநலத்திற்கு பயன் படுத்துகிறார்கள்.

Some use it for their own agenda. 

இது நடக்க வேண்டும். 

This has to happen.

அது நடக்க வேண்டும். 

That has to happen.

அனைவருக்கும் இறைவன் புத்தி எதற்கு கொடுத்தான்? 

Why did God give man Buddhi or intelligence to think wisely and differentiate?

சிந்தியும். 

Think.

கதவை திறங்கள். 

Open the doors (to your hearts).

ஞானத்தை அளியுங்கள்.

Pass on the wisdom or Gnanam (to others).

மற்றவர்களுக்கு  ஞானம் பயிலுங்கள். 

And sharing one's wisdom or Gnanam (gained from experiences).

உன்னுள் அடக்கிவைத்து கொள்ளாதே. 

Do not keep it within you.

அது வீண் போகி விடும்.

You shall lose it eventually.

விடாமல் பயற்சி செய்யுங்கள்.

Do not let go of your practice (Vaasi or Pranayama)

சுருக்கமாக கூறிவிட்டேன். 

I have said it briefly. 

பிறகு நீ விரிவாக கூறு. 

You elaborate on it later.