Thursday, 22 February 2024

A LESSON IN UDAL, UYIR & ATMA

ஒரு ஆன்மா எப்போது உடலில் புகுத்தப்படுகிறது ?

When is an Atma inserted into the body?

கரு உருவாகும் பொழுது. 

At fertilization. 

ஆன்மா இருந்தால் தானே கரு வரும். 

Atma comes to determine the blastocyst.

பிண்டம் மட்டும் எப்படி வரும்?

How can the fetus come about on its own?

இந்த ஆன்மா இதற்கு முன் செய்த கர்ம தானே....

The Atma comes as a result of the karma.

அதன் கர்மதால் அது பிண்டம் எடுக்கிறது. 

A fetus is a result of its karma.

அதற்கேற்ற பிண்டம் ....  அந்த ஆன்மா  வருகிறது. 

The Atma delivers the fetus accordingly.

கர்மத்திற்கு ஏற்ப உடல். 

It takes a body according to its karma.

புரிந்தது? 

Do you understand?

இதையெல்லாம் விதிக்கப்பட்டது. 

All this is fated.

இவர் இன்னார் வயிற்று  தனிலே... எப்போது ஜனித்து அருள வேண்டும்.... 

To whom one is born and when..... 

அந்த பிண்டத்தை கலைப்பது பாவம் தானே? 

So it is wrong to abort, right?

ஆன்மா உள்ளதினால் தானே பாவம். 

Since there is the Atma in it (right?)

ஆன்மா உள்ளது தானே அதில்? 

There is the Atma in it (right?)

தெளிவு அடைந்தாயா? 

Are you clear now?

அதனால் தான் ஒரு முட்டை கருவை உண்டாலும் பாவம் என்கிறார்கள்.

That is the reason, generally speaking, it is a sin to consume an egg.

பிண்டம் அந்த முட்டை தானே.

The egg is akin to the fetus.

அன்று உடல், உயிர், ஆன்மா, என்று சொன்னிங்களே.... 

Dad, you did clarify to us about the body or Udal, breath or Uyir, and soul or Atma back then...

அப்போது அந்த ஆன்மா தான் பிண்டம் உருவாவதற்குக் காரணம்...

Thus the Atma is the reason for the fetus to take shape... (right?)

அப்போது அந்த சுவாசம் எப்போது உடம்பிற்குள் செலுத்தப்படுகிறது?

So when does the breath come within? 

அந்த கரு வளர்ச்சி அடைந்த பின்.

When the blastocyst takes shape.

ஒரு குறிப்பிட்ட காலம்?

At a certain time?

ஆம். 

Yes. 

சுவாசம், பூரணம், உயிர். 

Swasam, Puranam, Uyir.

ஏன், அன்று இதைப் பற்றிக் கூறினேன் தானே? 

Why, I did mention this back then, right?

இது இல்லை என்றால் அனைத்தும் இல்லை. 

Nothing exist without it (the breath).

இதன் சுத்திகரிப்பு மிகவும் அவசியம். 

It is important to cleanse the breath (Suddhi).

புரிந்ததா? 

 Do you understand?

வாசி அதை எவ்வளவு அடக்குகிறீர்களோ அவ்வளவு நன்மை.

The less your spend your breath the better. 

அடக்குகிறேன் என்று சொல்லும் போது, கும்பகம் படுத்துவதா?

By controlling (the breath) do you mean Kumbakam?

அளவாக. 

To a certain extent, (yes).

உனக்கு எது சரியென்று படுகிறதோ. 

You shall know your limit.

அளவாக. 

To a limit.

நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். 

You decide.

சில சமயம் நான் உன்னுள் கட்டுப்படுத்துகிறேன். நீ அறிவாய் அல்லவா?

(He turns to another devotee and asks) Do you realize that at times I come within to determine and take control?

ஏன் மனதை  கட்டுப்படுத்த சொல்லுகிறேன்? 

Why do I ask you to manage your mind?

அப்போது தான்  உள்ளே சில வேலைகள் செய்ய இயலும். 

Only then can we work inside you.

ரகசியம் கூறிவிட்டேன். 

(Oops! )I have let out a secret. 

மனதை ஏன் ஒருநிலைப்படுத்த சொல்கிறேன்? 

Why do I ask that you stay focus?

இறைவன் பேசுவான் உன்னுடன். 

God shall speak to you.

ஞானம் அளிப்பான். 

He shall make you wise.

குழப்பம் இல்லாமல் இருக்கும் பொழுது, இறைவனிடம் பேசுவீர்கள். 

You shall speak to God in these moments of clarity.

யோகானந்தர் விரிவாக கூறுவான். 

(Paramahansa) Yogananda has spoken in detail (regarding this).

ஏன் சில பேர் மௌனத்தில் உறைகிறார்கள்? 

Why do some settle in silence?

இறைவனிடம் பேச. 

To talk to God.

ஏன் அதிகம்  பேச கூடாது?

Why should you not talk much?

பேசும் போது மூச்சை வீண் செய்கிறீர்கள். 

When you speak you spend your breath (the count).

லட்ச வார்த்தைகள் போகிறது. 

100,000 words are spoken...

ஆனால்  குரு நாமம் சொல்ல முடியவில்லை. 

But alas one does not spell God's name.

உரையாடலாம் இறைவனிடம். 

One can converse with God.

நாங்கள் நன்றாக கேட்கிறோம்.

We listen well.

அதிக ஆழமான சிந்தனையோ? 

I see you are in deep thought.

எதை எப்படி எழுதுவது என்று? 

Your thoughts are on how to bring all these to writing, right?

நீ கவனம் செலுத்து. 

You pay attention.

அதை  எழுதுவோம், உன் உள்ளே. 

We shall write, in you.

நீ அல்ல. 

You are NOT.

இது வெறும் கருவியே - இந்த உடல். 

This body is just but a tool.

 நீ எழுதுவதில்லை. 

 You are not writing the blog.

நான் உன்னில் புகுந்து எழுதுவது. 

I shall write through you.

கூறிவிட்டேன். 

I have briefly said it.

கூறி விடு நாளை.

You let the rest know tomorrow.

இங்கே ஆரம்பம். 

It all began here (Agathiyar Vanam Malaysia AVM).

இங்கே முடிவு. 

It shall end here.

இது தெளிவு பெற வேண்டிய இடம். 

Here is where it is clarified. 

இங்கே தொடக்கம். 

Here it all started.

இங்கே முடிவு. 

Here it shall end too.

இங்கே தெளிவு பெறுவீர். 

You shall get clarity here.