வேடிக்கையாக உள்ளது மனித வாழ்க்கையைக் கண்டால்.
Man's life amuses me.
அர்த்தமில்லாத ஒரு வாழ்க்கை.
Living aimlessly.
எதற்கு இந்த போலி வாழ்க்கை.
Why this guise?
எதற்கு போலியான வாழ்க்கை?
Why a dubious life?
மனிதனுக்கு சன்னியாசம் என்றால் சந்நியாசி போல் வனத்துக்குச் செல்ல வேண்டும்.
Speak about Sanyasam, one head for the jungles.
ஆசிரமம் திறக்க வேண்டும்.
One opens an ashram.
அவர்கள் நோய்களை நாம் குணப்படுத்த வேண்டும்.
I have to come to heal them.
அவர்களுக்கு பொன், பொருள் தர வேண்டும்.
I have to give them riches.
அவர் கேட்டதை எல்லாம் தர வேண்டும்.
I have to give all that they ask.
நான் சித்தி செய்ய வேண்டும்.
I have to carry out Siddhis.
இது குழந்தை தானமாக இல்லை?
Isn't this childish?
ஆசிரமம் எதற்கு?
Why the need for an ashram?
உங்கள் இல்லத்தையே ஆசிரமமாக ஆக்கலாமே?
You can turn your home into an ashram.
ஒவ்வொரு இல்லத்திலும் ஒரு ஆத்மா ஞானம் பெற்று இருந்தால் நம் பிரவேசிப்போம்.
We will come and walk each home if at least a soul in each home attains Gnanam.
ஒவ்வொரு இல்லத்திலும் ஒரு அகத்தியன் காணலாம்.
You shall see an Agathiyan in each home then.
அதற்கு நீங்கள் தயாராகிவிட்டீர்களா?
Are you ready for that?
ஆசிரமங்கள் எதற்கு? ... கூச்சல்.
Why ashrams? Only noise (chatter).
அவர் அவர் இல்லம் ஆசிரமம் ஆகட்டும்.
Let each home become an ashram.
உனக்கு ஏற்ற நேரம்.
In your own time.
நீ எப்பொழுது ஆனாலும் தியானம் செய்யலாம்.
You can do Dyanam whenever you please.
நீ உண்மையாக இருந்தாலே போதும்.
It is enough that you are truthful to yourself.
இதுதான் உண்மை.
This is the truth.
இதுதான் சத்தியம்.
This is a promise.
சித்தி செய்தால் தெரியும் அல்லவா என்னாகும் என்று?
பிறக்க இருக்கும் ஆன்மாவின் உடலை எண்ணி அழுகிறார்கள்.
You do know what happens if one does Siddhis, right?
சித்தி செய்தால் உனது தவ வலிமை குறையும்.
Your tapas will reduce in its strength.
தேவை இல்லாமல் சித்தியை பயன்படுத்த கூடாது.
Do not use Siddhis unnecessarily.
நாங்கள் பயன்படுத்துவது உலக நன்மைக்காக.
We use it for the good of the world.
நீங்கள் எதற்கு?
Why the need for you?
வேடிக்கை காட்டி பணம் சம்பாதிப்பதற்கு.
To put on a show and earn riches.
அதை செய்யாதே. அதில் மயங்கி விடுவீர்.
Do not do it. You shall be hooked to it.
ஆபத்தானது. அதுவே செருக்கு. அழிவுக்குக் கொண்டு செல்லும்.
It is dangerous. It shall lead to one's downfall.
ஏற்றுக் கொள்ள முடிகிறதா என் தர்மத்தை?
Can't you (the people) accept my Dharma?
ஒரு ஆத்மா மீண்டும் பிறவி எடுக்கும்.
A soul will take on another birth (and body).
பிறக்க இருக்கும் ஆன்மாவின் உடலை எண்ணி அழுகிறார்கள்.
Why cry over the body?
ஜனனம் எடுத்த அனைவரும் இறந்து தான் ஆக வேண்டும்.
All that takes birth shall cease to live one day.
நான் உயிர் தருகிறேன்.
(Say) I give live.
அந்த ஆன்மாவால் என்ன பயன்?
Of what use is this soul then...
அவர்கள் உடலுக்கும் கடினம். வயதாகிவிட்டது.
It would be a burden to the body. It has aged.
தாய் தந்தைக்கு வயது ஆகிவிட்டது.
Your parents have aged.
நான் என்ன செய்ய முடியும்?
What can I do?
குழந்தை என்றால் சொல்லலாம்.
If it is a child, we can consider it.
வாழப் போகும் உயிர்.
It has much ahead in life.
நியாயமே இல்லையே.
It is not fair (to blame Agathiyan)
நானும் மனைவியுடன் உள்ளேன்.
I am with my spouse too.
எப்படிப் பிரித்து எடுப்பேன்?
How can I separate you?
என்ன இது வேடிக்கையாக உள்ளது?
It is simply ridiculous.
நோய் வேண்டாம் என்றால் பயிற்சி போடு. வாசியைக் கட்டுப் படுத்து.
If you do not want illness put in practice. Tackle your breath.
யோகம் செய். உணவு முறைகளை பின் பற்று.
Do Yoga. Take care of your diet.
நீதான் செய்ய வேண்டும்.
You are the one who has to do it.
நானா உன்னுள் புகுந்து அனைத்தையும் செய்ய முடியும்?
Am I to come within you and do it?
இனி நாங்கள் என்ன செய்ய வேண்டும் சாமி ?
What are we to do now Dad?
நீங்கள் இப்படியே இருங்கள்.
You just be yourself.
அவர் அவர் விருப்பம் போல் இருக்கட்டும்.
Let others be in their places.
நீங்கள் உங்கள் விருப்பம் போல் இருங்கள்.
You be in your place.
மனதை ஒரு நிலைப்படுத்தினால் எதுவும் தேவை இல்லை.
Once the mind is tackled, nothing else matters.
அனைவருக்கும் சுதந்திரம் வேண்டும்.
Everybody wants freedom.
இதற்கு தானே பிறவி எடுக்கிறோம்.
That is the reason for birth, right?
அனைத்தையும் இரசிப்பதற்கு, ருசிப்பதற்கு.
To cherish everything, right?
பின்னர் நாம் உள்ளே உணர்வு பெற்று, ஞானம் பெற்று, விட்டு விடுகிறோம்.
Then we gain the experiences, become wiser, and leave it all behind.
யார் தான் பிழை செய்யவில்லை?
Who doesn't make a mistake?
பிழையிலிருந்து சரிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
Learn from mistakes.
பின் நோக்கிச் செல்லக் கூடாது.
Do not repeat them.
நாம் வற்புறுத்தினால் பிறகு நாம் வெறுப்பைக் காண இயலும்.
If forced it would only lead to irritation.
காற்றைக் கட்டுப்படுத்த முடியுமா?
Can one stop the wind?
அதன் விருப்பம் போல அது இருக்கும்?
It blows to its liking.
ரசிக்க வேண்டும் ஒவ்வொரு வினாடியும், நொடியையும்.
Learn to cherish each moment.
அது தான் வாழ்க்கை.
That is living.
அதில் பாடம், படிப்பினை அறிய வேண்டும்.
There is experience and learning in it.
10 நிமித்தமாக இருந்தாலும் போதும், மனதை ஒரு நிலைப் படுத்தி, அன்பு செலுத்தி, ரசித்து பூஜை செய்ய வேண்டும்.
Even if it is just for 10 minutes learn to become focused, loving, and enjoy the puja.
அந்த காலத்தில் அது வேறு.
It was different in the past.
அவர்கள் காலத்துக்கு ஏற்ப செய்தார்கள்.
They did this according to their times.
இப்பொழுது வேறு.
Now it is different.
நாயன்மார்களின் கதைகளைப் படியுங்களேன்.
Read the stories of the Nayanmars.
இனிமையாக இருக்கும். எளிமையாக இருக்கும்.
It is both sweet and simple.
காட்டிற்குச் செல்ல வில்லை.
They did not run into the jungles.
தானம் செய்து நிற்பார்கள். சிறப்புகளைப் பாடி நிற்பார்கள்.
They did charity. They sang the praise (of God).
அதை இப்பொழுது கொண்டு வரலாமே.
This can be brought about now.
இது இப்போது நன்றாக ஒத்துப்போகும்.
It will be very relevant now.
புரிந்ததா?
Understand?
நீங்கள் ராமர் காலத்திற்குச் செல்ல வேண்டாம்.
You need not go back to the time of Sri Rama.
பெரிய புராணம் இப்பொழுது சரியாக வரும்.
Periya Puranam (a collection of the lives of the 63 Nayanmars) will be appropriate for current times.
புகழைத் தான் பாடினார்கள். கீர்த்தியைத் தானே பாடினார்கள்.
They only sang the praise and powers (of God).
இல்லை தானம் செய்து இருப்பார்கள்.
Or would have done charity.
இல்லையானால் சிவ பூஜை செய்து இருப்பார்கள்.
Or done Siva Puja.
தெளிவு பெற்றாயா?
Are you clear?
மகிழ்ச்சியாக உள்ளாயா?
(Looking towards the wife) Are you happy?
உனக்கு ஆனந்தமா?
(Looking towards me) Is it blissful?
பேரானந்தம்.
(Per Anandham) Extreme Bliss, right?
இன்று உங்களுடன் நேரம் செலவழிக்க தான் வந்தேன்.
I came today (a day ahead on 17 February 2024) just to be with you.