Sunday 17 March 2024

WOMEN'S DAY OF SATSANG

As we wondered how today's Satsang would go and who would attend, it all fell into place beautifully with Agathiyar's touch, blessing, and grace. He brought together both my daughters and Mahin's wife and told me and Mahin to excuse ourselves as he hinted that it was "women's day" today. He said that they shall share their experiences among themselves. At the end of the Satsang, Agathiyar came and he spoke much about gaining experience. He told them to write all their experiences and pass them to me to be posted on this blog. He also had me call another devotee who was at work to contribute her experiences too. 

"Is your journey with your father and, now that you are traveling alone, the same? Is it the same learning with your father and learning alone? Everything that happens in your life is just an experience. See it as experience only. Don't become emotionally attached to it. (Ask yourself) What did the experience teach you? What did you learn? How do you feel about it? What changes are you going to make? If you take care of these questions, worldly life will not affect you. It only affects when you claim them as yours. It doesn't matter if it's seen as everyone's. Pain and suffering will do you no harm then."

தந்தையோடு நீ சென்ற பயணம், இப்போ நீ தனியாக பணிகிக்கும் போது ஒன்றாக இருக்கிறதா? தந்தையோடு நீ கற்றதும் தனித்து நீ கற்பதும் வேறல்லவா? உங்கள் வாழ்க்கையில் நடப்பவை அனைத்துமே அனுபவம் மட்டுமே. அனுபவமாக மட்டும் பாருங்கள். உணர்வுபுறமாக அதற்கு அடிமை ஆகவேண்டாம். அனுபவம் உங்களுக்கு என்ன தந்தது? என்ன கற்று கொண்டீர்கள்? அதில் இருந்து என்ன உணர்ந்திர்கள்? என்ன மாற்றம் செய்ய போகிறீர்கள்? இதைமட்டுமே அறிந்துகொண்டு வந்தால் உலக வாழ்கை உங்களுக்கு எந்த பாதிப்பும் தராது. எனது என்று ஆகும்போது மட்டுமே அது பாதிக்கும். எலோருடையது என்றால் பாதிக்காது. அவர் அவர் பயணத்தை மட்டும் கவனித்து கொண்டு இருந்தால் வலிகளும் வேதனைகளும் உங்களை ஒன்றும் செய்யாது அல்லவா?

"Practice (Breathing and Asanas) regularly to protect yourself. If the body becomes pure, the mind becomes pure. When the mind becomes pure, thinking becomes better. Thinking skills improve with experience. Wisdom will dawn on you as your experience improves. Learn to make time for yourself. Blend in with your practice, when you eat, when you interact with the herbs. Don't do anything just as a duty. It doesn't go anywhere. You will also get no experience. You have to watch your journey. Start noticing it. Apply the wisdom we share in everything at home, with children, in education, in travel, etc. Don't make the mind a garbage bin. Don't keep it (the garbage). No matter how hard you try, worldly life goes on. Focus on your journey and the experience shall come. As happy as you are to see the lotus blooming in the pond, just imagine how it would be like if it unfolded within you? It is buried within you. Post your experiences. If it is in written form, it can be shared with everyone during the session. One month from today, you will share your experiences with Shanmugam in written form and he share them with his readers."

"பயிற்சிகள் தொடர்ந்து உங்களை நீங்கள் காத்துக் கொள்வதற்கு. உடல் தூய்மை பெற்றால் மனம் தூய்மை அடையும். மனம் தூய்மை அடைந்தால் சிந்தனை சிறக்கும். சிந்தனை சிறத்தால் அனுபவம் மேம்படும். அனுபவம் மேம்படும் போது ஞானமே உங்களை தேடி வரும். உங்களுக்கான நேரத்தை செலவிட கற்றுக்கொள்ளுங்கள். பயிற்சி போடும்போதும் சரி, உண்ணும் போதும் சரி, மூலிகைகளோடும் உறவாடும் போது சரி, உணர்வு பூர்வமாக லயித்து போங்கள். கடமைக்கு மட்டும் எதையும் செய்ய வேண்டாம். அது எங்குமே பதியாது. உங்களுக்கு அனுபவம் தராது. உங்கள் பயணத்தை நீங்கள் கவனிக்க வேண்டும். இல்லற வாழ்கை, குழந்தை வாழ்கை, மன வாழ்க்கை, கல்வி பயணம், தொழில் பயணம் எல்லாவற்றிலும் நாங்கள் போதிக்கும் கல்வியை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து விடுங்கள்."

"மனதை ஒரு குப்பை காலமாக்க வேண்டாம். அதனை உங்களுள் பதித்து  கொள்ள வேண்டாம். முயற்சித்தாலும் முயற்சிக்காடாலும் உலக வாழ்க்கை நடந்து கொண்டே தான் இருக்கும். முதலில் உங்கள் பயணத்தை மட்டும் கவனம் செலுத்தி கொண்டு உடல் பயணமும் உயிர் பயணமும் ஒன்றென கலக்கும் போது அனுபவம் கிட்டும். அந்த அனுபவம் குளத்தில் தாமரைகள் விரியும் போது பார்க்கும் உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியோ, அது போல் உங்களுக்குள் விரிந்தால் எப்படி இருக்கும்? உங்களுக்குளே புதைந்து கொண்டு இருக்கு. தட்டி எழுப்புங்கள். இன்று இருந்து ஒரு மாதம் உங்கள் அனுபவங்களை எழுத்து வடிவமாக ஷண்முகமடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அதை அவன் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்வான்." 

Later he tells me "This three (women) shall pass you their experiences in writing in a month's time. You share it with your readers. Henceforth your postings shall be that of each person's journey. Let your readers read them." "இவர்கள் மூவர்களும் இன்றிலிருந்து ஒரு மாதம் கழித்து அவர்களின் எழுத்துக்களை உன்னுடன் பகிர்வார்கள். பகிர்வதை நீ வாசகர்களுடன் பகிர்ந்து விடு. இனி உனது பதிவு, ஒவ்வருடைய பயணமாக இருக்கட்டும். வாசகர்கள் படித்து தெரிந்து கொள்ளட்டும்."