We have come to the end of the two-day Satsang that Agathiyar held with us on 17 and 18th of February 2024 coming through a devotee. To wind up here all some further pertinent points to know and take into consideration as we journey the last phase of the Siddha path that is of Gnanam.
On Karma
மீனின் வாடை போகிறதா?
Does the smell of fish go away?
அதுபோலத்தான் நீ செய்த பாவம்.
So is it with karma.
புண்ணிய நதியில் குளித்தால் போகாது, உன் மனம் மாறும் வரை, உன் மனம் ஏற்கும் வரை.
Even if you were to bathe in the holiest of rivers unless there is a change in you and your mindset and in your acceptance.
இந்த மணம் போகவேண்டும் மென்றால் அந்த மனம் மாறனும்.
If this smell is to go away that mind has to go, right?
ஆம்.
Yes.
On Death
யார் இறந்தாலும் குரு ஆணையிட்டால் வர வேண்டும்.
No matter who has died, if the guru calls for you, you have to be there for him.
ராகவேந்திரா சொந்த மகன் இறந்து விட்டான். உணவைப் படைத்தார். அது அல்லவா பக்தி.
Saint Raghavendra's son died. But he served food. That is Bhakti (devotion).
திருநாவுக்கரசர் சென்ற இடத்தில் பக்தனுடைய மகன் பாம்பு தீண்டி இறந்தான். அவர்கள் உணவு படைத்தார்கள்.
When saint Thirunavukarasar was invited over to have food, the host's son had died, bitten by a snake. But they went ahead and served the saint, (hiding their loss).
ஆம்.
Yes.
ராமதாஸ் அறிவாய் அல்லவா? மகன் இறந்து விட்டான். கோவில் கும்பாபிஷேகம். ஹனுமான் வந்தான் மகனைப் பிறப்பிக்க.
இதுதான் உண்மை.
You know Saint Ramdass right? His son had died during the Kumbabhisegam or consecration of the temple. Hanuman came to give life.
மற்றவர்கள் தேற வில்லை என்று மனம் வருந்தினாயே.
You were sad that others did not qualify too.
இப்போது புரிகிறதா?
Now do you understand?
புரிந்ததா உங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள வேறுபாடு?
Do you see the difference between you and them?
நீ தேறி விட்டாய்.
You have cleared the hurdle.
நிரந்தரம் இல்லாத வாழ்க்கை இது.
This life is impermanent.
ஆன்மா சென்று விட்டது. வெறும் உடலை..அதைப் பிடித்து அழுகிறார்கள். அது இருந்தால் என்ன போனால் என்ன? நீ கண்டு அது விழிக்கப் போவதில்லை. இறை ஆகப் போகிறது 5 பஞ்ச பூதத்திற்கு. அதற்கு மரியாதை செலுத்தி விட்டு வணங்கி விட்டு வந்து விடலாம்.
The Atma leaves. Just the body remains. You hold on to it and cry. What difference will it make if it stays or leaves? You cannot possibly make it arise from death. It is going to return back to its 5 elements. Pay due respects to it and walk away.
On the Disciple
என் மாணவன் என்னைப் போல் இருக்க வேண்டும்.
My student has to be like me.
காலத்தை வீண் செய்யாதீர். அது எனக்குப் பிடிக்காத ஒன்று.
Do not waste time. I do not like that.
போய் உறைக்காதீர். அதுவும் என்னிடம். அது என்னால் ஏற்க முடியாது. கடும் கோபத்திற்கு ஆளாவீர்.
Do not lie. Especially to me. I cannot accept that. You will see the wrath of my anger.
இப்போது புரிகிறதா ஏன் மற்றவர்களிடம் ஒப்படைக்க அஞ்சுகிறேன் என்று?
Do you understand why I am fearful of leaving it (Agathiyar Vanam Malaysia) in the hands of others?
இது சுமை அல்ல. அனைவருக்கும் மார்க்கத்தைக் காட்டுவது. சுமையை இறக்கத் தான் இதைத் திறக்கிறோம். தெளிவு பெற்ற ஆன்மா இன்னொரு ஆன்மாவைத் தெளிவு படுத்துகிறது.
(AVM) This is not a burden. It shows the way to Siddhahood. The reason we are reopening it is to relieve others' burden. A soul that has attained clarity has to help another.
உன் அளவுக்கு யாரும் என்னைப் பொக்கிஷம்போல் பாதுகாக்க இயலாது.
No one else sees me as a treasure apart from you.
அர்த்தம் புரிந்ததா? நீ தலைச்சன் பிள்ளை.
Do you understand its meaning? You are my eldest child.
On Transmigration Into Another Person
நாடியை நம்புகிற அளவுக்கு அகத்தியர் இன்னொரு நபருக்குள் வருவதை நம்ப மறுக்கிறார்.
No one believes Agathiyar can transmigrate into another living person. But they choose to believe Agathiyar speaks in the Nadi.
அதை நாடி நூல் ஆசானிடம் ஒரு நாள் கேட்டு காணொளி போடு. தெளிவு அடைவார்கள். இதை எல்லாம் கேள்வியாக எழுப்பி அவரை விளக்கச் சொல். பிறகு இவர்களுக்குப் புரியும்.
Ask that to the Nadi Nool Aasan and upload the video. They would get some clarity. List all these as questions and ask him. Only then shall they understand.
நீ நாடி நூல் ஆசானிடம் கேட்டால் கூறுவர். அவர் அறிவார் சித்தர்கள் கூடு விட்டு கூடு பாய்வார்கள் என்று.
The Nadi Nool Aasan shall answer these queries. They are aware of the Siddhas transmigrating in living persons.
பிறகு நான் எப்படி உங்களிடம் கலந்து உரையாடுவது?
How else can I hold a conversation with all of you at the same time?
ஒளி வடிவத்தில் நான் வந்து நிற்பேன்.
I can come as Light before you.
அது காண உனக்கு தெம்பு உள்ளதா?
Do you have the strength to see me in this form?
உன் கண்களால் முடியுமா?
Can your eyes withstand this intensity?
அதற்கேற்ற தவ வலிமை உன்னிடம் உள்ளதா?
Can you put in the hours of austerities (or Tavam)?
ஜோதி பிழம்பாக வருவேன்.
I can come as a flame.
அதற்கு நீ பக்குவம் அடைந்தாயா?
But are you ready for it?
சரிதானே நான் கேட்கும் கேள்வி?
Is what I am asking right (justified)?
சித்தர்களை பற்றி நாடி நூல் ஆசானிடம் கேளுங்கள்.
Ask about us Siddhas to the Nadi Nool Aasan.
அவர்கள் தெளிவாக கூறுவார்கள்.
They can elaborate clearly.
சித்தர்கள் வந்து கலந்து உரையாடுவது அனைத்தும் உண்மை.
It is true that Siddhas come to hold talks.
எல்லாரிடமும் இல்லை. ஒரு சில ஆத்மக்களிடமே.
Not to everyone. Only selected souls.
On Gnanam and Deliverance
இங்கே ஞான கதவுகளே திறக்க படும்.
The gateway to Gnanam shall be open here.
முதலில் உங்கள் உள்ள கதவை திரங்கள்.
But first, open up your hearts to me.
நான் ஞானம் அளிக்கிறேன்.
I shall fill it with Gnanam.
குரு என்பவர் சத்சங்கம் செய்ய வேண்டும். அது கடமை. வித்தை கற்றவர் வித்தை போதிக்க வேண்டும்.
The guru has to hold Satsangs. It is his duty. Similarly, masters in art forms have to teach the art.
நீங்கள் சுத்த தேகம் அடைந்தால் ஒவ்வொருவர் உள்ளும் வள்ளல் வருவான். தனியாக ஒரு வள்ளல் வரமாட்டான். ஒவ்வொருவர் உள்ளும் வருவான். கலியில் இறைவன் வருவான். நீ நாடி நூல் ஆசானிடம் காணொளி செய்.
When you attain the Suddha Degam, (or Pure body, rid of impurities of body and mind) Vallal (Ramalinga Adigal) will come into you. Vallal will not take another physical form. He will come within anyone prepared and ready. You get to make the video on the Nadi revelation.
இவை அனைத்தையும் கேள். பிறகு தெளிவு அடைபவர் அடையட்டும்.
Ask for these (in the Nadi). Those who understand shall get clarity.
நாங்கள் வாசம் செய்யும் பொழுது இந்த உடல் சுத்தம் அடைகிறது.
When we come within the body is cleansed.
காலம் பதில் சொல்லும். அவர்களுக்கு ஒரு சிலர் இங்கு வந்து நம்மை அடைந்த பிறகு ஐயோ விட்டு விட்டோமே மார்க்கத்தை என்று வருடப்படுவார்.
(On those who came and left AVM and never returned) Time will make them realize that they have lost an opportunity to travel the path further.
இவர்களுக்கு எல்லாம் போலி சாமியார் தான் வேண்டும்.
(Maybe) They need to meet the false.
கண்ணில்லாதவன் உழைக்கிறான். கால் இல்லாதவன் உழைக்கிறான். என்ன நீ உழைக்க மாட்டாயா? காஷாயம். ஜட முடி. நீ உழைப்பைக் கொடு நான் உதவுகிறேன்.
The blind work for a living. The lame work for a living. What is with you? Can't you work rather than adorning the robes and long tresses? Put in the effort and I shall help you.